கல்வி உரிமை சட்டத்தின் கீழ் பள்ளிகளை பதிவு செய்ய ஜன.19ம் தேதி கடைசி - அதிகாரிகள் தகவல் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, January 15, 2026

கல்வி உரிமை சட்டத்தின் கீழ் பள்ளிகளை பதிவு செய்ய ஜன.19ம் தேதி கடைசி - அதிகாரிகள் தகவல்



Jan. 19th is the last day to register schools under the Right to Education Act - officials inform - கல்வி உரிமை சட்டத்தின் கீழ் பள்ளிகளை பதிவு செய்ய ஜன.19ம் தேதி கடைசி - அதிகாரிகள் தகவல்

கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பள்ளிகளை பதிவு செய்துகொள்வதற் கான செயல்முறை துவங் கியுள்ளதாகவும், வரும் 19ம் தேதி வரை பதிவுகள் நடக் கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கல்வி உரிமைச் சட் டம் (ஆர்டிஇ), காங்கிரஸ் தலைமையிலான ஒன்றிய அரசு சார்பில் கடந்த 2009ம் ஆண்டு இயற்றப்பட்டது. இந்த சட்டம் கடந்த 2010ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வந் தது. ஆர்டிஇ சட்டத்தின் படி 6 முதல் 14 வயது வரை யிலான அனைத்து குழந்தை களுக்கும் கட்டாயக் கல்வி மற்றும் இலவசக் கல்வி வழங்குவது அடிப்படை உரிமையாகும். மேலும் தனி யார் பள்ளிகளில் ஆர்டிஇ சட்டத்தின் கீழ் ஏழை எளிய பின் புலத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு இலவச மாக கல்வி வழங்க இந்த சட்டம் வழிவகுக்கிறது. அதற்கான செலவை சம் பந்தப்பட்ட தனியார் பள் ளிகளுக்கு மாநில அரசுகள் வழங்கும். இந்த சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் இலவச கல்வி பெறுவதற் காக ஏழை எளிய மாணவர் களுக்கு 25 சதவீத இடஒதுக் கீடு வழங்கப்படுகிறது கல்வி உரிமைச் சட்டத்தின் (RTE) கீழ் 25% இடஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கையை மேற்கொள்வதற்கான தனியார் பள்ளிகள், தங்களை இணையதளத்தில் பதிவு செய்து கொள்வதற்கான காலக்கெடு வரும் ஜனவரி 19, 2026 அன்றுடன் நிறைவடைகிறது.

முக்கிய விவரங்கள்:

யார் பதிவு செய்ய வேண்டும்? தமிழகத்திலுள்ள சிறுபான்மையற்ற அனைத்து தனியார் சுயநிதிப் பள்ளிகளும் இந்தச் சட்டத்தின் கீழ் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.

எப்படி பதிவு செய்வது? தகுதியுள்ள பள்ளிகள் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்ககத்தின் தன்னார்வத் தனியார் பள்ளிகள் சேர்க்கை இணையதளத்தில் தங்கள் விவரங்களைப் பதிவேற்ற வேண்டும்.

தேவைப்படும் விவரங்கள்: பள்ளியில் உள்ள மொத்த இடங்கள் மற்றும் RTE சட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட வேண்டிய 25% இடங்களின் எண்ணிக்கை போன்ற விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

நிர்ணயிக்கப்பட்ட தேதிக்குள் பதிவு செய்யாத பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. கூடுதல் தகவல்களுக்கு தமிழக பள்ளிக் கல்வித் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.