Class 12 Private Candidate Hallticket Download
அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை-6
மேல்நிலை முதலாம் ஆண்டு (Arrear) மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள்,
மார்ச்/ஏப்ரல் -2026
தனித் தேர்வர்கள் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை இணையதளம் மூலம்
பதிவிறக்கம் செய்து கொள்ளுதல் தொடர்பான
செய்திக் குறிப்பு
நடைபெறவுள்ள மார்ச்/ஏப்ரல் 2026, மேல்நிலை முதலாமாண்டு (Arrear) மற்றும் இரண்டாமாண்டு பொதுத்தேர்வெழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் (தத்கல் உட்பட) தங்களது தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகளை 23.02.2026 அன்று பிற்பகல் முதல் dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தனித்தேர்வர்கள், dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று முதலில் HALL TICKET" என்ற வாசகத்தினை Click செய்தால் தோன்றும் பக்கத்தில் உள்ள HIGHER SECONDARY FIRST YEAR (Arrear) SECOND YEAR. MARCH/APRIL-2026 PRIVATE CANDIDATE HALL TICKET DOWNLOAD" என்ற வாசகத்தினை Click செய்து தோன்றும் பக்கத்தில் தங்களது விண்ணப்ப எண் (Application Number) மற்றும் பிறந்த தேதியினைப் (Date of Birth). பதிவு செய்து, அவர்களுடைய தேர்வுக் கூட நுழைவுச் சீட்டினைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேல்நிலை முதலாமாண்டு (1 Arrear) மற்றும் இரண்டாமாண்டு (2) பொதுத் தேர்வெழுதவுள்ள தனித்தேர்வர்களுக்கு இரண்டு தேர்வுகளுக்கும் சேர்த்து ஒரே தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு மட்டும் வழங்கப்படும்.
Monday, February 23, 2026
New
Class 11& 12th Private Candidate Hallticket Download - DGE Proceedings
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.