அரசு கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை பள்ளி மேலாண்மைக் குழுவின் (SMC) மூலம் தற்காலிகமாக நிரப்பிட அனுமதி வழங்கி அரசாணை வெளியீடு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, March 6, 2026

அரசு கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை பள்ளி மேலாண்மைக் குழுவின் (SMC) மூலம் தற்காலிகமாக நிரப்பிட அனுமதி வழங்கி அரசாணை வெளியீடு!



Government Order issued allowing temporary filling of vacant teaching posts in government reform schools through School Management Committee (SMC)! - அரசு கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை பள்ளி மேலாண்மைக் குழுவின் (SMC) மூலம் தற்காலிகமாக நிரப்பிட அனுமதி வழங்கி அரசாணை வெளியீடு!

சுருக்கம்

மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலன் அரசு கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை பள்ளி மேலாண்மைக் குழுவின் மூலம் தற்காலிமாக நிரப்பிட அனுமதி மற்றும் நிதி ஒப்பளிப்பு வழங்கி ஆணை வெளியிடப்படுகிறது.

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல(பிந3(1)த்துறை அரசாணை (ப) எண்.05

நாள்: 22.01.2026

விசுவாவசு, தை-08

திருவள்ளுவர் ஆண்டு, 2057 படிக்கப்பட்டது:-

1. அரசாணை நிலை எண்.07, பள்ளிக்கல்வி (பக5(1))த்துறை, நாள் 07.01.2023.

2. ஆணையர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத் துறை, கடித எண்.பி1/4002/2022, நாள்:27.06.2025.

3.திரு. 3. திரு. P. அய்யப்பன், சட்டமன்ற உறுப்பினர், உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதி, அவர்களின் கடிதம் நாள்:25.11.2025.

ஆணை:

*****

மேலே முதலாவதாக படிக்கப்பட்ட அரசாணையில், 2022-2023 ஆம் கல்வி ஆண்டில் தொடக்கக் கல்வித் துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறையில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள், பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் ஆகிய பணியிடங்களை நேரடிநியமனம் / பதவி உயர்வு மூலம் நிரப்பும் வரை பள்ளி மேலாண்மைக் குழு மூலமாக தற்காலிக ஆசிரியர் நியமனம் செய்யப்பட்டதற்கு அனுமதியும், அவ்வாறு நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு கீழ்க்கண்டவாறு மதிப்பூதியம் (Honararium) வழங்கியும் ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

பதவி

முதுகலை ஆசிரியர் மதிப்பூதியம் ரூ.18,000/-

பட்டதாரி ஆசிரியர் ரூ.15,000/-

இடைநிலை ஆசிரியர் ரூ.12,000/-

2. மேலே இரண்டாவதாக படிக்கப்பட்ட கடிதத்தில் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல ஆணையர், பள்ளிக் கல்வித் துறைகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை பள்ளி மேலாண்மைக்குழுவின் மூலம் மதிப்பூதியத்தில் தற்காலிகமாக நிரப்பிட அனுமதி வழங்க ஆணை வெளியிட்டதை போன்றே கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை பள்ளி மேலாண்மை குழுவின் மூலம் தற்காலிகமாக நிரப்பிட அனுமதி வழங்கி இதற்கான செலவினத்திற்கான நிதி ஒப்பளிப்பு செய்யுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

3. மேலே மூன்றாவதாக படிக்கப்பட்ட கடிதத்தில் திரு. P. அய்யப்பன், சட்டமன்ற உறுப்பினர், உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதி. அவர்கள் பள்ளிக்கல்வித்துறை மூலம் நடைபெறும் அனைத்துப் பள்ளிகளுக்கும் ஆசிரியர் பணியிட பற்றாக்குறையை போக்க பள்ளி மேலாண்மைக்குழு மூலம் தற்காலிகமாக ஆசிரியர் தேர்வு செய்து தொகுப்பூதியம் வழங்கப்பட்டு வருகிறது எனவும், அதேபோல் கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் பற்றாக்குறையை போக்க பள்ளி மேலாண்மைக்குழு மூலம் தற்காலிகமாக தேர்வு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

4. மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல ஆணையரின் கருத்துரு மற்றும் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர், திரு.P.அய்யப்பன் அவர்களின் கோரிக்கை ஆகியவற்றை அரசு ஆய்வு செய்து அதனை ஏற்று அரசு கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளில் காலியாக உள்ள கீழ்க்கண்ட 24 முதுகலை ஆசிரியர்கள் மற்றும் 62 பட்டதாரி ஆசிரியர்கள் என மொத்தம் 86 பணியிடங்களை பதவி உயர்வு / ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பணிநாடுநர்களை தேர்வு செய்து நிரப்பப்படும் வரை தமிழ்நாடு அரசு பணியாளர்கள் (பணி நிபந்தனைகள்) சட்டம் 2016 பிரிவு 19-ன் படி முற்றிலும் தற்காலிகமாக கீழ்க்கண்ட நிபந்தனைகளின் அடிப்படையில் பள்ளி மேலாண்மைக் குழுவின் மூலம் நிரப்பிட மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல ஆணையருக்கு அனுமதி வழங்கியும், அவ்வாறு நிரப்பப்படும் பணியிடங்களுக்கு ஒரு ஆண்டுக்கு தொடர் செலவினமாக ரூ.1,63,44,000/- (ரூபாய் ஒரு கோடியே அறுபத்து மூன்று இலட்சத்து நாற்பத்து நான்காயிரம் மட்டும்) ஒப்பளிப்பு செய்தும், 2025-2026 ஆம் ஆண்டிற்கு மூன்று மாதங்களுக்கு (ஜனவரி 2026 முதல் மார்ச் 2026 வரை) செலவினமாக ரூ.40,86,000 (ரூபாய் நாற்பது இலட்சத்து எண்பத்து ஆறாயிரம் மட்டும்) நிதி ஒதுக்கீடு செய்தும் அரசு ஆணையிடுகிறது.

1. முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் (அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளிகள்)

um ib (Subjects) ஆங்கிலம் கணிதம் இயற்பியல்

வேதியியல் தாவரவியல்

விலங்கியல் வணிகவியல் பொருளியல்

காலிப்பணியிடங்கள் நிபந்தனைகள்:

பள்ளி மேலாண்மைக் குழுவின் வாயிலாக அந்தந்த ஊர்களில் பள்ளி அமைந்துள்ள பகுதி மற்றும் அருகாமையில் உள்ள பகுதியில் உள்ள தகுதியுள்ள நபர்களை சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர், உயர்/மேல்நிலைப் பிரிவிற்கான பிரிவிற்கான உதவித் தலைமையாசிரியர் மற்றும் மூத்த பட்டதாரி / முதுகலை பட்டதாரி ஆசிரியர் ஆகியோரை உறுப்பினர்களாக கொண்ட குழு மூலமாக தற்காலிகமாக நிரப்பிக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு தேர்வு செய்யும்போது இது முற்றிலும் தற்காலிகமானது என்பதை நியமனம் செய்யப்படும் நபர்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும்.

ii. தொடர்புடைய இடைநிலை / பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை சம்மந்தப்பட்ட பாடத்திற்கான முழுமையான கல்வித்தகுதி பெற்ற நபர்களை மட்டுமே மேலே தெரிவிக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள் கொண்ட குழுவின் மூலம் எவ்வித புகார்களுக்கும் இடமின்றி பள்ளி மேலாண்மைக் குழுவின் வாயிலாக நிரப்பிக் கொள்ள வேண்டும்.

பள்ளி மேலாண்மை குழு மூலம் நிரப்பப்படும் பணியிடங்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட தகுதிவாய்ந்த பணிநாடுநர் இடைநிலை ஆசிரியர் / பட்டதாரி ஆசிரியர் நிலையில் இருப்பின் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தேர்ச்சி பெற்றவர்களுக்கும், அவ்வாறு இல்லையெனில் இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் பணிபுரியும் தகுதியான தன்னார்வலர்களுக்கும் முன்னுரிமை வழங்கிட வேண்டும். அவ்வாறே முதுகலை ஆசிரியர்கள் நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களுக்கும் அவ்வாறு இல்லையெனில், இல்லம் தேடி கல்வி பணிபுரியும் தகுதிவாய்ந்த தன்னார்வலர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

மேலே பத்தி 4-ல் ஒப்பளிக்கப்பட்ட செலவினம் கீழ்க்காணும் கணக்குத்தலைப்பின் கீழ் பற்று வைக்கப்பட வேண்டும்.

2225-Welfare of Scheduled Castes, Scheduled Tribes and Other Backward Classes and Minorities - 80 General - 101 Welfare of Denotified and Other Nomadic Tribes - State's Expenditure - AE Denotified Community Schools - 333 Payments for Professional and Special Services - 04 Contract Payment (DPC 2225-80-101-AE-33304) 6. மேலே பத்தி 4-இல் ஒப்பளிக்கப்பட்ட செலவினத்தினை மேற்கொள்ள தேவையான கூடுதல் நிதி ரூ.40,86,000/- 2025-2026 நிதி ஆண்டிற்கான இறுதி திருத்த நிதியொதுக்கத்தில் ஒதுக்கீடு செய்யப்படும். இந்நிதியொதுக்கம் செய்ய இருப்பதை எதிர்நோக்கி மேலே பத்தி 4-இல் ஒப்பளிக்கப்பட்ட தொகையினை பெற்று வழங்கிட மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல ஆணையர் அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. மேலும், பத்தி-4ல் ஒப்பளிக்கப்பட்ட செலவினத்தை 2025-2026 ஆம் ஆண்டிற்கான இறுதி திருத்த நிதியொதுக்கத்தில் சேர்ப்பதற்கு உரிய கருத்துருவை தவறாது நிதித் (பி.மி.பி(ம)சி.ந) துறைக்கு அனுப்பி வைக்குமாறு மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல ஆணையர் அவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்.

7. இவ்வாணை நிதித்துறையின் இசைவினை அதன் அலுவல் சார்பற்ற எண்.12389533/நிதி(பி.மி.பி(ம)சி.ந)/2025, நாள்:21.01.2026-இல் பெற்று வெளியிடப்படுகிறது. எண்.2026012280.

இதற்கான கூடுதல் நிதியொதுக்கப் பேரேடு (ஆளுநரின் ஆணைப்படி)

எ.சரவணவேல்ராஜ் அரசு செயலாளர் பெறுநர் ஆணையர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலன், G&GOT GOD OUT- 600 005.

இணை இயக்குநர், கள்ளர் சீரமைப்பு, மதுரை -600020.

மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்கள்

சம்பந்தப்பட்ட சம்பளக் கணக்கு அலுவலர்கள் சம்பந்தப்பட்ட கருவூல அலுவலர்கள்.

நகல்:

மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்

அவர்களின் நேர்முக உதவியாளர், சென்னை-600 009. அரசு செயலாளரின் முதுநிலை தனிச்செயலாளர், பிற்படுத்தப்பட் டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும்

சிறுபான்மையினர் நலத்துறை, சென்னை- 600 009. நிதி (பி, மிபி (ம)சிந)த் துறை, சென்னை -600 009. திரு. P. அய்யப்பன், சட்டமன்ற உறுப்பினர், உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதி,

S.O.R.நகர், 13-வது தெரு, உசிலம்பட்டி அஞ்சல், மதுரை மாவட்டம் -625 532.

இருப்புக் கோப்பு / உபரி நகல்.

// ஆணைப்படி அனுப்பப்படுகிறது//

CLICK HERE TO DOWNLOAD அரசாணை எண்.05 -SMC Teachers Appointment PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.