The government is showing a hint to the protesters! - 'E-mail' letter -
போராட்டக்காரர்களுக்கு கிலுகிலுப்பை காட்டும் அரசு!
ஆர்.சுப்புராமன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
தி.மு.க., அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறை வேற்றக்கோரி, ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு அரசு ஊழியர் சங்கங்களை சேர்ந்தவர்கள், சென்னையில் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சமீபத்தில், பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்தாவிட்டால், காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்திருந்த, ‘ஜாக்டோ - ஜியோ' சங் கத்தினரை, தலைமை செயலகத்திற்கு வர வழைத்து, ‘உறுதியளிக்கப்பட்ட ஓய்வூ திய திட்டம்' என்ற பெயரில், அவர்களை ஏமாற்றி விட்டது, தி.மு.க., அரசு.
'உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட் டம்' என்பதே, தேர்தல் நேரங்களில் கழகம் வழங்கும், 'டுபாக்கூர்' வாக்கு றுதிகளுக்கு நிகரானது என்பதை புரிந்து கொள்ளவில்லை ஜாக்டோ ஜியோ சங்க நிர்வாகிகள் -
இதில், 2021 சட்டசபை தேர்தலின் போது கழகம் அளித்த தேர்தல் வாக்குறுதி, எண் 181 ஐ நிறைவேற்ற கோரி, தொடர்
போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர், ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும்!
அரசியல் கட்சிகள், 'தேர்தல் வாக்குறு திகள்' என்று சொல்வதிலிருந்து தெரிந்து கொள்ள வேண்டாமா... அது, தேர்தலுக் கானதே தவிர, வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் அமல்படுத்துவதற்கான உத்தர வாதம் அல்ல என்பது!
'தேர்தல் வாக்குறுதிகளை நம்பி மோசம் போகாதீர்கள்' என்று, இதைவிட பட்ட வர்த்தனமாக எவராலும் கூற முடியுமா?
போராட்டம் எனும் அழுகையை நிறுத்த, அரசு உங்களுக்கு காட்டும் கிலு கிலுப்பை தான் தேர்தல் வாக்குறுதிகளே தவிர, அது உண்மை அல்ல!
எனவே, ஜாக்டோ - ஜியோவினர் மற் றும் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள் ளவர்கள், அரசியல் கட்சிகள் அளிக்கும் தேர்தல் வாக்குறுதிகளை நம்பி ஏமாறாமல், 2026 சட்டசபை தேர்தலிலாவது, ஆக் கப்பூர்வமான திட்டங்களை முன்னிறுத் துவோருக்கு ஓட்டளித்து வெற்றி பெறச் செய்யுங்கள்; அடுத்த தலைமுறைக்காவது நல்ல ஆட்சி கிடைக்கட்டும்
Thursday, January 15, 2026
New
போராட்டக்காரர்களுக்கு கிலுகிலுப்பை காட்டும் அரசு! - 'இ - மெயில்' கடிதம்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.