தேர்வு இல்லை! தபால் துறையில் 28,000 பணியிடங்கள்... வெளியான சூப்பர் அறிவிப்பு
அஞ்சல் துறை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. தபால் துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கை நிறைய சம்பளம், அரசு ஊழியர்களுக்கான சலுகை என அனைத்து இருக்கும். படித்து முடித்து விட்டு, அரசு பணிக்காக காத்திருப்பவர்கள் அஞ்சல் துறை வேலைப பார்ப்பது நல்ல வாய்ப்பாக இருக்கும். ஆண்டுதோறும் அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பாக பல லட்ச இளைஞர்கள் காத்திருப்பார்கள்.
2026 ஜிடிஎஸ் வேலைவாய்ப்பு
அந்த வகையில், 2026ஆம் ஆண்டுக்கான அஞ்சல் துறை வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகி உள்ளது. அதாவது, கிராம அஞ்சல் பணியாளர்களுக்கான அறிவிப்பு வெளியா உள்ளது. அதாவது, கிளை போஸ்ட் மாஸ்டர் (BPM) உதவிக் கிளை போஸ்ட் மாஸ்டர் (ABPM), அஞ்சல் பணியாளர் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்படும். இந்த பணியிடங்களுக்கான அறிவிப்பு எப்போது வெளியாகும் என பலரும் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் தான் முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்திய அஞ்சல் துறை ஆட்சேர்ப்பு பதிவு அட்டவணையை வெளியிட்டுள்ளது. இதில் கிராம அஞ்சல் பணியிடங்களுக்கு மொத்தம் 28,740 பணியிடங்கள் நிரப்பப்படுவதாக தெரிகிறது. இந்த பணியிடங்களுக்ன அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜனவரி 31ஆம் தேதி வெளியாகும் என கூறப்பட்டுள்ளது. மொத்தம் 28,740 காலிப் பணியிடங்கள்
இந்திய தபால் துறையில் கிராம பணியாளர் பணிக்கு மொத்தம் 28,740 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதில் தமிழகத்தில் மட்டும் 2,009 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. தொடர்ந்து, கர்நாடகாவில் 1,023, ஆந்திராவில் 1,060, கேரளாவில் 1,691, தெலுங்கானாவில் 609, ஒடிசாவில் 1,191, ஹரியானாவில் 270 என மொத்தம் 28,740 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
முக்கிய நாட்கள்
மேலும், இந்த பணியிடங்களுக்கான விண்ணப்ப பதிவு ஜனவரி 31ஆம் தேதி தொடங்கி, பிப்ரவரி 14ஆம் தேதி வரை இருக்கும். மேலும், விண்ணப்ப கட்டணத்தை செலுத்துவதற்கான கடைசி தேதி பிப்ரவரி 16ஆம் தேதியாகும். மேலும், விண்ணப்ப படிவத்தில் திருத்தம் மேற்கொள்ள பிப்ரவரி 18ஆம் தேதி முதல் பிப்ரவரி 19ஆம் தேதிக்குள் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக இந்த பணிக்கான தகுதியுடையவர்களின் பட்டியல் பிப்ரவரி 28ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஜனவரி 31ஆம் தேதி தயாராக இருங்கள். தகுதி, சம்பளம் விவரம்
அஞ்சல் துறையில கிராம பணியாளர்களுக்கான பணிக்கு கல்வித்தகுதியை பொறுத்தவரை 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 10ஆம் வகுப்பில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு உள்ளூர் மொழி தெரிந்திருக்க வேண்டும். மேலும், இருசக்கர வாகனம், மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். வயது விவரத்தை பொறுத்தவரை, 18 வயதை நிரம்பி இருக்க வேண்டும்.
அதிகபட்சமாக 40 வயதுக்குள் இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அரசு விதிகளின்படி, வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது. இதில் எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், எஸ்சி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது. மாத சம்பளத்தை பொறுத்தவரையில், கிளை போஸ்ட் மாஸ்டர் (BPM) பணிக்கு ரூ.10,000 முதல் ரூ.24,470, உதவிக் கிளை போஸ்ட் மாஸ்டர் (ABPM) பணிக்கு ரூ.12,000 முதல் ரு.29,380 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு indiapostgdsonline.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.