SSLC பொதுத் தேர்வு - மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் அளவிலேயே சலுகைக்கான ஆணை வழங்க அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு! SSLC Public Examination - Director of Government Examinations orders to issue concessions at the level of Principal Educational Officer for students with disabilities!
பார்வை 1-ல் காணும் கடிதத்தில் நடைபெறவுள்ள 2025-2026 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் தேர்வெழுதவிருக்கும் மாற்றுத் திறனாளி பள்ளி மாணவர்கள் மற்றும் தனித் தேர்வர்கள் கோரும் சலுகைகள் குறித்த விண்ணப்பங்களை ஆய்வு செய்து, தகுதியுள்ள விண்ணப்பங்களை அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் வாயிலாக, அரசுத் தேர்வுகள் இயக்கத்திற்கு ஆணை வேண்டி பரிந்துரை செய்யுமாறு தெரிவிக்கப்பட்டது. அவ்வாறு, அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் வாயிலாக பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கு சலுகைகள் வழங்கி சம்பந்தப்பட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர்களுக்கு ஆணை அனுப்பப்பட்டள்ளது.
In the letter referenced in (1), regarding the applications for concessions requested by differently-abled school students and private candidates appearing for the upcoming 2025-2026 Tenth Class Public Examinations, it was requested to analyze the applications and recommend to the Directorate of Government Examinations for approval through the Assistant Director of Government Examinations.
Accordingly, orders have been sent to the concerned Assistant Directors of Government Examinations granting concessions for the applications received through them.
Meanwhile, as there are only a few days left for the commencement of the March/April 2026 Tenth Class Public Examinations, it is informed that the applications received from differently-abled school students and private candidates requesting concessions should be granted by the concerned Chief Educational Officers / Pondicherry (Joint Director of Education) based on the medical certificates and the recommendations of the committee as stated in the letter referenced in (1) and according to the Government Order referenced in (2), and the ratification for the same should be requested and sent to the concerned Assistant Directors of Government Examinations இந்நிலையில், மார்ச்/ஏப்ரல் 2026 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் துவங்கிட சில நாட்களே உள்ளதால் மாற்றுத் திறனாளி பள்ளி மாணவர்கள் மற்றும் தனித் தேர்வர்களிடமிருந்து சலுகைகள் கோரி பெறப்படும் விண்ணப்பங்களை பார்வை 1-ல் காணும் கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் பார்வை 2- காணும் அரசாணையின் படி உரிய மருத்தவ சான்றுகளின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்/ பாண்டிச்சேரி (இணை இயக்குநர். கல்வி) ஆகியோர்கள் அளவிலேயே சலுகைக்கான ஆணை வழங்கி அதற்கான பின்னேற்பாணை கோரி சம்பந்தப்பட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர்களுக்கு அனுப்பிடுமாறு தெரிவித்தக் கொள்ளப்படுகிறது.
அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர்கள் முதன்மைக் கல்வி அலுவலகத்திலருந்து பெறப்படும் மாற்றுத் திறனாளித் தேர்வர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் விவரங்களை தொகுத்து இவ்வலுவலக bisectiondge@gmail என்ற மின்னஞ்சல் முகவரிக்கும், இணை இயக்குநர் (பணியாளர்) அவர்களின் முகவரிக்கும் அனுப்பிடுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
மேலும், பார்வை 2 மற்றும் 3-ல் காணும் அரசாணையின்படி, சொல்வதை எழுதுபவர் நியமனத்தின்போது கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளை முறைப்படி கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
ஓம்/-
இயக்குநர்
நகல்:
1. மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர்கள், அனைத்து மாவட்டங்கள்
2. மாவட்டக் கல்வி அலுவலர்கள் (இடைநிலை மற்றும் தனியார் பள்ளிகள்), அனைத்து மாவட்டங்கள்
This document is a circular directing District Assistant Directors of Government Examinations to compile and submit details regarding concessions provided to candidates with disabilities to the Director's office
Compile data on concessions granted to candidates with disabilities from the Chief Education Office.
Submit this compiled report via email to bisectiondge@gmail and to the Joint Director (Personnel).
Adhere strictly to the guidelines regarding the appointment of scribes as specified in the referenced government orders.
This directive is copied to all District Assistant Directors of Government Examinations and District Educational Officers.
CLICK HERE TO DOWNLOAD DGE - CEO Order Letter - PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.