பிப்.3ல் ஆக்டோ - ஜியோ போராட்டம் ; பிப்.8ல் ஜாக்டோ - ஜியோ பாராட்டு விழா
திமுக கடந்த சட்ட சபை தேர்தல் அறிக்கை யில் அரசு ஊழியர், ஆசி ரியர்களுக் கு பங்களிப்புடன் கூடிய புதிய பென்ஷன் திட்டம் ரத்து செய்யப்பட்டு, மீண் டும் பழைய பென்ஷன் திட்டம் அமல்படுத்தப்ப - டும் என்று வாக்குறுதி - அளித்தது. அடுத்த தேர்த - லுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலை யில், பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த தமிழக அரசு எந்த நடவ டிக்கையும் எடுக்க வில்லை. அதேநேரம் பங்களிப்புடன் கூடிய தமிழ்நாடு உறுதியளிக்கப் பட்ட பென்ஷன் திட்டம் (டாப்ஸ்) கடந்த ஜனவரி 1 முதல் அமலுக்கு வரு வதாக அறிவிக்கப் பட்டுள்ளது. 'மத்திய அரசு கடந்த ஏப்ரல் 1ல் அறிமுகம் செய்த ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டத்துக்கு, பெயர் மாற்றம் செய்து அறிவித்துள்ளது' என்று அரசு ஊழியர், ஆசிரியர் கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. பழைய பென் ஷன் திட்டத்துக்கு டாப்ஸ் திட்டம் மாற்றம் இல்லை. பழைய பென்ஷன் திட் டத்துக்கு மாற்று பழைய பென்ஷன் திட்டம்தான் என்று அரசு ஊழியர் சங் கம், சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம், ஆக்டோ ஜியோ போன்ற அமைப் புகள் கூறியுள்ளன. மேலும் திமுக தேர்தல் அறிக்கை யில் கூறியபடி பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி வரும் பிப்ரவரி 3ல் கால வரையற்ற வேலைநிறுத் தப் போராட்டத்துக்கும் அழைப்பு விடுத்துள்ளது.
இந்நிலையில், டாப்ஸ் திட்டத்தை அறிவித்த முதல்வர் ஸ்டாலினுக்கு ஜாக்டோ-ஜியோ சார்பில் பாராட்டு விழா வரும் பிப்ரவரி فه தேதி சென்னை நந்தனம் ஒய் எம்சிஏ மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த பாராட்டு விழாவை சிறப் பாக நடத்துவது தொடர் பாக ஜாக்டோ - ஜியோ சார்பில் வீடியோ கான்ப ரன்சிங் வழியாக உயர்மட் டக்குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில், பாராட்டு விழா கூட்டத்தை சிறப் பாக நடத்துவது தொடர் பாக ஆலோசிக்கப்பட்டது

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.