Superintendent to D.E.O. P.A. - Tentative Panel List Released by DSE! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, March 15, 2025

Superintendent to D.E.O. P.A. - Tentative Panel List Released by DSE!



Superintendent to D.E.O. P.A. - Tentative Panel List Released by DSE!

DSE - Superintendent to DEO PA

பொருள்: தமிழ்நாடு பொதுப்பணி - மாவட்டக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பதவிக்கு 15.03.2025 அன்றுள்ளவாறு கண்காணிப்பாளர்களின் உத்தேச பெயர்ப்பட்டியல் வெளியிடுதல் - சார்ந்து. பார்வை: 1. அரசாணை எண்.707, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை நாள்.03.07.1981 (பணியாளர் 2. தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்.18708/அ3/இ1/2011 நாள். 06.07.2011 (பணியாளர் தொகுதி) தொகுதி) 3. தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்.38283/அ3/இ1/2013 நாள். 31.08.2013 பார்வை (2) ல் காணும் செயல்முறைகளின்படி வெளியிடப்பட்ட பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர்களின் பட்டியலிலிருந்து பதவி உயர்வும். பார்வை (3) இன்படி வெளியிடப்பட்ட முறையான கண்காணிப்பாளர்களின் பட்டியலிலிருந்து பணிமாறுதல் பணிமாறுதல் வழங்கி ஏற்கனவே வெளியிடப்பட்ட தேர்ந்தோர் பட்டியலில் ஓய்வு பெற்ற, முதுகலை ஆசிரியர்களாக பணி மாறுதலில் சென்றவர்கள், விருப்ப ஓய்வு, இயற்கை எய்தியவர்கள் போன்றவர்கள் நீங்கலாக, ஒழுங்கு நடவடிக்கை, நீதிமன்ற தீர்ப்பாணைகள் போன்றவற்றின் மூலமாக முன்தேதியிட்டு வழங்கப்பட்ட ஆணைகளின் அடிப்படையில் உள்ள கண்காணிப்பாளர்களை 15.03.2025 நிலவரப்படி மாவட்டக் கல்வி அலுவலர் / இணை இயக்குநரின் நேர்முக உதவியாளர் பதவி உயர்வுக்கு கண்காணிப்பாளர்களின் உத்தேச பெயர் பட்டியல் இத்துடன் இணைத்து வெளியிடப்படுகிறது.

இவ்வுத்தேச பெயர்ப்பட்டியலில் சேர்க்கை / திருத்தம் / நீக்கம் ஏதேனுமிருப்பின் அதன் விவரத்தினை உடன் தெரிவிக்குமாறும், பட்டியலில் இடம் பெற்றுள்ள பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மற்றும் தண்டனைக்காலம் நிலுவையிலுள்ளவர்கள் மற்றும் மாறுதலில் சென்றவர்கள், தகவலின்றி நீண்ட காலம் விடுப்பில் உள்ளவர்கள், ஓய்வு மற்றும் விருப்ப ஓய்வு பெற்றவர்கள், பதவி உயர்வினை தற்காலிக/ நிரந்தர உரிமைவிடல் செய்தவர்கள் எவரேனும் இருப்பின் அதன் விவரத்தினை உடன் தெரிவிக்குமாறும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும்/ இயக்ககங்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.

நபர்கள் பெயர்ப்பட்டியலை சார்ந்து மேற்காணும் உத்தேச அனைத்து வைத்தல் பணியாளர்களுக்கும் அனுப்பி சரிபார்த்து ஒப்புதல் பெற்று கோப்பில் வேண்டும். மேலும், உத்தேச பெயர்ப்பட்டியலில் சேர்க்கை, நீக்கம் மற்றும் திருத்தம் இருப்பின் அதனை 21.03.2025 க்குள் முதன்மைக் கல்வி அலுவலர் வழியாக இவ்வியக்ககம் அனுப்பிவைக்கவேண்டும். பட்டியலில் சேர்க்கை செய்யக்கோரும் இத்துடன் இணைத்து அனுப்பிவைக்கப்பட்டுள்ள படிவத்தில் விவரங்களை சரியாக பூர்த்தி செய்து தொடர்புடைய அனைத்து இணைப்புகளையும் இணைத்து மேற்குறிப்பிட்ட தேதிக்குள் முதன்மைக் கல்வி அலுவலர் வழியாக இவ்வியக்ககம் அனுப்பிவைத்தல் வேண்டும். இச்செயல்முறைகள் பெறப்பட்டதற்கான ஒப்புதலை உடன் அனுப்பி வைக்குமாறு அனைத்து அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.