தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் விதிகள் வழிகாட்டு நெறிமுறைகள் உடனடியாக வெளியிட வேண்டும் - ஜாக்டோ - ஜியோ அறிக்கை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, February 27, 2026

தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் விதிகள் வழிகாட்டு நெறிமுறைகள் உடனடியாக வெளியிட வேண்டும் - ஜாக்டோ - ஜியோ அறிக்கை



தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் விதிகள் வழிகாட்டு நெறிமுறைகள் உடனடியாக வெளியிட வேண்டும் - ஜாக்டோ - ஜியோ அறிக்கை Tamil Nadu Promised Pension Scheme Rules and Guidelines should be published immediately - JACTO - Geo Report

தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் விதிகள் வழிகாட்டு நெறிமுறைகள் தமிழக அரசு உடனடியாக வெளியிடக் கோருதல் தொடர்பாக ஜாக்டோ - ஜியோ அறிக்கை வெளியீடு. மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு, பொருள் தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் - விதிகள்-வழிகாட்டு நெறிமுறைகள் உடனடியாக வெளியிடக் கோருதல் தொடர்பாக

பார்வை அரசாணை (நிலை) எண் 7, நிதித்துறை, நாள் 09.01.2026

வணக்கம்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த 03.01.2026 அன்று தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தினை அறிவித்தார்கள். அதனைத் தொடர்ந்து கடந்த 09.01.2026 அன்று இத்திட்டத்திற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.

2) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டமானது ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள்-அரசுப் பணியாளர்களின் 23 ஆண்டு கால ஓய்வூதியத்தினை பெறுவதற்கான போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்பதால் கடந்த 08.02.2026 அன்று சென்னையில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள்-அரசுப் பணியாளர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ சார்பாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருக்கு மாபெரும் நன்றி அறிவிப்பு மாநாடு நடத்தி, நன்றியினைத் தெரிவித்துக் கொண்டோம்.

3) ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள்-அரசுப் பணியாளர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோவில் தானும் ஒரு மாநில ஒருங்கிணைப்பாளர் தான் என்ற பெருமிதத்தோடும் உற்சாகத்தோடும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கலந்து கொண்டு, எதிர்வரும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026ல் வெற்றி பெற்று, திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைந்தவுடன் எஞ்சியுள்ள கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் வாக்குறுதியினையும் அளித்ததை ஜாக்டோ ஜியோ நன்றிப் பெருக்கோடு வரவேற்கிறது.

4) தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு இந்திய தேர்தல் ஆணையத்தினால் மார்ச்சு மாதத்தின் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட ஜாக்டோ - ஜியோ (JACTTO-GEO) (Joint Action Council of Tamilnadu Teachers Organisations and Government Employees Organisations)

தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்திற்கான விதிகள்-வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்பதனை மாண்புமிகு முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம். 5) மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரால் அறிவிக்கப்பட்ட தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் விதிகள்-வழிகாட்டு நெறிமுறைகளில் பின்வரும் அம்சங்கள் இடம்பெற வேண்டும் என ஜாக்டோ ஜியோ மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை கனிவுடன் கேட்டுக் கொள்கிறது.

தியத்தில் பிடித்தம் செய்யப்படும் 10 சதவிகிதத் தொகையினை முற்றிலுமாக இரத்து செய்திட வேண்டும். இதுநாள்வரை பிடித்தம் செய்த தொகையினை பழைய ஓய்வூதியத் திட்டத்தினைப் போல் பொது வருங்கால வைப்பு நிதிக் கணக்காக மாற்றிட வேண்டும்.

மிகக் குறுகிய காலத்தில் இத்திட்டத்தின்கீழ் ஓய்வூதியம்-குடும்ப ஓய்வூதியம் பெறும் பணியாளர்கள், அவரது கணவன்-மனைவி-வாரிசுகள் இறக்க நேரிடும் நிகழ்வுகளில், அப்பணியாளரின் சேமிப்புத் தொகையானது வட்டியுடன் வாரிசுதாரருக்கு வழங்க வேண்டும்.

ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியக் கால பலன்கள் அனைத்துமே கருவூலக் கணக்குத் துறையின் சார்பாக IFHRMS மென்பொருள் மூலமாகவே வழங்கப்பட வேண்டும்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தினை கண்டிப்பாகக் கொண்டு வருவார் என்ற வைராக்கியத்தோடு, 31.12.2025க்கு முன்னர் பணியிலிருந்து ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள்-அரசுப் பணியாளர்களில் ஏறத்தாழ 3,000 பேர் சிபிஎஸ் இறுதித் தொகையினைப் பெறாமல் உள்ளனர். அவர்களையும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரால் அறிவிக்கப்பட்ட தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் சேர்த்திட வேண்டும்.

31.12.2025க்கு முன்னர் பணியிலிருந்து ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள்-அரசுப் பணியாளர்களில் பெரும்பகுதியினர், சிபிஎஸ் திட்டத்தில் இறுதித் தொகையினைப் முழுமையாகப் பெற்றிருந்தாலும், ஓய்வூதியம் மட்டுமே பணி ஓய்விற்குப் பிறகான வாழ்நாள் துணை என்பதனை உணர்ந்துள்ளனர். இவர்கள் தாங்கள் சிபிஎஸ் திட்டத்தின்கீழ் பெற்ற முழுத் தொகையினையும் முழுமையாக அரசுக் கணக்கில் திருப்பிச் செலுத்த முன்வந்து, தங்களையும் தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் இணைத்திட வேண்டும் எனக் கோரியுள்ளனர். இவர்களையும் இத்திட்டத்தில் இணைத்திட வேண்டும்.

vii) 31.12.2025க்கு முன்னர் பணியிலிருந்து ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், அரசு பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள உரிமை ஊழியர்கள்-அரசுப் ஓய்வூதியமானது கண்ணியமானத் தொகையாக அமைய வேண்டும்.

vii) தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்திற்கான விதிகள்-வழிகாட்டு நெறிமுறைகளானது, இந்திய தேர்தல் ஆணையத்தினால் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்-2026 குறித்த அறிவிக்கை வெளியிடுவதற்கு முன்பாக வெளியிடப்பட வேண்டும்.

பதிவிறக்கம் செய்ய கீழே 👇👇👇கொடுக்கப்பட்டுள்ள Click Here To Download Link- ஐ கிளிக் செய்யவும்

CLICK HERE TO DOWNLOAD Jactto Geo Letter on TAPS - PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.