ஆசிரியர் தேர்வு வாரியம், பத்திரிகைச் செய்தி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, February 28, 2025

ஆசிரியர் தேர்வு வாரியம், பத்திரிகைச் செய்தி



ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை-06.

பத்திரிகைச் செய்தி

தமிழ்நாடு மாநிலத் தகுதித் தேர்வு (TNSET) 2024 ஆம் ஆண்டிற்கான அறிவிக்கை (எண். 01/2024) 20.03.2024 அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் மூலம் வெளியிடப்பட்டது.

ஆசிரியர் தேர்வு வாரிய 14.02.2025 நாளிட்ட பத்திரிக்கைச் செய்தியில் UGC வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில், மாநிலத் தகுதித் தேர்வு, 06.03.2025, 07.03.2025, 08.03.2025 மற்றும் 09.03.2025 ஆகிய தேதிகளில் CBT மூலம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டது.

தற்போது, தேர்விற்கான நுழைவுச்சீட்டு (Hall Ticket) இன்று 27.02.2025 முதல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதள முகவரி https://trb.tn.gov.in/ ல் தேர்வர்கள் தங்களது User Id மற்றும் கடவுச் சொல் (Password) உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும், கணினி வழித் தேர்விற்காக (Computer Based Examination) பயிற்சித் தேர்வு (Practice Test) மேற்கொள்ள விரும்பும் தேர்வர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய மேற்கொள்வதற்கு இணையதளத்தில் இன்று முதல் பயிற்சியினை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே, அனைத்து தேர்வர்களும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயிற்சி மேற்கொள்ளலாம்.

தலைவர்

நாள் 27.02.2025

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.