மேல்நிலை பொதுத்தேர்வுகளுக்கு - பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு பணிக்கு நியமனம் செய்வதை கைவிட கோரிக்கை! -
For the Higher Secondary Public Examinations - Request to stop appointing graduate teachers for examination work!
மேல்நிலை பொதுத்தேர்வுகளுக்கு - பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு பணிக்கு நியமனம் செய்வதை கைவிட ஆசிரியர் கூட்டணி கோரிக்கை
1. நடைபெற உள்ள மேல்நிலைத் தேர்வுகளுக்கு ( 11 மற்றும் 12 ஆம் வகுப்புகள் ) பட்டதாரி ஆசிரியர்களை அறை கண்காணிப்பாளர்களாக நியமனம் செய்யப்படுகின்றனர் . இதனால் சுமார் 1 மாத காலத்திற்கு பட்டதாரி ஆசிரியர்களால் 10 - ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முறையாக தேர்வுக்கான பயிற்சி கொடுக்க முடிவதில்லை .
இதனால் 10 - ஆம் வகுப்பு மாணவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு , பொதுத் தேர்வில் தேர்ச்சி விழுக்காடு குறைய காரணமாக அமைகிறது . ஆகவே மேல்நிலைத் தேர்வுகளுக்கு பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு பணிக்கு நியமனம் செய்வதை கைவிட வேண்டுகிறோம் .
2. நாமக்கல் மாவட்டத்தில் 50 % தனியார் பள்ளிகள் இருக்கின்றன . எனவே தனியார் பள்ளி ஆசிரியர்களையும் தேர்வு பணிக்கு நியமிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமாறு கனிவுடன் கேட்டுக்கொள்கிறோம் .
Friday, February 28, 2025
New
மேல்நிலை பொதுத்தேர்வுகளுக்கு - பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு பணிக்கு நியமனம் செய்வதை கைவிட கோரிக்கை!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.