TET, TRB தேர்வை விரைந்து நடத்த வேண்டும் - தேசிய ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்
டெட், டி.ஆர்.பி., தேர்வை விரைந்து நடத்த வேண்டும்
தேசிய ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்
திண்டுக்கல், செப். 27-
காலி பணியிடங்களை நிரப்ப டெட், டி.ஆர். பி., தேர்வை அரசு விரைந்து நடத்த வேண்டும். என, தேசிய ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து திண்டுக்கல்லில் இச்சங்க மாநில துணைத்தலைவர் விஜய் கூறியதாவது: பள்ளிக் கல்வித்துறை, கள்ளர் சீரமைப்பு துறை,ஆதிதி ராவிட நலத்துறை பள்ளிகளில் பட்டதாரி, முது கலை பட்டதாரி, உடற்கல்வி, ஓவிய ஆசிரியர் கள் என பல்வேறு பணியிடங்கள் 12,000 வரை காலியாக உள்ளன.
அப்பணியிடங்களை நிரப்ப டெட், டி.ஆர்.பி., தேர்வை அரசு விரைவாக நடத்த வேண்டும்.
ப்போதுதான் இளைஞர்க ளுக்கு பணி வாய்ப்பு கிடைக்கும். அரசு வழங்கக்கூடிய மாணவர்களுக்கான நலத்திட்டங்களை எமிஸ் மூலம் பதிவேற்றம் செய்யும் பணி அதிகம் உள்ளது.
இதனால் கற் றல், கற்பித்தல் பணி மிகவும் பாதிக்கப்படுகிறது.
அப்பணியை மேற்கொள்ள தனியாக முழு நேர ஊழியர்களை பணியமர்த்தவும் அரசு நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.