தமிழகத்தின் புதிய தலைமைச் செயலராக நா.முருகானந்தம் ஐஏஎஸ் நியமனம்
தமிழ்நாடு அரசின் புதிய தலைமைச் செயலராக ஐஏஎஸ் அதிகாரி நா.முருகானந்தம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தலைமைச்செயலராக இருந்த சிவ்தாஸ் மீனா மாற்றப்பட்ட நிலையில் அவருக்கு பதில் முருகானந்தம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். முதல்வரின் தனிச் செயலராக பணியாற்றிய முருகானந்தம் தற்போது தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேசமயம் சிவ்தாஸ் மீனா ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 2023 ஜூன் 30ல் பதவியேற்ற சிவ்தாஸ்மீனா ஓராண்டுக்கும் மேலாக தலைமைச்செயலாளர் பதவியில் இருந்தார்.
தமிழக அரசின் 50வது தலைமைச் செயலர் நா.முருகானந்தம் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு ஐஏஎஸ் பிரிவு அதிகாரியான இவா் சென்னையைச் சோ்ந்தவா். பொறியியல் மற்றும் எம்பிஏ பட்டதாரியான இவா் 1991-ஆம் ஆண்டு ஐஏஎஸ் தோ்ச்சி பெற்று பணியில் சோ்ந்தாா்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.