அரசு பள்ளியில் மாணவியை அறைந்த ஆசிரியை சஸ்பெண்ட்!
ஜோலார்பேட்டை, ஜூலை 1:
ஜோலார்பேட்டை அருகே வகுப்பறையில் பாடத்தை கவனிக்காத 2ம் வகுப்பு மாணவியின் கன்னத்தில் அறைந்த ஆசிரியை சஸ் பெண்ட் செய்யப்பட்டார்.
திருப்பத்தூர் மாவட் டம், ஜோலார்பேட்டை அடுத்த அண்ணாண் டபட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக் கப்பள்ளி இயங்கிவருகிறது. இப்பள்ளியில் 1 முதல் 5ம் வகுப்பு வரை 23 மாணவ, மாணவிகள் படித்து வரு கின்றனர்.
இங்கு 2 ஆசிரி யர்கள் பணியில் உள்ளனர். இந்நிலையில், கடந்த 18ம் தேதி 2ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆசிரி
யயை ராஜலஷ்மி என்பவர் பாடம் நடத்திக்கொண்டி ருந்தார்.
அப்போது, ஒரு மாணவி பாடத்தை கவ னிக்காமல் இருந்ததாக தெரிகிறது. இதை பார்த்த ஆசிரியை, அந்த மாணவி யின் கன்னத்தில் அறைந்த தாக கூறப்படுகிறது.
இதையறிந்த பெற் றோர், மறுநாள் பள்ளியை திறந்தவுடன் சம்பந்தப் பட்ட ஆசிரியையிடம் தட்டிக்கேட்டுள்ளனர். அப்போது, இருதரப்புக்கும் இடையே கடும் வாக்குவா தம் ஏற்பட்டது.
இதனை அங்கிருந்த சிலர் வீடியோ எடுத்துள்ள னர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலா
னது.
இது குறித்து வட் டார தொடக்கக் கல்வி அலுவலர் விசாரணை மேற்கொண்டு ஆசிரியை ராஜலஷ்மி மற்றும் பள்ளி யின் தலைமை ஆசிரியை ஆகியோரை டிரான்ஸ் பர் செய்தார். மேலும், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அமுதாவிற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட் டது.
அதன் தொடர் நடவ டிக்கையாக, மாணவியை அடித்த ஆசிரியை ராஜலஷ் மியை சஸ்பெண்ட் செய்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அமுதா கடந்த 2 நாட்களுக்கு முன்பு உத்தர விட்டார்.
Tuesday, July 2, 2024
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.