அரசு /அரசு உதவி பெறும் / சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கூடுதலாக மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளித்து அரசாணை வெளியீடு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, July 2, 2024

அரசு /அரசு உதவி பெறும் / சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கூடுதலாக மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளித்து அரசாணை வெளியீடு!அரசு /அரசு உதவி பெறும் / சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கூடுதலாக மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளித்து அரசாணை வெளியீடு!

அரசு /அரசு உதவி பெறும் / சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கூடுதலாக மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளித்து அரசாணை வெளியீடு!

கல்லூரிக் கல்வி -2024 -25 ஆம் கல்வியாண்டில் அரசு / அரசு உதவி பெறும் / சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கூடுதல் தேவை உள்ள பாடப்பிரிவுகளில் கூடுதலாக மாணாக்கர்களை சேர்ப்பதற்கு அனுமதி அளித்தல் – ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.

உயர்கல்வி (ஜி1)த்துறை

அரசாணை (வாலாயம்) எண்.178

நாள் 28.06.2024

குரோதி வருடம், ஆனி-14. திருவள்ளுவர் ஆண்டு, 2055.

படிக்கப்பட்டவை:- 1. அரசாணை(வாலாயம்) எண்.144, உயர்கல்வி (ஜி1)த் துறை, நாள் 26.06.2023.

2. அரசாணை (வாலாயம்) எண்.156, உயர்கல்வி (இ2)த் துறை, நாள் 30.06.2023.

3. 2024-25-ம் நிதி ஆண்டிற்கான உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கையின் போது வெளியிடப்பட்ட அறிவிப்பு நாள் 24.06.2024.

ஆணை:-

மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில் 2023-24-ஆம் கல்வியாண்டில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தேவை உள்ள கலை பாடப்பிரிவுகளுக்கு 20% கூடுதலாகவும், அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு ஆய்வக வசதிக்கு ஏற்ப 20% கூடுதலாகவும், மாணாக்கர்களை சேர்ப்பதற்கு அனுமதியும், இக்கூடுதல் மாணாக்கர்களின் சேர்க்கைக்கு கல்லூரி சார்ந்த பல்கலைக்கழகங்களின் அனுமதி பெற வேண்டும் என அறிவுறுத்தியும் ஆணை வெளியிடப்பட்டது.

2. மேலே இரண்டாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில் 2023-24-ஆம் கல்வியாண்டில், மாணாக்கர்களின் நலன் கருதி அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகளுக்கு 15 சதவீதமும், சுயநிதி பாடப்பிரிவுகளுக்கு 10 சதவீதமும், சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் 10 சதவீதமும் கூடுதலாக மாணாக்கர்களை சேர்ப்பதற்கு கீழ்க்கண்ட நிபந்தனைகளுக்குட்பட்டு அனுமதி அளித்து ஆணையிடப்பட்டது.

துறை i) கூடுதல் மாணவர் சேர்க்கையினால் கூடுதல் பணியிடங்கள் கோரக்கூடாது. கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு சார்ந்த பல்கலைக்கழகங்களின் ஒப்புதல் பெறப்பட வேண்டும்.

3. இந்நிலையில், 2024-25-ஆம் நிதி ஆண்டிற்கான உயர்கல்வித் மானியக் கோரிக்கையின் போது 24.06.2024 அன்று மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் அவர்களால் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 2024-25-ஆம் கல்வியாண்டில் அரசு கல்லூரிகளில் 20%-மும், அரசு உதவிபெறும் கல்லூரிகளில் 15%-மும் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் 10%-(ii மாணாக்கர் சேர்க்கை அதிகரிக்கப்படும் என்று வெளியிடப்பட்டது.

அறிவிப்பு

4. மேற்காணும் அறிவிப்பின் அடிப்படையில் 2024-25-ஆம் கல்வியாண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தேவையுள்ள கலை பாடப்பிரிவுகளுக்கு 20% கூடுதலாகவும், அறிவியல் பாடப் பிரிவுகளுக்கு ஆய்வக வசதிக்கேற்ப 20% கூடுதலாகவும், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் தேவையுள்ள மற்றும் ஆய்வக வசதிக்கேற்ப அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகளுக்கு 15 சதவீதமும், சுயநிதி பாடப்பிரிவுகளுக்கு 10 சதவீதமும், சுயநிதி கல்லூரிகளுக்கு தேவையுள்ள மற்றும் ஆய்வக வசதிக்கேற்ப 10 சதவீதம் கூடுதலாகவும் மாணாக்கர்களை சேர்ப்பதற்கு கீழ்க்கண்ட நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்படுகிறது.:-

மேற்குறிப்பிட்ட 20%, 15% மற்றும் 10% கூடுதல் சேர்க்கையானது சார்ந்த பல்கலைக்கழகங்களால் முதன் முதலில் ஒப்பளிக்கப்பட்ட (based on original intake approved by the University concerned) மாணாக்கர் சேர்க்கையின் அடிப்படையிலேயே மேற்கொள்ள வேண்டும். கூடுதல் மாணவர் சேர்க்கையினால் கூடுதல் பணியிடங்கள் கோரக்கூடாது.

iii) கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு, சார்ந்த பல்கலைக்கழகங்களின் ஒப்புதல் பெறப்பட வேண்டும்.

மேற்குறிப்பிடப்பட்ட கூடுதல் சேர்க்கையானது 2024-25-ஆம் கல்வியாண்டிற்கு மட்டுமே பொருந்தும்.

5. மேலும், இவ்வாணையின் மூலம் கூடுதலாக சேர்க்கப்பட்ட மாணவர்களின் விவரங்கள் குறித்து, கல்லூரி வாரியாக அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்குமாறு கல்லூரிக் கல்வி இயக்குநர் அறிவுறுத்தப்படுகிறார். CLICK HERE TO DOWNLOAD G.O.Ms.No.178 - PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.