மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளி விடுதிகளை கல்லூரி விடுதிகளாக தரம் உயர்த்துதல் - ADW இயக்குநரின் செயல்முறைகள்!!! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, July 2, 2024

மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளி விடுதிகளை கல்லூரி விடுதிகளாக தரம் உயர்த்துதல் - ADW இயக்குநரின் செயல்முறைகள்!!!மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளி விடுதிகளை கல்லூரி விடுதிகளாக தரம் உயர்த்துதல் - ADW இயக்குநரின் செயல்முறைகள்!!!

மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளி விடுதிகளை கல்லூரி விடுதிகளாக தரம் உயர்த்துதல் - ADW இயக்குநரின் செயல்முறைகள்!!! இணைப்பு: பட்டியல்.

பொருள்: ஆதிதிராவிடர் நலம்

கல்வி விடுதிப்பணிகள்

மாணாக்கர் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளி விடுதிகளை தேவையின் அடிப்படையில் கல்லூரி விடுதிகளாக தரம் உயர்த்த நடவடிக்கையில் உள்ளது தொடர்பாக.

பார்வை: 1. அ.ஆ.எண்.53 ஆமபந (ஆதிந4) துறை, நாள்.01.07.2022

2. சம்மந்தப்பட்ட மாவட்டங்களிலிருந்து பெறப்பட்ட விவரங்கள். 3. இவ்வலுவலக கடித ந.க.எண்.த2/25956/2022, நாள்.02.06.2023.

ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் 1141 பள்ளி மாணாக்கர் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. பார்வை 4இல் கண்டுள்ள அரசாணையின் வழிகாட்டுதல்களின்படி விடுதிகளின் மாணாக்கர் சேர்க்கை 2022 - 2023 ஆம் கல்வியாண்டிலிருந்து இணையவழியில் மாணாக்கர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்நேர்வில், மாணாக்கர் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளி விடுதிகளை தேவையின் அடிப்படையில் கல்லூரி விடுதிகளாக தரம் உயர்த்த கோரிய நிலையில் கீழ்கண்ட இனங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் விவரம் பின்வருமாறு தங்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

அட்டவணை1

எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள்

பார்வை 3-ல் கண்டுள்ளவாறு பள்ளி விடுதிகளை கல்லூரி விடுதிகளாக தரம் தரம் உயர்த்தும் பொருட்டு அரசிற்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.

இந்நேர்வில், 2023-2024 ஆம் கல்வியாண்டு தொடக்கத்தில் விடுதியில் மாணாக்கர்களை சேர்க்கும் வகையில் அரசிடமிருந்து அரசாணை வரப்பெறும் என எதிர்பார்க்கப்படுவதால் சம்மந்தப்பட்ட விடுதியில் கல்லூரி மாணாக்கர்களை சேர்க்க ஏதுவாக அருகாமையில் உள்ள கல்லூரிகளில் இவ்விவரத்தினை தெரிவித்து, அரசாணை வரப்பெற்றதும் online-இல் விண்ணப்பங்கங்களை பூர்த்தி செய்ய ஏதுவாக விடுதியில் சேர விருப்பம் உள்ள மாணாக்கர்களிடம் உரிய விவரங்கள் பெற்று தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்படுகிறது. இவ்விடுதிகளில் ஏற்கனவே தங்கி பயின்ற மாணவர்கள் எவருமிருப்பின் அவர்களை அருகாமையில் உள்ள பள்ளி விடுதிகளில் சேர்க்கவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. மாணவியர்களை பொறுத்தவரை கல்லூரி விடுதி மாணவியர்களுடன் சேர்த்து தங்க வைக்கலாம். அட்டவணை 2

இவ்விடுதிகளில் நீண்ட காலமாக மாணாக்கர் சேர்க்கை இல்லாததால் இவ்விடுதிகளை வேறு தேவையுள்ள இடங்களுக்கு கல்லூரி விடுதிகளாக மாற்றிட நடவடிக்கையில் உள்ளது. எனவே, இவ்விடுதிக்கான பணியாளர்களை காலியிடங்கள் இருக்கும் இடத்தில் பணி வழங்க தெரிவிக்கப்படுகிறது. இவ்விடுதிகளுக்கான அசையா சொத்துகளை கல்லூரி விடுதிகளாக தரம் உயர்த்தும் இடத்திற்கு வழங்க வகையில் உரிய பாதுகாப்பில் வைத்திடுமாறும்

கூடிய தெரிவிக்கப்படுகிறது. குறிப்பு வ.எண் 12, 19 மற்றும் 26 ல் உள்ள விடுதிகளின் பணியிடங்கள் புதியதாக புதியதாக தோற்றுவிக்கப்பட்டுள்ள விடுதிகளுக்கு மறுபரவலமர்த்தல் வழங்கப்பட்டுள்ளதால், முறையில் இப்பணியிடங்களை நிரப்பக்கூடாது.

இவ்விடுதிகளை பொறுத்தவரை மாணாக்கர் எண்ணிக்கை 20-க்கும் குறைந்த எண்ணிக்கையில் உள்ளது. எனவே, இவ்விடுதிகளை கல்லூரி விடுதிகளாக தங்களது மாவட்டத்தில் தரம் உயர்த்த தேவை உள்ளதா அல்லது இவ்விடுதி தங்கள் மாவட்டத்திற்கு தேவையில்லையா என்பது குறித்து அறிக்கை அனுப்ப கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இணைப்பு : அட்டவணை 1, 2 மற்றும் 3. CLICK HERE TO DOWNLOAD ADW - School Hostel to College Hostel - Proceedings PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.