மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்த பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை - மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, June 2, 2024

மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்த பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை - மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்



Enter, walk, run. Fly - The importance of teachers and students' creations in book creation - SPD Proceedings - நுழை , நட , ஓடு . பற - புத்தக உருவாக்கத்தில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் படைப்புகளுக்கு முக்கியத்துவம் - SPD Proceedings

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில் அரசு பள்ளி மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்தவதற்காக வாசிப்பு இயக்கம் என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது . இதில் குழந்தைகளின் வாசிப்பு நிலைகளுக்கு ஏற்ப நுழை , நட , ஓடு . பற என்ற நான்கு பிரிவுகளில் புத்தகங்கள் தயாரிக்கப்படுகின்றன.

முதல் கட்டமாக 53 புத்தகங்கள் வழங்கப்பட்டு , இரண்டாம் கட்டமாக 70 புத்தகங்கள் அச்சிடப்பட்டு , அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் வழங்கப்பட உள்ளன . மேலும் , இக்கல்வியாண்டில் அடுத்தகட்டமாக 127 புத்தகங்கள் உருவாக்கப்பட உள்ளன.

இப்புத்தக உருவாக்கத்தில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் படைப்புகளுக்கு முக்கியத்துவம் தரப்பட உள்ளது . அனைத்து வகை அரசுப் பள்ளிகள் , அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் தங்களது படைப்புகளை அனுப்பலாம்.

மாநில திட்ட இயக்ககம் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, சென்னை - 600 006

அனுப்புநர்

மரு. மா. ஆர்த்தி, இ.ஆ.ப.,

மாநில திட்ட இயக்குநர்,

மாநில திட்ட இயக்ககம்,

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி,

பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம்,

பெறுநர்

முதன்மைக் கல்வி அலுவலர்கள்,

அனைத்து மாவட்டங்கள்.

கல்லூரி சாலை, சென்னை-06.

ந.க.எண்:1533/C7/வாஇ/ஒபக/2023. நாள்: 05.2024

பொருள்: தமிழ்நாடு அரசு, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - மாபெரும் வாசிப்பு இயக்கம் - பள்ளி மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்துதல் நுழை, நட,ஓடு, பற என்ற நான்கு பிரிவுகளில் புத்தகங்கள் தயாரித்தல் கதைகள் வரவேற்றல் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் படைப்புகளை பள்ளியின் EMIS login வழியே அனுப்புதல் - சார்பு.

பார்வை: -

1. இவ்வலுவலகக் கடிதம் ந.க.எண்:2123/C7/நூலகமானியம்/ஒபக/ 2023, நாள்:15.06.2023

2. இவ்வலுவலகக் கடிதம் ந.க.எண்:2123/C7/நூலகமானியம்/ஒபக/ 2023, நாள்:13.07.2023

*****

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில் அரசு பள்ளி மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்தவதற்காக வாசிப்பு இயக்கம் என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் குழந்தைகளின் வாசிப்பு நிலைகளுக்கு ஏற்ப நுழை, நட, ஓடு, பற என்ற நான்கு பிரிவுகளில் புத்தகங்கள் தயாரிக்கப்படுகின்றன. முதல் கட்டமாக 53 புத்தகங்கள் வழங்கப்பட்டு, இரண்டாம் கட்டமாக 70 புத்தகங்கள் அச்சிடப்பட்டு, அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் வழங்கப்பட உள்ளன. மேலும், இக்கல்வியாண்டில் அடுத்தகட்டமாக 127 புத்தகங்கள் உருவாக்கப்பட உள்ளன. இப்புத்தக உருவாக்கத்தில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் படைப்புகளுக்கு முக்கியத்துவம் தரப்பட உள்ளது.

அனைத்து வகை அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் தங்களது படைப்புகளை அனுப்பலாம்.

தங்களது மாணவர்களின் கதைகளையும் சேகரித்து அனுப்பலாம்.

>தேர்வு செய்யப்படும் கதைகளை வாசிப்பு இயக்கத்தின் தேவைக்கேற்ப ஆசிரியர் குழுவால் வடிவமைக்கப்படும்.

* கதைகளை தேர்ந்தெடுக்கவோ, நிராகரிக்கவோ, திருத்தங்கள் செய்யவோ அரசு உண்டு.

உயர் அலுவலர்களால் அமைக்கப்பட்ட சீராய்வுக் குழுவிற்கு முழு அதிகாரம் சீராய்வுக் குழுவின் முடிவே இறுதியானது.

வழிகாட்டுதல்கள்:

வாசிப்பு இயக்கத்தின் அடிப்படைகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்றவாறு தங்களின் கதைகளை வடிவமைத்து இத்துடன் இணைக்கவும்.

முழுமையான புரிதலுக்கு தங்களது பள்ளியில் உள்ள வாசிப்பு இயக்கப் புத்தகங்களை வாசிக்கவும்.

எளிய மொழியில் சின்னச் சின்ன வாக்கியங்களில் கதைகள் இருக்க வேண்டும். படைப்புகளைத் தமிழிலேயே அனுப்பவும்.

படைப்புகள் தங்களது சொந்தக் கற்பனையில் எழுதியவையாக இருக்க வேண்டும்.

ஒருவர் அதிக பட்சம் 5 கதைகள் வரை அனுப்பலாம்.

கதைகளைத் தட்டச்சு செய்து அனுப்பி வைக்க வேண்டும். மாணவர் படைப்பை அனுப்பும் போது அம்மாணவர் பெயர் வகுப்பு பள்ளி விபரத்தோடு அனுப்பி வைக்கவும்.

தங்களுடைய கதைகள் தெரிவு செய்யப்பட்டால் தங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்படும்.

தங்களுடைய படைப்புகளாயினும் ஏற்கனவே வேறு ஏதேனும் புத்தகத்திலோ அல்லது இதழ்களிலோ பதிப்பிக்கப்பட்டிருந்தால் அதனைக்குறிப்பிடவும் மொழிபெயர்ப்புக் கதைகளாக இருப்பின் அது பற்றிய முழு விவரத்தைக் குறிப்பிடவும்.

கதையின் முடிவில் எழுதியவர் பெயர், தொடர்பு எண் மற்றும் முகவரியைக் கட்டாயம் குறிப்பிட வேண்டும்.

தேர்வாகும் கதைகளுக்கு தனியே மதிப்பூதியம் வழங்கப்படாது.

படைப்பாளியின் பெயர் புத்தக மேலட்டையில் அச்சிட்டு வெளிவரும்.

வார்த்தைகளின் எண்ணிக்கை:

"நுழை" - 80 முதல் 100 வார்த்தைகளுக்குள் இருத்தல் வேண்டும்.

"நட"- 150 முதல் 250 வார்த்தைகளுக்குள் இருத்தல் வேண்டும்.

"ஓடு" -300 முதல் 400 வார்த்தைகளுக்குள் இருத்தல் வேண்டும்.

"பற" - 400 முதல் 500 வார்த்தைகளுக்குள் இருத்தல் வேண்டும்.

30/06/2024 அன்று மாலை 5.00 மணிக்குள்ளாக தங்கள் பள்ளியின் EMIS login வழியே தங்களது படைப்புகளை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

நகல்

1. பள்ளிக் கல்வி இயக்குநர், பள்ளிக் கல்வி இயக்ககம் (தகவலுக்காக)

2. தொடக்கக் கல்வி இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்ககம்(தகவலுக்காக) CLICK HERE TO DOWNLOAD VI stories from teachers thro EMIS login - SPD Proceedings PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.