அரசு / அரசு நிதியுதவி பெறும்/ தனியார் மாணவ/ மாணவிகளுக்கான பயிலும் பள்ளியிலேயே வங்கி கணக்கு துவங்குதல் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் (Standard Operating Procedure) தொடர்பாக - DSE & DEE Proceedings - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, June 1, 2024

அரசு / அரசு நிதியுதவி பெறும்/ தனியார் மாணவ/ மாணவிகளுக்கான பயிலும் பள்ளியிலேயே வங்கி கணக்கு துவங்குதல் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் (Standard Operating Procedure) தொடர்பாக - DSE & DEE Proceedings



All students should open a bank account and upload it in school's EMIS website - DSE & DEE Proceedings அனைத்து மாணவர்களும் வங்கி கணக்கு தொடங்கி அதனை பள்ளியின் EMIS வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் - DSE & DEE Proceedings

அனைத்து மாணவர்களும் வங்கி கணக்கு தொடங்கி அதனை பள்ளியின் EMIS வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.. என பள்ளிக்கல்வி இயக்குநர் தனியார் பள்ளி இயக்குநர் மற்றும் தொடக்க கல்வி இயக்குநர் அவர்களின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் செயல்முறைகள்.

தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர், தொடக்கக்கல்வி இயக்குநர் மற்றும் தனியார் பள்ளிகள் இயக்குநரின் இணைச் செயல்முறைகள், சென்னை -6

ந.க.எண்.62956/எம்/இ4/2023,

பள்ளிக்கல்வி

பொருள்:

பள்ளிகள் பார்வை: நாள். 31.05.2024. அரசு / அரசு நிதியுதவி பெறும்/ தனியார் மாணவ/ மாணவிகளுக்கான பயிலும் பள்ளியிலேயே வங்கி கணக்கு துவங்குதல் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் (Standard Operating Procedure) தொடர்பாக.

1. ― அரசாணை நிலை OTGOOT.72 பள்ளிக் கல்வித்துறை, நாள்.11.03.2024.

2. இவ்வலுவலக இதே ந.க.எண்.62956/எம்/இ4/2023, நாள்.12.03.2024.

3. அரசுச் செயலரின் நே.மு.க எண்.1729/அகஇ2/2024-2, நாள்.29.05.2024.

அஞ்சலக 4. மின்னஞ்சல் நாள்.30.05.2024, தலைமை அலுவலர்– புரிந்துணர்வு ஒப்பந்த நகல், நாள்.30.05.2024.

பயிலும் பள்ளியிலேயே வங்கிக் கணக்கு அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அப்பள்ளியிலேயே வங்கிக் கணக்கு தொடங்குவதற்கு புதிய பதிவுகள் மற்றும் வங்கிக் கணக்கு எண் உடன் ஆதார் எண்ணை இணைத்தல் தொடர்பான பணிகளை மேற்கொள்வதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் (Standard Operating Procedure) அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான வங்கிக் கணக்குகளை பள்ளியிலேயே தொடங்குதல் சார்ந்து கீழ்கண்ட விவரங்கள் தெரிவிக்கப்படுகின்றது.

(i) பள்ளிக் கல்வி துறையின் கீழ் அனைத்து பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் வகுத்து முனைப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களும் இடைநிற்றல் இன்றி தொடர்ந்து கல்வி பயில ஏதுவாக உதவி தொகைகள் மற்றும் ஊக்க தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வுதவித் தொகை மற்றும் ஊக்க தொகை உரிய பயனாளர்களான மாணவர்களுக்கு குறித்த நேரத்தில் நேரடியாக வழங்கப்படுவதை உறுதி செய்யும் நோக்கில் நேரடிப் பயனாளர் பரிமாற்றம் (DBT) மூலம் பயனாளர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்திடும் முறை நடைமுறை படுத்தப்பட்டுள்ளது.

பணம் (ii) இவ்வாறாக நேரடி பயனாளர் பரிமாற்றம் (DBT) செய்வதற்கு ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு வங்கிக் கணக்கு கட்டாயம் தேவைப்படுகிறது. எனவே மாணவர்களுக்கு வங்கிக் கணக்கு புதியதாக துவங்குவதற்கு பள்ளிக் கல்வித் துறை மற்றும் வங்கிகள் பணிகள் சார்ந்து நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் (SOP) வகுக்க வேண்டியது அவசியமாகிறது.

பள்ளிகளில் வங்கிக் கணக்கு துவக்குதல் சார்ந்து மாணவர்களின் வயது அடிப்படையில் இரண்டு நிலைகளில் மேற்கொள்ளுதல் வேண்டும். i. பள்ளிகளில் வங்கிக் கணக்கு துவங்கும் நிலைகள்

நிலை 1: 5+ −10 வயது வரையுள்ள மாணவர்களுக்கு புதிய வங்கிக் கணக்கு துவங்குதல்

5 வயது பூர்த்தியடைந்த குழந்தைகள் முதல் 10 வயது வதையிலுள்ள குழந்தைகளுக்கு வங்கிக் கணக்கு துவங்குவதற்கு ஆதார் எண் கட்டாயமானதாகும். இந்த வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வங்கிக் கணக்கு துவங்குதல் என்பது மாணவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் பெயரில் இணைக் கணக்காகவே துவங்கப்படும். இவ்விணைக் கணக்கினை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து பராமரிக்கத்தக்க வகையிலேயே இருக்கும். இவ்விணைக் கணக்கிற்கு ஆரம்பத் தொகை ஏதுமில்லாத பூஜ்ஜியத் தொகைக் கணக்காகவே துவங்கப்படும். இவ்வகை இணைக் கணக்கு துவங்கும் போது பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்களின் ஆதார் எண்களை இணைக்க இயலாது.

எனவே இவ்வயதுடைய குழந்தைகளிடம் 5 வயதுக்கு குறைவான நிலையில் எடுக்கப்பட்ட ஆதார் விவரங்களுடன் கூடிய அட்டை மட்டுமே இருக்க நேரிடும். இந்நிலையில் 5 வயது பூர்த்தியடைந்த குழந்தைகளுக்கு கட்டாய பயோமெட்ரிக் புதுப்பித்தல் மேற்கொள்ள வேண்டியது அவசயமானதாகும். இக்கட்டாய பயோமெட்ரிக் புதுப்பித்தல் மேற்கொள்ளும் நிகழ்வில் மட்டுமே குழந்தைகளின் முகம், கைரேகைகள் மற்றும் கருவிழிகள் பதிவு மேற்கொள்ளப்படும்.

இவ்விவரங்களுடன் கூடிய புதுப்பிக்கப்பட்ட ஆதார் எண்கள் மட்டுமே. வங்கிக் கணக்கு துவங்கும் போது இணைக்கத்தக்கதாக இருக்கும். எனவே மேற்குறிப்பிட்டுள்ளவாறு ஒவ்வொரு குழந்தைக்குமான விவரங்களைப் பெற்றுத் தருவது முதல் நிலை ஆகும். நிலை 2: 10 வயதுக்கு மேல் புதிய வங்கி கணக்கு துவங்குதல்

10 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு புதிய வங்கிக் கணக்குகளை துவக்கிடுவதற்கு மாணவனின் 1. ஆதார் அட்டை நகல்.

2. மாணவனின் அடையாள அட்டை,

3. பாஸ்போர்ட் அளவு புகைப்படம் (தேவையெனில் மட்டும்). குழந்தைகளின் ஆதார் பதிவு விவரங்கள் தயார்நிலையில் வைத்திருத்தல் வேண்டும்.

மேலும் பெற்றோர் அல்லது பாதுகாவலர் விவரங்கள் தொலைபேசி எண் விவரங்களுடன் தயார்நிலையில் வைத்திருத்தல் வேண்டும். வங்கிக் கணக்கினை துவக்கிடுவதற்கான படிவங்களையும் உரிய விவரங்களுடன் தயார் நிலையில் வைத்திருத்தல் வேண்டும். பள்ளிக்கு அருகாமையில் உள்ள அஞ்சல் அலுவலகங்களின் விவரங்கள் மற்றும் வங்கிகளின் விவரங்கள் தயாரித்து வைத்தல் வேண்டும்.

வங்கிக் கணக்குகளின் தகவல்களை EMIS portal இல் பதிவேற்றம் செய்தல்

வங்கி கணக்குகளின் தகவல் உட்பட தேவையான பள்ளியளவில் பதிவேற்றம் செய்திடல் வேண்டும்.

நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் (SOP)

தகவல்களை

அட்டவணை (1) ஒருங்கிணைந்தப் பள்ளிக் கல்வி : கடமைகள் மற்றும் பொறுப்புகள் (அ) மாநிலத்திட்ட இயக்ககம் 1. மாநிலத் திட்ட இயக்குநர் ஆதார் பதிவு மேற்கொள்வதற்கான பணிகளின் பதிவாளராகச் செயல்படுவார்.

2. கல்வித் தகவல் மேலாண்மை (EMIS) தளத்தில் உள்ள வங்கிக் கணக்கு துவக்குதல் குழந்தைகளின் விவரங்களை, மாவட்டங்கள் வாரியாக பள்ளிகளின் எண்ணிக்கை கண்டறிந்து பள்ளிக் கல்வி இயக்ககம். தொடக்கக் கல்வி இயக்ககம் மற்றும் தனியார் பள்ளி இயக்ககங்களிடம் வழங்கி பள்ளிகளில் வங்கிக் கணக்கு துவக்குதல் உறுதி செய்வார்.

3. மாநிலத் திட்ட இயக்ககத்திலுள்ள முதன்மை தொழில் நுட்ப அலுவலர் (CTO) கல்வி தகவல் மேலாண்மை அமைப்பில் வங்கிக் கணக்கு துவக்குதல் சார்ந்த உரிய கட்டக அமைப்பை (Module) உருவாக்குதல் இவரது பொறுப்பாகும். 4. அனைத்து நிலைகளிலும் கல்வித் தகவல் மேலாண்மை தொகுப்பில் இப்பணிகளை கண்காணிப்பதற்கும் ஆய்வு செய்வதற்கும் ஏதுவாக தரவுகளை உள்ளீடு செய்து, தொகுப்பறிக்கை பெறுவதற்கு உரிய வசதிகளை ஏற்படுத்தித் தருவார்.

(ஆ) மாவட்ட திட்ட அலுவலகம்

1. மாவட்ட திட்ட அலுவலகத்திலுள்ள உதவித் திட்ட அலுவலர் பற்றாளராக (Nodal Officers) செயல்வடுவார்.

2. மாவட்ட திட்ட அலுவலகத்திலுள்ள ஒருங்கிணைப்பாளர்கள் (EMIS, ICT) மாவட்டத்தில் வங்கிக் கணக்கு துவக்குதல் சார்ந்து தங்களது பணியினைத் தொய்வின்றி ஆற்றிடும் பள்ளிகளில் இப்பணியினை மேற்கொள்ள கால அட்டவணையை வகுத்துக் கொடுக்கும் வகையில் பொறுப்பு இவர்களைச் சார்ந்ததாகும்.

வட்டார வாரியாக 3. வங்கிக் கணக்கு துவக்கிடுவதற்கு பள்ளிகளுக்குச் செல்லும் முன்பே முன்கூட்டியே வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் மூலமாக உரியப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு தகவல் தெரிவிக்கும் பணியினை மேற்கொள்வர்.

4. மாவட்ட அளவிலான வங்கிக் கணக்கு துவங்குதல் சார்ந்த பணிகளின் முன்னேற்ற அறிக்கையினை முதன்மைக்கல்வி அலுவலர் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களின் ஆய்விற்கு தெரிவிக்கும் பொறுப்பு உதவித்திட்ட அலுவலரைச் சாரும்.

5. வங்கிக் கணக்கு துவக்கிடுதல் சார்ந்த பணிகளில் ஏதேனும் தொய்வு ஏற்படின் உடன் அவற்றிற்கான காரணத்தைக் கண்டறிந்து அதனைச் சரிபார்த்து முழுவீச்சில் பணி நடைபெறுவதை உறுதி செய்வர். இ) வட்டார வளமையம் 1. வட்டார வளமைய மேற்பார்வையாளர், தமது வட்டாரத்தில் மேற்கொள்ளும் வங்கிக் கணக்கு துவக்கிடும் தொடர்பான அனைத்து பணிகளையும் ஒருங்கிணைப்பவர் ஆவார்.

2. கல்வித் தகவல் மேலாண்மை அமைப்பிலிருந்து பெறப்படும் தகவல்களின் அடிப்படையில் அனைத்துப் பள்ளிகளிலும் பணிகள் தொய்வின்றி நடப்பதை உறுதி செய்பவர் வட்டார வள மைய ஆசிரியப் பயிற்றுநர் ஆவார்.

3. பள்ளிகளில் வங்கிக் கணக்கு துவக்குதல் பணி மேற்கொள்ளும் அட்டவணையை வட்டாரக் கல்வி அலுவலர் தலைமையாசிரியர்களுக்குத் தெரிவிக்கும் பொறுப்பு இவரைச் சாரும்.

கால மற்றும் 4. வட்டாரத்திலுள்ள ஆசிரியப் பயிற்றுநர்கள் அனைவரும் தத்தமது கண்காணிப்புப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு முன்கூட்டியே வங்கிக் கணக்கு துவக்கும் பணியை மேற்கொள்ளும் கால் அட்டவணையைத் தெரிவிக்கும் பொறுப்புடையவர், வங்கிப் பணியாளர்கள் பள்ளிக்குச் சென்ற பின்னர், பள்ளித் தலைமையாசிரியர் இவ்வசதியினை குழந்தைகளுக்கு ஏற்படுத்துவதை உறுதி செய்பவர் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் ஆவார்.

5. தங்களது வட்டாரத்தில் நாள்தோறும் மேற்கொள்ளும் பணியினை கண்காணிக்கும் பொறுப்பு வளமைய மேற்பார்வையாளரையே சாரும்.

6. பள்ளியளவில் இப்பணிகள் நடைபெறும் நிலையில் இவற்றில் ஏதேனும் இன்னல்கள் ஏற்படின் உடன் சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் / பள்ளி முதல்வர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள், வங்கிகளின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், ஆகியோரை தொடர்புக் கொண்டு எவ்வித தொய்வுமின்றி பணிகள் நடைபெறுவதை உறுதி செய்யும் பொறுப்பு இவரை சார்ந்ததாகும்.

7. ஆசிரியர் பயிற்றுநர்கள் பள்ளியிலேயே வங்கிக் கணக்கு துவங்குதல் பணிகள் மேற்கொள்ளப்படும் விவரங்கள் குறித்து பெற்றோர்கள் அறிந்து கொள்ளும் வகையில் பள்ளித் தலைமையாசிரியர்கள் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கும் பொறுப்பு இவரை சாரும்.

8. பள்ளிகளில் மாணவர்களுக்கு வங்கிக் கணக்கு எண் பெறப்பட்டவுடன் அதன் விவரத்தை உடனே EMIS தளத்தில் தலைமையாசிரியர்கள் பதிவேற்றம் செய்வதை உறுதி செய்வதும் இவரது பொறுப்பாகும். அட்டவணை (II) பள்ளிக் கல்வி இயக்ககம்

1. பள்ளிக் கல்வி இயக்குநர் வங்கிக் கணக்கு துவங்குதல் பணி சார்ந்து EMIS இல் இருந்து பெறப்பட்ட முன்னேற்ற அறிக்கையின் படி முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு ஆய்வுக் கூட்டத்தினை நடத்தி உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வார்.

2. இப்பணியினைக் கண்காணிக்கும் பொறுப்பினை இயக்ககத்திலுள்ள ஏதேனுமொரு இணை இயக்குநருக்கு வழங்குதல் வேண்டும்.

3. பணி முன்னேற்றம் குறித்து மாவட்டங்களுக்கான அலுவலர்களுடன் ஆய்வினை மேற்கொள்வார்.

(அ) முதன்மைக் கல்வி அலுவலர் கண்காணிப்பு

1. வருவாய் மாவட்ட அளவில் ஆதார் புதுப்பித்தல் மற்றும் வங்கிக் கணக்குகள் துவங்குதல் பணிகளை ஒருங்கிணைப்பவர் முதன்மைக் கல்வி அலுவலரே ஆவார்.

2. கல்வித் தகவல் மேலாண்மையிலிருந்து விவரங்களைப் பெற்று வங்கிக் கணக்கு துவக்குவது அட்டவணையை உதவித் திட்ட அலுவலர் ஆகியோருடன் இணைந்து உருவாக்குதல் வேண்டும்.

3. வங்கிக் கணக்கு சார்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள் நடத்திடும் கால முறை ஆய்வுக் கூட்டத்திற்கான விவரங்களை வழங்கிடுவதுடன், பணிகளை மேற்கொள்வதில் இடையூறுகள் ஏதேனும் இருப்பின் அதனை மாவட்ட ஆட்சித் தலைவரின் கவனத்திற்கு உடனுக்குடன் கொண்டு சென்று நிவர்த்திக்கும் பொறுப்பு இவரைச் சாரும்.

4. தங்களது மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் (LDM) மற்றும் அஞ்சலக முதன்மை கண்காணிப்பாளர்களுடன் அடிக்கடி தொடர்பு கொண்டு பணி முன்னேற்றம் குறித்து கலந்தாலோசிக்க வேண்டும்.

5. தங்களது மாவட்டத்திலுள்ள மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை), மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி), மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) ஆகியோருடன் கலந்தாலோசித்து பணிகளை மேற்கொள்வதற்கான திட்டம் வகுத்தல் பணி முன்னேற்றத்தினை கண்காணிக்கும் பொறுப்பு இவரைச் சார்ந்ததாகும். 6. மாவட்ட அளவில் நடைபெறும் தலைமையாசிரியர்கள் பள்ளி முதல்வர்கள் கூட்டத்தில் வங்கிக் கணக்கு துவக்குதல் சார்ந்த விவரத்தினையும் ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் மேற்கொள்ளபட்ட விவரத்தினை ஒரு கூட்டப் பொருளாக வைத்து விவாதித்தல் வேண்டும்.

7. கள ஆய்வு மேற்கொள்ளும் போது வங்கிக் கணக்கு துவக்குதல் சார்ந்த பணிகளையும் ஆய்வு செய்தல் வேண்டும்.

(ஆ) மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை)

1. கல்வி மாவட்ட அளவில் இப்பணிகளை ஒருங்கிணைப்பவர் மாவட்டக் கல்வி அலுவலர் ஆவார்.

2. கல்வி மாவட்டத்திலுள்ள அரசு/ அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், இப்பணி நடைபெறுவதை கண்காணிக்கும் பணி மாவட்டக் கல்வி அலுவலரைச் சாரும்.

3. முதன்மைக் கல்வி அலுவலருடன் கலந்தாலோசித்து உருவாக்கப்பட்ட கால அட்டவணையின்படி பணிகள் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்.

4.கல்வி மாவட்ட அளவிலான தலைமையாசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டத்தில் இதனை ஒரு ஆய்வுப் பொருளாக வைத்து விவாதித்தல் வேண்டும்.

அட்டவணை (III) தொடக்கக் கல்வி இயக்ககம்

1. மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி ) வட்டாரக் கல்வி அலுவலர்கள் ஆகியோருக்கு ஆய்வுக் கூட்டம் நடத்தி பணி முன்னேற்ற அறிக்கை குறித்து விவாதித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

2. வங்கிக் கணக்கு துவங்குதல் சார்ந்த பணிகளை ஒருங்கிணைக்க இணை இயக்குநர் ஒருவரை பொறுப்பு அலுவலராக நியமித்தல் வேண்டும்.

. (அ) மாவட்டக் கல்வி அலுவலர்: ( தொடக்கக் கல்வி )

1. முதன்மை கல்வி அலுவலருடன் கலந்தாலோசித்து உருவாக்கப்பட்ட கால அட்டவணைப்படி பள்ளிகளில் ஆதார் புதுப்பித்தல் மற்றும் வங்கிக் கணக்கு துவக்குதல் பணி நடைபெறுவதை கண்காணித்தல் வேண்டும்.

2. ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள் / நடுநிலைப் பள்ளிகள், அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகள் ஆகியவற்றில் இப்பணிகள் நடைபெறுவதில் தொய்வு ஏற்படின் இவரே முழு பொறுப்பாவார். 3. வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார மேற்பார்வையாளர்கள் ஆகியோருக்கு ஆய்வுக் கூட்டம் நடத்தி பணிகள் தொய்வின்றி நடைபெறுவதை உறுதி செய்தல் வேண்டும்.

(ஆ) வட்டாரக் கல்வி அலுவலர் வளமைய 1. வட்டார அளவில் அனைத்துப் பள்ளிகளிலும் ஆதார் புதுப்பித்தல் மற்றும் வங்கிக் கணக்கு துவக்குதல் பணி தொய்வின்றி நடைபெறுவதற்கு திட்டம் வகுத்து அளிப்பவர் வட்டாரக் கல்வி அலுவலர் ஆவார்.

2. வங்கிப் பணியாளர்கள் பள்ளிகளுக்கு வருகை புரிவது சார்ந்த தகவல்களை தலைமையாசிரியர்களுக்கு வழங்குவது இவரது பொறுப்பாகும்.

3. பணி முன்னேற்ற அறிக்கை சார்ந்து மேற்பார்வையாளர் மற்றும் ஆசிரியர் வட்டார வளமைய பயிற்றுநர்களுடன் உடனுக்குடன் கலந்தாலோசித்தல் வேண்டும்.

4. வங்கிப் பணியாளர்கள் தமது பணியினை எவ்வித சிரமுமின்றி ஆற்றிட ஏதுவாக தலைமையாசிரியர்கள் ஒத்துழைப்பு வழங்கிட அறிவுறுத்தல் வேண்டும்.

5. பள்ளிகளில் மாணவர்களுக்கு வங்கிக் கணக்கு எண் பெறப்பட்டவுடன் அதன் விவரத்தை உடனே உடனே EMIS தளத்தில் EMIS தளத்தில் தலைமையாசிரியர்கள் பதிவேற்றம் செய்வதை உறுதி செய்தல் வேண்டும். அட்டவணை (IV): தனியார் பள்ளிகள் இயக்ககம்:

1. தமிழ்நாட்டிலுள்ள அனைத்து தனியார் சுய நிதிப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கும் ஆதார் புதுப்பித்தல் போலவே வங்கிக் கணக்கு துவக்குதல் வசதி பள்ளியிலேயே செய்யப்பட்டுள்ளதால் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களிடமும் (தனியார் பள்ளி) பணி முன்னேற்றம் குறித்த ஆய்வினை மேற்கொள்ள வேண்டும்.

2. மாவட்டக் கல்வி அலுவலர் : (தனியார் பள்ளிகள்) தங்களது கட்டுப்பாட்டில் செயல்படும் தனியார் பள்ளிகளான மழலையர் தொடக்கப் பள்ளிகள், மெட்ரிக் இணைவு பெற்ற பள்ளிகள் பள்ளிகள் மற்றும் மற்ற வாரியங்களுடன் அனைத்திலும் வங்கிக் கணக்கு துவக்குதல் மேற்கொள்ளப்படும் என்பதால், இதற்கான செயல் திட்டம் ஒன்றினை வகுத்து பள்ளி நிர்வாகத்தினருக்கும் தெரிவித்திடும் பொறுப்பு இவரையே சாரும்.

அட்டவணை (V) அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள்:

1. தலைமையாசிரியர்கள் தமது பள்ளியில் பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் வங்கிக் கணக்கு துவக்குதல் மற்றும் ஆதார் விவரம் புதுப்பித்தல் மேற்கொள்ளப்பட்டதை உறுதி செய்யும் பொறுப்பு இவரைச் சார்ந்ததாகும்.

2. முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர்களால் நிர்ணயிக்கப்பட்ட கால அட்டவணையின்படி தங்களது பள்ளிக்கு வங்கிப் பணியாளர்கள்வருகை தரும் போது அவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் பணியினை மேற்கொள்ள ஏற்பாடு செய்தல் இவரது பொறுப்பாகும்.

3. மாணவர்கள் இச்சேவையினை பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழுவினருக்கு தகவல் தெரிவித்து முழுமையாக இவ்வசதியினை மாணவர்கள் பெறுவதற்கு வழிவகுப்பவர் இவரே. மேற்கொள்ளும்

4. வங்கிக் கணக்கு துவக்குதல் மேற்கொள்ளும் பணியானது அந்தந்தப் பள்ளியிலுள்ள தலைமையாசிரியர்கள் / முதல்வர்களின் மேற்பார்வையிலுள்ள பகுதியில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

5. மாணவர்களின் வங்கி கணக்கு விவரம் EMIS-ல் விடுபட்டிருப்பின் அதனை மாணவர்களிடம் பெற்று EMIS-ல் பதிவு செய்ய வேண்டும், EMIS 6. வங்கி கணக்கு இல்லாத மாணவர்கள் மேல் குறிப்பிட்ட முகாமை பயன்படுத்தி வங்கி கணக்கு எண் பெற்று அதன் விவரங்கள் உடனடியாக இணையதளத்தில் உள்ளீடு செய்தல் வேண்டும்.

இச்செயல்முறைகளை அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு அனுப்பிட தக்க நடவடிக்கை எடுக்குமாறு முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள்( தொடக்கக் கல்வி) மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் ( தனியார் பள்ளிகள்) கேட்டுக்கொள்ளப்படுறார்கள்.

இச்செயல்முறைகளின் அடிப்படைகளில் பள்ளித் துவங்கும் நாள் அன்றே நன்கு திட்டமிட்டு இச்செயல்பாட்டினை அனைத்து மாணவர்களும் பயன்பெறத் தக்கவகையில் கொடுக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றிடவும் தேவையான தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து ஆய்வு அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.

உடன் இச்செயல்முறைகளை பெற்றுக் கொண்டதற்கான ஒப்புதலை அனுப்பிடவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். வெ பள்ளிக் கல்வி இயக்குநர் தொடக்கக்கல்வி இயக்குநர் தனியார் பள்ளிகள் இயக்குநீர்

பெறுநர்:

அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்

அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள்(தொடக்கக்கல்வி) அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள்(தனியார் பள்ளிகள்) (மின்னஞ்சல் மூலமாக)

நகல்:

1. அரசுச் செயலர் பள்ளிக்கல்வித்துறை, சென்னை-9 -தகவலுக்காக பணிந்தனுப்பலாகிறது

2. மாநில திட்ட இயக்குநர், மாநில திட்ட இயக்ககம், சென்னை. CLICK HERE TO DOWNLOAD Students Bank Account 01-Jun-2024 DSE & DEE Proceedings - PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.