மனமொத்த மாறுதல் கலந்தாய்வு விண்ணப்பிப்பதற்கான அறிவுரைகள் வழங்கி பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு!!! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, May 19, 2024

மனமொத்த மாறுதல் கலந்தாய்வு விண்ணப்பிப்பதற்கான அறிவுரைகள் வழங்கி பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு!!!

மனமொத்தமாறுதல்

மனமொத்தமாறுதல் Emis ல் பதிவேற்றம் செய்யும் தேதி 16.6.2024 முதல் 19.6.2024 வரை

யாரெல்லாம் மனமொத்த மாறுதல், விண்ணப்பிக்கமுடியும்

1)ஓய்வு பெற இரண்டு ஆண்டுகள் மட்டுமே இருந்தால் அவர்கள் விண்ணபிக்க இயலாது.

2)ஏற்கனவே மனமொத்தமாறுதல் பெற்றிருந்தால் இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்திருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

3)அலகு விட்டு அலகு மனமொத்த மாறுதல் பெற முடியாது.

4)இரண்டிற்கும் மேற்பட்டவர்கள் மனமொத்த மாறுதல் விண்ணப்பிக்க இயலாது.

5) ஆண்கள், பெண்கள் பள்ளியில் ஆண்கள் படிக்கும் பள்ளியில் பெண் ஆசிரியரும் , பெண்கள் படிக்கும் பள்ளியில் ஆண் ஆசிரியரும் மனமொத்த மாறுதல் பெற முடியாது


Director of School Education orders giving instructions to apply for change of mind consultation!!! மனமொத்த மாறுதல் கலந்தாய்வு விண்ணப்பிப்பதற்கான அறிவுரைகள் வழங்கி பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு!!!

தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

ந.க.எண். 21516 / சி2 / இ1 / 2023

நாள் 15.06.2023

பொருள்:

பள்ளிக் கல்வி 2023-2024ம் ஆண்டு ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு மனமொத்த மாறுதல் விண்ணப்பங்கள் கல்வி தகவல் மேலாண்மை முறைமை (EMIS) இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் அறிவுரைகள் வழங்குதல் - சார்பு.

பார்வை:

1) அரசாணை (நிலை)எண்.176 பள்ளிக் கல்வி (பக5(1) துறை, நாள் 17.12.2021

2) சென்னை-6 பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் ந.க.எண்.25154/அ/இ2/2021, நாள் 30.12.2021

3) அரசாணை(நிலை)எண்.12 பள்ளிக் கல்வி (பக5(1) துறை, நாள்.03.02.2022

4) தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்.21243/சி3/இ1/2023, நாள் 26.4.2023& 11.5.2023. பார்வை-1ல் காணும் அரசாணையின் படி 2023-2024ம் கல்வியாண்டிற்கு அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்துவகை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நெறிமுறைகள் சார்பாக ஆணை வெளியிடப்பட்டு அதனடிப்படையில் பார்வை-4ல் காணும் செயல்முறைகளின் வாயிலாக அனைத்துவகை ஆசிரியர்களுக்கு மாவட்டத்திற்குள் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு நடைபெற்று முடிந்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக மாவட்டத்திற்குள் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் மனமொத்த மாறுதல் கோரும் (Mutual Transfer) ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு கல்வி தகவல் மேலாண்மை முறைமை EMIS இணையதள வழியாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வகையில் கீழ்க்காணும் அறிவுரைகளை பின்பற்றி மனமொத்த மாறுதல் கோரும் ஆசிரியர்களின் விண்ணப்பங்களை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும்படி அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மனமொத்த மாறுதல் கோரும் விண்ணப்பங்கள் பதிவேற்றம் - அறிவுரைகள்

1) பார்வை-1ல் காணும் அரசாணை பத்தி 6-ல் கண்டுள்ளபடி

(a) மனமொத்த மாறுதல் கோரும் ஆசிரியர் ஓய்வு பெறுவதற்கு முன் குறைந்தபட்சம் இரு கல்வி ஆண்டுகள் பணிக்காலம் உள்ளவர்களே தகுதியானவர்கள். (Example 2023-24 மற்றும் 2024-25 கல்வியாண்டுகளில் ஓய்வு பெறுபவர்களாக இருத்தல் கூடாது)

(b) ஏற்கனவே மனமொத்த மாறுதல் ஆணை பெற்றவர்கள் தற்போது பணிபுரியும் பள்ளியில் குறைந்தபட்சம் இரு ஆண்டுகள் பணிபுரிந்து இருத்தல் அவசியம்.

2) இரண்டிற்கும் மேற்பட்டவர்கள் (எ.கா மூவர்-triangular A-B-C, A-C-B etc.,) மனமொத்த மாறுதல் கோரும் விண்ணப்பங்களை ஏற்க கூடாது.

3) வெவ்வேறு துறை/ அலகுகளுக்கு (Department & Unit) மனமொத்த மாறுதல் கோரும் விண்ணப்பங்களை ஏற்ககூடாது.

4) ஆண் ஆசிரியர்கள் பெண்கள் மட்டும் பயிலும் (Girls High & Hr.Sec.) பள்ளிகளுக்கு மனமொத்த மாறுதல் கோரும் விண்ணப்பங்களை பரிசிலிக்ககூடாது. இருபாலர் பயிலும் மாணவர்கள் மற்றும் ஆண்கள் பயிலும் பள்ளிகளுக்கு மட்டும் அனுமதிக்கப்படுவர். EMISல் மனமொத்த மாறுதல் பதிவேற்றம் செய்யும் முறை

i) நடப்பு ஆண்டில் 2022-23 நடைபெற்ற பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொண்டு மாறுதல் ஆணை பெற்றவர்கள் மனமொத்த மாறுதல் கோரி விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள் ஆவர்.

ii) மனமொத்த மாறுதல் கோரும் ஆசிரியர் தனது Individual Teacher Login Transfer Application Mutual Transfer என்றவாறு மனமொத்த மாறுதலுக்கான படிவத்தில் தங்களது விவரங்களை முழுமையாக உள்ளீடு செய்யவேண்டும். மேலும் எந்த ஆசிரியருக்கு மனமொத்த மாறுதல் அளிக்கவிரும்புகிறார் என்பதனை அவ்வாசிரியரது EMIS ID (8 Digit ID) யை குறிப்பிட்டு Submit செய்யவேண்டும்.

பின்னர் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் தனது பள்ளியின் EMIS Login IDயில் உள்சென்று மேற்படி மாறுதல் கோரி விண்ணப்பித்த ஆசிரியரது விண்ணப்பத்தில் உள்ள விவரங்களை சரிபார்த்து Approval செய்யவேண்டும்.

இதன் தொடர்ச்சியாக சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்களது EMIS Login IDயில் உள்சென்று மனமொத்த மாறுதல் கோரும் ஆசிரியர்கள் இருவரது விவரங்களை ஒப்பிட்டு சரிபார்த்து பின்னர் Approve செய்து மாவட்டத்திற்குள் மனமொத்த மாறுதல் வழங்கும் ஆணைக்கான தனது அலுவலக ந.க. எண்ணினை குறிப்பிட்டு Order ஐ Generate செய்து கையொப்பம் இட்டு சார்ந்த ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நாளன்று வழங்கப்படவேண்டும். கால அட்டவணை

மனமொத்த மாறுதல் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்ய வேண்டிய நாட்கள் 16.06.2023 19.06.2023

மாறுதலுக்கான முன்னுரிமைப் பட்டியல் வெளியிடுதல் (Seniority List) 20.06.2023

மாறுதலுக்கான முன்னுரிமைப் பட்டியலில் திருத்தம் மற்றும் முறையீடுகள் இருப்பின் பதிவேற்றம் செய்ய வேண்டிய நாள் 21.06.2023

மாறுதல் விண்ணப்பங்களின் இறுதி முன்னுரிமைப் பட்டியல் வெளியிடுதல் (Final Seniority List) 22.06.2023

மனமொத்த மாறுதல் உள்மாவட்டம் மற்றும் வெளிமாவட்டம் (All Category Teacher) 23.06.2023

பள்ளிக் கல்வி இயக்குநற்காக

பெறுநர் :

அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள்(மின்னஞ்சல் மூலமாக)

நகல்: இணை இயக்குநர் (மேல்நிலைக் கல்வி) சென்னை-6 தகவலுக்காக

நகல்: EMIS ஒருங்கிணைப்பாளர், மாநில திட்ட இயக்ககம் சென்னை-6

நகல்: அனைத்து அரசு / நகராட்சி உயர்/மே.நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் (மு.க.அ. மூலமாக)

CLICK HERE TO DOWNLOAD பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.