விலக்கு பெற்றவர்களுக்கும் வருமான வரி சம்பள 'போர்டலில்' தொடருது குளறுபடி - ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் புலம்பல் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, April 23, 2024

விலக்கு பெற்றவர்களுக்கும் வருமான வரி சம்பள 'போர்டலில்' தொடருது குளறுபடி - ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் புலம்பல்

விலக்கு பெற்றவர்களுக்கும் வருமான வரி சம்பள 'போர்டலில்' தொடருது குளறுபடி

ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் புலம்பல்

ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு ஐ.எப். ஹெச்.ஆர்.எம்.எஸ்., என்ற ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைப் பில் (சம்பள போர்ட் டல்) சம்பளம், பணப் பலன்கள் வருமான வரி பிடித்தம் தொடர்பான விவரங்களை பதிவேற் றம் செய்வதற்கான உள் ளீடுகள் இல்லாததால் விலக்கு பெற்றவர்களுக் கும் வருமானவரி பிடித் தம் செய்யப்படுகிறது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அவர்கள் வருமானத்தில் இருந்து செலவுகளை கணக்கிட்டு அதற்கு ஏற்ப நிதியாண்டு துவக்கத்தில் புதிய அல் லது பழைய வருமான வரித்திட்டத்தை தேர்வு செய்வர். ஆனால் புதிய நடைமுறையாக ஒவ் வொரு மாதமும் செயலி மூலம் விவரம் பதிவேற் றம் செய்ய வேண்டும்.

அவ்வாறு இல்லையென் றால் புதிய வருமான வரித் திட்டத்தின்படி பிடித்தம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.

ஆனால் சம்பள 'போர்ட்டலில்' அதற்கான போதிய உள்ளீடுகள் இல் லாததால் பழைய வரு மான வரித் திட்டத்தில் விவரம் தாக்கல் செய்தா லும் புதிய வருமானவரி திட்டத்தில் தான் பிடித் தம் செய்யப்படுகிறது. இதில் குளறுபடிகள் ஏற்படுவதால் வருமான வரி எவ்வளவு பிடித்தம் செய்யப்படுகிறது என்ற விவரம் சம்பந்தப்பட்ட வர்களே அறிந்துகொள்ள முடிவதில்லை. இதுகுறித்து ஆசிரியர் கள் கூறியதாவது:

பழைய வருமான வரிப்படி விவரங்கள் பதிவேற் றம் செய்யும் போது சேமிப்பு, வீட்டுக்கடன், மருத்துவக் காப்பீடு, மாற்றுத்திறனாளி நிலை குறித்த உள்ளீடுகளை சம்பள 'போர்ட்டல்' ஏற்பதில்லை. இதனால் புதிய வரி முறையில் தான் பிடித்தம் செய்யப்ப டுகிறது.

இதனால் பணப்பலன் களில் பாதிப்பு ஏற்ப டுகிறது. மேலும் வரி விலக்கு பெற்ற ஆசிரியப் பணியிலுள்ள பாதிரியார், கன்னியாஸ்திரிகள், மாற் றுத்திறனாளி ஆகியோருக் கும் புதிய வரிமுறையில் பிடித்தம் செய்யப்படு கிறது. சில மேல்நிலை பள்ளி களில் தூய்மை பணியா ளர்கள் உட்பட சம்பளம் அடிப்படையில் வருமான வரி விலக்கு பெற்றவர் களுக்கும் வரிப்பிடித்தம் செய்யப்படுவது அதிர்ச் சியாக உள்ளது. சம்பள 'போர்ட்டலில்' உள்ளீடு செய்யும் அலுவலர்க ளுக்கு சரியான பயிற்சி இல்லாததே இதற்கு காரணம். இதனால் மன உளைச்சல் ஏற்படுகிறது என்றனர்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.