1-9 வகுப்புகளுக்கு நாளை முதல் கோடை விடுமுறை அறிவிப்பு
சென்னை, ஏப். 22: ஒன்றாம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரையி லான மாணவர்களுக்கு புதன்கிழமை (ஏப்.24) முதல் கோடை விடு முறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பிளஸ் 1, பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவ, மாணவி களுக்கு மார்ச் 1 முதல் ஏப்.8 வரை பொதுத் தேர்வு நடைபெற்று முடி வடைந்தது. தொடர்ந்து 1-9 வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறு தித் தேர்வு ஏப்.2 முதல் தொடங்கியது. இந்தத் தேர்வுகள் ஏப்.12-இல் முடிக்கப்பட்டு ஏப்.13 முதல் கோடை விடுமுறை அளிக்க பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டிருந்தது.
இதற்கிடையே, 4-9 வகுப்பு மாணவர்களுக்கு ஏப்.10, 12 ஆகிய நாள்களில் நடைபெறவிருந்த தேர்வுகள் ரமலான் பண்டிகை கார ணமாக, முறையே ஏப்.22, 23 ஆகிய தேதிகளுக்கு ஒத்திவைக்கப்பட் டன.
அந்த வகையில் இறுதித் தேர்வுகள் செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடையவுள்ளன. இதைத் தொடர்ந்து மாணவர்களுக்கு ஏப்.24 முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக வாய்ப்பு: வழக்கமாக ஜூன் ஒன்று அல்லது இரண்டாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். கடந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் அதிகமிருந்ததால் பள்ளிகள் திறப்பு தாமதமானது.
இரண்டு முறை தள்ளிப் போன நிலையில் ஜூன் 12-ஆம் தேதி 6 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. தொடர்ந்து, ஜூன் 14-ஆம் தேதி ஒன்று முதல் ஐந் தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட் டன.
1 முதல் 9 வகுப்புகளுக்கு நாளை முதல் கோடை விடுமுறை அறிவிப்பு
இந்த நிலையில், வரும் கல்வியாண்டிலும் (2024-2025) வெயிலின்
தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
மேலும், ஜூன் 4-ஆம் தேதி மக்
களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
எனவே,
அதன்பிறகே பள்ளிகள் திறப்பு இருக்கும் என பள்ளிக் கல்வித் துறை
வட்டாரங்கள் தெரிவித்தன.
அதேவேளையில், பெரும்பாலான
தனியார் பள்ளிகள் வரும் கல்வியாண்டுக்கான திட்டமிடலை தற்
போதே மேற்கொண்டு வருகின்றன.
இதுதொடர்பாக பெற்றோர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை
யில், ஒன்று முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும்
ஜூன் 6-ஆம் தேதியும், எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகளுக்கு ஜூன் 17-
ஆம்தேதியும் பள்ளிகள் திறக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
Tuesday, April 23, 2024
New
1-9 வகுப்புகளுக்கு நாளை முதல் கோடை விடுமுறை அறிவிப்பு
Holiday
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.