Procedures of the Director of School Education regarding the follow-up action to be taken on audit sanctions - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, February 6, 2024

Procedures of the Director of School Education regarding the follow-up action to be taken on audit sanctions



Procedures of the Director of School Education regarding the follow-up action to be taken on audit sanctions தணிக்கை தடைகள் மீது மேற்கொள்ள வேண்டிய தொடர் நடவடிக்கைகள் குறித்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

பள்ளிக்கல்வி அகத்தணிக்கை

சென்னை-06, தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் நி.மு.எண்.3858/ அகத்தணிக்கை/2024-1, நாள்.31.01.2024

பொருள்:

பள்ளிக்கல்வித் துறை - அகத்தணிக்கை - அனைத்து அரசு / நிதியுதவி / பகுதி நிதியுதவி பள்ளிகள் /பயிற்சி நிலையங்கள் மற்றும் சார்ந்த அலுவலகங்களில் மேற்கொள்ளப்படும் அகத்தணிக்கை தணிக்கைத் தடைகள் – தொடர்நடவடிக்கை மேற்கொள்ளு{ }தல் - சார்பாக.

பார்வை: 1. அரசாணை நிலை எண்.704, கல்வித்துறை (V2) அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை, நாள்.19.04.1982

2. அரசானை (நிலை) எண்.151, பள்ளிக்கல்வித்துறை, நாள்.09.09.2022 பள்ளிக்கல்வி இயக்குநரின் கடித

3. 15.85.61600T.48853/ அகத்தணிக்கை(நி.ஆ(ம) மு.க.அ) / 2023-1, நாள்.28.09.2023

4. இவ்வியக்கக செயல்முறைகள் ந.க.எண்.053130 /அகத/ 2023, நாள்.24.01.2024 பார்வை 3-00 ஏற்கனவே வெளியிடப்பட்ட பள்ளிக்கல்வி அகத்தணிக்கை நெறிமுறைகள் மீள வலியுறுத்தப்படும் நிலையில், அதனைத் தொடர்ந்து, பள்ளிக்கல்வித் துறையின் கீழ் செயல்படும் அரசு / நிதியுதவி / பகுதி நிதியுதவி பள்ளிகள் / பயிற்சி நிலையங்கள் மற்றும் சார்ந்த அலுவலகங்களில் அகத்தணிக்கைகளின் அடிப்படையில் வெளியிடப்படும் தணிக்கை அறிக்கையின் மீது கீழ்க்கண்ட தொடர் நடவடிக்கைகள் உடனடியாக தவறாது மேற்கொள்ள சார்ந்த அலுவலர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள் :-

அ) முந்தைய மற்றும் நடப்பு நிதி சார்ந்த தணிக்கை தடைகள் குறிப்பாக 21(இ) மற்றும் 21(உ) அறிக்கை பெறப்பட்ட இரண்டு வாரங்களுக்குள் சார்ந்த ஆசிரியர்கள் / தலைமையாசிரியர்கள் / வட்டாரக்கல்வி அலுவலர்கள் / பணியாளர்களின் பணிப்பதிவேட்டில் பதியப்பட வேண்டும். ஆ) இரண்டு வாரங்களுக்குள் சார்ந்த ஆசிரியர்கள் / தலைமையாசிரியர்கள் / வட்டாரக்கல்வி அலுவலர்கள் / பணியாளர்களூக்கு தணிக்கைத் தடைகள் சார்பு செய்யப்பட வேண்டும்.

இ) சார்ந்த ஆசிரியர்கள் / தலைமையாசிரியர்கள் / வட்டாரக்கல்வி அலுவலர்கள் / பணியாளர்கள் பணி மாறுதலில் செல்லும் போது நிதி சார்ந்த தணிக்கை தடைகள் குறித்து முன் ஊதிய சான்றில் (LPC) தவறாது குறிப்பிடப்பட வேண்டும்.

ஈ) ஓய்வுப் பெற்ற / பெறும் நாள் வரை தணிக்கை செய்யப்பட்டு பெறப்பட்ட தணிக்கை அறிக்கையின் அடிப்படையில் மட்டுமே சார்ந்த ஆசிரியர்கள் / தலைமையாசிரியர்கள் /* வட்டாரக்கல்வி அலுவலர்கள் மற்றும் இதர பணியாளர்கள் மீது முந்தைய மற்றும் நடப்பு நிதி சார்ந்த தணிக்கை தடைகள் குறிப்பாக 21(இ) மற்றும் 21(உ) ஏதும் நிலுவையில் இல்லை என்பதை உறுதி செய்து, அதன் பின்னரே சார்ந்த ஆசிரியர்கள் / தலைமையாசிரியர்கள் / வட்டாரக்கல்வி அலுவலர்கள் மற்றும் இதர பணியாளர்களுக்கு "தடையின்மைச் சான்று” (NOC) வழங்கப்பட வேண்டும். உ) பார்வை 3-ல் தெரிவிக்கப்பட்டுள்ள நடைமுறைகளை பின்பற்றி இரண்டு மாதத்திற்குள் தணிக்கை தடைகள் களைந்திட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

2. மேலே பத்தி 1-ல் அ முதல் உ வரையில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை தவறாது பின்பற்றுமாறும், பின்பற்றப்படாத நிலையில், அரசிற்கு ஏற்படும் கூடுதல் நிதி இழப்புகளுக்கு சார்ந்த ஆசிரியர்கள் / தலைமையாசிரியர்கள் / வட்டாரக்கல்வி அலுவலர்கள் / பணியாளர்களுக்கு தடையின்மைச் சான்று (NOC) வழங்கிய அலுவலர் மற்றும் சார்ந்த சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர் (DDO) பொறுப்பாவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

முனைவர்

க.அறிவொளி பள்ளிக்கல்வி இயக்குநர்

பெறுநர்

அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்கள்

{தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து தலைமையாசிரியர்களுக்கு சார்பு செய்து அதன் ஒப்புதல் கடிதம் அனுப்பப்பட வேண்டும்)

2. அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்கள் (தொடக்கக்கல்வி / இடைநிலைக்கல்வி/ தனியார் பள்ளிகள்)

{தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்கள் / தலைமையாசிரியர்களுக்கு சார்பு செய்து அதன் ஒப்புதல் கடிதம் அனுப்ப வேண்டும்)

3. அனைத்து தணிக்கையாளர்கள், பள்ளிக்கல்வித் துறை

நகல்

(அனைத்து பள்ளி / அலுவலகங்களில் தணிக்கை ஆரம்பிக்கப்படும் முன், முந்தைய / நடப்பு தணிக்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள 21 (இ) மற்றும் 21(உ) சார்ந்த அனைத்து தணிக்கை தடைகளையும் சார்ந்த பணிப்பதிவேட்டில் பதியப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்)

1. பள்ளிக்கல்வி இயக்குநர், சென்னை-06 அவர்களுக்கு தகவலின் பொருட்டு பணிந்தனுப்பப்படுகிறது.

2. தொடக்கக்கல்வி இயக்குநர், சென்னை-06 அவர்களுக்கு தகவலின் பொருட்டு பணிந்தனுப்பப்படுகிறது.

3.நிதிக் கட்டுப்பாட்டு அலுவலர், சென்னை-06 அவர்களுக்கு தகவலின் பொருட்டு பணிந்தனுப்பப்படுகிறது,

CLICK HERE TO DOWNLOAD பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.