நான் முதல்வன் திட்டத்திற்கு மே - 2023 மாதம் பள்ளிக்கு வருகை புரிந்த முதுகலை ஆசிரியர்களுக்கு அதிகபட்சம் 6 நாட்கள் ஈடு செய்யும் விடுப்பு வழங்கி பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, September 21, 2023

நான் முதல்வன் திட்டத்திற்கு மே - 2023 மாதம் பள்ளிக்கு வருகை புரிந்த முதுகலை ஆசிரியர்களுக்கு அதிகபட்சம் 6 நாட்கள் ஈடு செய்யும் விடுப்பு வழங்கி பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவு

நான் முதல்வன் திட்டத்திற்கு மே - 2023 மாதம் பள்ளிக்கு வருகை புரிந்த முதுகலை ஆசிரியர்களுக்கு அதிகபட்சம் 6 நாட்கள் ஈடு செய்யும் விடுப்பு வழங்கி பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவு!!

"நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளில் அமைக்கப்படவிருக்கும் பள்ளி அளவிலான உயர்கல்வி வழிகாட்டல், ஆலோசனைக்குழு (Career Guidance Cell) 06.05.2023 முதல் செயல்படவுள்ளதாகவும், பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான பின்னர், உயர்கல்வி சார்ந்த தகவல்கள், விண்ணப்பங்கள் பூர்த்தி செய்தல், கல்லூரிக் கட்டண ஏற்பாடுகள் என பல்வேறு உதவிகளை பள்ளிகளின் வாயிலாக செய்திட அனைத்து மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் உயர்கல்வி பயிற்சி பெற்ற முதுகலை ஆசிரியர்கள், 08.05.2023 முதல் குறைந்தது 2 பேர் சுழற்சி முறையில் பள்ளிக்கு வருகை தர வேண்டுமென்றும், அவ்வாறு விடுமுறை நாள்களில் பள்ளிகளுக்கு வருகை புரிந்து மாணவர்களின் உயர்கல்விக்கு உதவும் அனைத்து முதுகலை ஆசிரியர்களுக்கும் அவர்கள் பணிபுரிந்த நாள்களுக்கு ஈடு செய்யும் விடுப்பு வழங்கப்படும் என பார்வை 1 இல் காணும் தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.