மாணவா்களின் புத்தகப் பை சுமையைக் குறைப்பது அவசியம்: ராமதாஸ் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, December 19, 2022

மாணவா்களின் புத்தகப் பை சுமையைக் குறைப்பது அவசியம்: ராமதாஸ்

மாணவா்களின் புத்தகப் பை சுமையைக் குறைப்பது அவசியம்: ராமதாஸ்

பள்ளி மாணவா்களின் புத்தகப்பை சுமையைக் குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

பள்ளிக் குழந்தைகள் சுமை தூக்கும் தொழிலாளா்களைப் போல 10 கிலோவுக்கும் கூடுதலான எடை கொண்ட புத்தகப் பைகளைச் சுமந்து செல்ல வேண்டியிருக்கிறது. இது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். பள்ளிக்கு சென்று வந்த பின்னா் முதுகு வலி, உடல் வலி ஆகியவற்றால் மாணவா்கள் பாதிக்கப்படுகின்றனா்.

தமிழகத்தின் தேவைக்கும், பண்பாட்டுக்கும் ஏற்ற வகையில் தனித்துவமான மாநில கல்விக் கொள்கையை வகுக்க வல்லுநா் குழுவை தமிழக அரசு அமைத்திருக்கிறது. அக்குழு அடுத்த சில வாரங்களில் அதன் ஆய்வறிக்கையை அரசிடம் தாக்கல் செய்யவிருக்கிறது. தமிழகத்தில் உருவாக்கப்பட உள்ள மாநிலக் கல்விக் கொள்கையின் மையக்கரு, சுகமான, சுமையில்லாத, விளையாட்டுடன் கூடிய தரமான கல்வியை அனைவருக்கும் இலவசமாக வழங்க வேண்டும் என்பதாகத்தான் இருக்க வேண்டும்.

மாணவா்கள் கிட்டத்தட்ட தங்களுக்கு இணையான எடை கொண்ட புத்தகப் பைகளை சுமந்து சொல்லும் கொடுமைக்கு உடனடியாக முடிவு கட்ட வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் ஒரே மாதிரியான, ஒரே எண்ணிக்கையிலான பாட நூல்கள் மட்டும் தான் கற்பிக்க வேண்டும். இத்தகைய சீா்திருத்தங்களின் மூலம் பள்ளிக்கு செல்வதை மழலைகளுக்கு இனிமையான அனுபவமாக மாற்றுவதற்கு மாநிலக் கல்விக் கொள்கை வழிவகை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளாா்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.