ரூ.2,09,200 சம்பளத்தில் மாவட்ட கல்வி அலுவலர் பணி: விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 13.1.2023 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, December 20, 2022

ரூ.2,09,200 சம்பளத்தில் மாவட்ட கல்வி அலுவலர் பணி: விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 13.1.2023

தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை பணியில் மாவட்ட கல்வி அலுவலர்(தொகுதி IC பணி) பதவிக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்விற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறிக்கை எண்.37/2022 விளம்பர எண்.643

பதவி: மாவட்ட கல்வி அலுவலர்

காலியிடங்கள்: 11

சம்பளம்: 56,900 - 2,09,200

வயதுவரம்பு: 1.7.2022 தேதியின்படி கணக்கிடப்படும். அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், பொருளாதாரம், புவியியல், வரலாறு, வணிகம், தமிழ் மற்றும் ஆங்கிலம் போன்ற ஏதாவதொரு பிரிவில் 50 சதவீத மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் மற்றும் பி.டி. அல்லது பி.எட் முடித்திருக்க வேண்டும். இடைநிலைக்கல்வி பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 அல்லது இணையான கல்வித் தகுதி இவைகளில் ஏதாவதொன்றில் தமிழை ஒரு பாடமாக படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விரிவான விவரங்களுக்கு அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

கட்டணம் விவரம்: பதிவுக் கட்டணம் ரூ.150, முதனிலைத் தேர்வு கட்டணம் ரூ.100, முதன்மை எழுத்துத் தேர்வு கட்டணம் ரூ.200. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். கட்டண விலக்கு குறித்த தகவலை அறிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தேர்வு செய்யப்படும் முறை: மூன்று நிலைகளை கொண்டது. அதவாது முதல்நிலைத் தேர்வு, முதன்மை எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு, வாய்மொழித் தேர்வு, கலந்தாய்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். முதல்நிலைத் தேர்வு பெற்ற மதிப்பெண்கள் இறுதித் தகுதியை முடிவு செய்வதற்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது. 

விண்ணப்பிக்கும் முறை: www.tnpscexams.in / www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

முதல்நிலைத் தேர்வு நடைபெறும் நாள்: 9.4.2023

முதன்மைத் தேர்வு நடைபெறும் நாள்: முதல்நிலைத் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் வெளியிடப்பட்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 13.1.2023

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.