ஆசிரியரை `ரிக்கார்டு கிளார்க்` ஆக மாற்றும் அரசு: பட்டதாரி ஆசிரியர்கள் குற்றச்சாட்டு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, November 23, 2022

ஆசிரியரை `ரிக்கார்டு கிளார்க்` ஆக மாற்றும் அரசு: பட்டதாரி ஆசிரியர்கள் குற்றச்சாட்டு

ஆசிரியரை ரிக்கார்டு கிளார்க் ஆக மாற்றும் அரசு: பட்டதாரி ஆசிரியர்கள் குற்றச்சாட்டு

''ஆசிரியர்களை கற்பித்தல் பணியில் ஈடுபடுத்தாமல், 'ரிக்கார்டு கிளார்க்' பணியை மட்டுமே செய்ய வைக்கும் கல்வித்துறை உயர் அதிகாரிகளை கண்டித்து நவ., 29 மாநில அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்,'' என, சிவகங்கையில் தமிழ்நாடு உயர், மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொதுசெயலாளர் எஸ்.சேதுசெல்வம் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: ஆசிரியர்களுக்கு கற்பித்தல் பணியை தவிர்த்து பிற பணிகளை வழங்க கூடாது. ஆசிரியர்களை 'ரிக்கார்டு கிளார்க்' களாக மாற்ற நினைக்கும் அரசின் எண்ணத்தை கைவிட வேண்டும்.

பள்ளி இறுதி தேர்வு வரவுள்ள நிலையில் ஆசிரியர்கள் தடையின்றி கற்பித்தல் பணியை மேற்கொள்ள முன்வர வேண்டும். ஜூலை 1 முதல் முடக்கி வைத்துள்ள அகவிலைப்படியை நிலுவையுடன் அரசு வழங்க வேண்டும். உயர்கல்வி தகுதி ஆசிரியர்களுக்கு ஊக்க சம்பளத்தை மீண்டும் வழங்க வேண்டும். கடந்த அ.தி.மு.க., அரசு அடுக்கடுக்காக செய்த தவறுகளால் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாமல் உள்ள 1,500 ஆசிரியர்களுக்கு டி.இ.டி., தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.

கடந்த 2004 முதல் 2006 வரை பணியில் அமர்த்தப்பட்ட ஆசிரியர்களை நியமன நாளில் இருந்தே பணி வரன்முறை செய்ய வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி நவ., 29 மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்கள் முன் மாலை நேர கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும், என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.