அரசு/ உதவி பெறும் பள்ளிகளில் 4 மற்றும் 5-ஆம் வகுப்பில் முதலாம் வகுப்பு கற்றல் நிலையில் உள்ள மாணவர்களுக்கு SCERTவடிவமைத்துள்ள தமிழ், ஆங்கிலம் & கணிதப் பாடத்திற்கான இணைப்புப் பாட பயிற்சி நூல் (Bridge course) இரண்டாம் பருவத்தில் நடைமுறைப்படுத்த அறிவுறுத்தல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, November 23, 2022

அரசு/ உதவி பெறும் பள்ளிகளில் 4 மற்றும் 5-ஆம் வகுப்பில் முதலாம் வகுப்பு கற்றல் நிலையில் உள்ள மாணவர்களுக்கு SCERTவடிவமைத்துள்ள தமிழ், ஆங்கிலம் & கணிதப் பாடத்திற்கான இணைப்புப் பாட பயிற்சி நூல் (Bridge course) இரண்டாம் பருவத்தில் நடைமுறைப்படுத்த அறிவுறுத்தல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

அரசு/ உதவி பெறும் பள்ளிகளில் 4 மற்றும் 5-ஆம் வகுப்பில் முதலாம் வகுப்பு கற்றல் நிலையில் உள்ள மாணவர்களுக்கு SCERTவடிவமைத்துள்ள தமிழ், ஆங்கிலம் & கணிதப் பாடத்திற்கான இணைப்புப் பாட பயிற்சி நூல் (Bridge course) இரண்டாம் பருவத்தில் நடைமுறைப்படுத்த அறிவுறுத்தல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

பார்வை:

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் கடித நக.எண்.2411/12/2021, நாள் 18.10.2022

பார்வையில் காணும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் கடிதத்தில், கரோனா பெருந்தொற்றினால் பள்ளிகள் மூடப்பட்டிருந்ததைத் தொடர்ந்து கற்றல் இடைவெளி மாணவர்களிடம் அதிகரித்திருந்தது கண்டறியப்பட்டதாகவும், இக்கற்றல் இடைவெளியை களைய அடிப்படைத் திறனாய்வு மதிப்பீட்டு 1 முதல் 5ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நடத்தப்பட்டதாவும், இவ்வடிப்படைத் திறனாய்வு மதிப்பீட்டில் 4 மற்றும் 5ஆம் வகுப்பில் பயிலும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாணவர்கள் முதலாம் வகுப்பு கற்றல் நிலையில் உள்ளதாக கண்டறியப்பட்டதாகவும் இம்மாணவர்கள் மொழி பாடத்தில் எழுத்துக்களை அறியாததால், எழுத்துக்கூட்டிப் படித்துப் பொருள் அறிய சிரமப்படுவதாகவும், கணக்கு பாடத்தில் எண்ணும், எண்மதிப்பும் அறியாததால் கூட்டல் கழித்தல் போன்ற அடிப்படை கணக்குகளை செய்ய இயலாத நிலையில் உள்ளது கண்டறியப்பட்டதாகவும் குறிப்பிட்டு, முதலாம் வகுப்பு கற்றல் நிலையில் உள்ள 4 மற்றும் 5ஆம் வகுப்பிலுள்ள மாணவர்களுக்கு இணைப்புப் பாட பயிற்சி நூல் (Bridge course) வழங்கப்படவுள்ளதாகவும் இதன் மூலம் அடிப்படை எழுத்து மற்றும் எண்கள் அறியாத மாணவர்களுக்கு அவற்றை கற்பதற்கான வாய்ப்பு அமையும் எனக் குறிப்பிட்டு இதனை இரண்டாம் பருவத்தில் அனைத்து அரசு மற்றும் ஈரசு உதவி பெறும் பள்ளிகளில் 4 மற்றும் 5ஆம் வகுப்பில், முதலாம் வகுப்பு கற்றல் நிலையில் உள்ள மாணவர்களுக்கு நடைமுறைப்படுத்தி இணைப்புப் பாட பயிற்சி நூல் (Bridge course) பயிற்சிகளை மேற்கொள்ளச் செய்து கற்றல் அடைவை உறுதி செய்ய உரிய -அறிவுரைகளை அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்கள்.

மேற்படி, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் கேட்டுக் கொண்டதற்கிணங்க, அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 4 மற்றும் 15ஆம் வகுப்பில் முதலாம் வகுப்பு கற்றல் நிலையில் உள்ள மாணவர்களுக்கு கற்றல் அடைவை உறுதி செய்யும் வகையில் இணைப்புப் பாட பயிற்சி நூல் (Bricgn course) பயிற்சிகளை நடைமுறைப்படுத்தி கற்றல் சுற்பித்தல் செயல்பாட்டில் ஈடுபடுவதற்கு உரிய அறிவுரைகளை வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் அனைத்து அரசு மற்றும் சுரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு வழங்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.