துறைரீதியாக நடவடிக்கை - மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எச்சரிக்கை!! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, November 27, 2022

துறைரீதியாக நடவடிக்கை - மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எச்சரிக்கை!!

பள்ளி பேருந்துகள் மீது நடவடிக்கை -மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எச்சரிக்கை

மாணவ, மாணவிகளை அதிகளவில் ஏற்றிச் செல் லும் பள்ளி பேருந்துகள் மீது துறை ரீதியாக நடவ டிக்கை எடுக்கப்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எச்ச ரிக்கை விடுத்துள்ளார்.

மதுரை திருப்பாலை தனியார் பள்ளி பேருந் தில், அளவுக்கு அதிக மாக மாணவிகளை ஏற்றிச் சென்றதால், பேருந்துக்குள்ளேயே மாணவிகள் சிலர் மயங்கி விழுந்தனர். பெரும் பரப ரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக கல்வித்துறை மற்றும்

காவல்துறை ரீதியாக நடவடிக்கைஎடுக்கப்பட் டுள்ளது. இந்நிலையில், இதுபோன்று பல பள்ளி வாகனங்களில் மாணவ, மாணவிகளை அதிகள வில் ஏற்றிச்செல்வவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதனையடுத்து, பேருந்து வசதிகள் உள்ள, அனைத்து பள்ளிகளுக் கும் மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலு வலகத்திலிருந்து ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட் டுள்ளது. அதில், 'பள்ளிபே ருந்துகளை, குறிப்பிட்ட இடைவெளியில் முறை யாக பராமரிக்க வேண் டும். அனுமதிக்கப்பட்ட

எண்ணிக்கை அளவில் மட்டுமே மாணவர்களை பேருந்தில் ஏற்றிச் செல்ல வேண்டும், எக்காரணத் திற்காகவும், கூடுதலாக, மாணவ, மாண விகளை ஏற்றிச் செல்வதை கண் டிப்பாக தவிர்க்க வேண் டும். இதுகுறித்து பள்ளி நிர்வாகம் சம்பந்தப்பட்ட பேருந்து ஓட்டுனர், நடத் துனருக்கு வலியுறுத்துவ துடன், பேருந்துகள் இயக் கத்தை கண்காணிக்க வேண்டும். விதிமுறைகள் மீறும் பள்ளி பேருந்துகள் மீது துறை ரீதியான நடவ டிக்கை எடுக்கப்படும்' இவ்வாறு கூறப்பட்டுள் ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.