10ம் வகுப்பு தனித்தேர்வர்கள் மதிப்பெண் சான்று பெற டிச.15 கடைசி நாள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, November 27, 2022

10ம் வகுப்பு தனித்தேர்வர்கள் மதிப்பெண் சான்று பெற டிச.15 கடைசி நாள்

10ம் வகுப்பு தனித்தேர்வர்கள் மதிப்பெண் சான்று பெற டிச.15 கடைசி நாள்

ராமநாதபுரம் மாவட்டத் தில் மார்ச் 2014 முதல் செப்.2019 வரை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வெ ழுதிய தனித்தேர்வரின் மதிப்பெண் சான்றிதழ் தேர்வு மையங்கள் மூலம் நேரடியாகவிநியோகிக்கப் பட்டுள்ளது. மதிப்பெண் சான்றிதழ் பெற்றுக்கொள் ளாதோரின் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான் றிதழ் ராமநாதபுரம், அர சுத் தேர்வுகள் உதவி இயக் குநர் அலுவலகத்தில் மீள

பெறப்பட்டுள்ளது. மார்ச் 2014 முதல் செப். 2019 வரை பருவங்களில் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான் றிதழ்களை தேர்வு விண் ணப்பத்துடன் அனுப்பி பெறப்படாத பள்ளி மாற் றுச் சான்று, மதிப்பெண் சான்று அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவல கத்தில் இருப்பில் உள்ளன. தேர்வு முடிவுகள் வெளி யாகி 2 ஆண்டு வரை தனித் தேர்வரால் பெறப்படாத மதிப்பெண் சான்றிதழ்கள் அழிக்கப்பட வேண்டும்

தேர்வுத்துறை விதி உள்ளது. இதனால் மதிப் பெண் சான்றிதழ்களை பெறாத தனித்தேர்வர்கள் டிச.15க்குள் ராமநாதபு ரம், அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவ லக வேலை நாட்களில் நேரிலோ அல்லது ரூ.45 மதிப்புள்ள தபால் தலை ஒட்டிய சுய முகவரி எழுதிய உறையுடன் தேர்வரின் கையொப்ப மிடப்பட்ட கோரிக்கை கடிதம், ஹால் டிக்கெட்

தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு அல்லது தற்காலிக மதிப் பெண் சான்றிதழ் நகல் இணைத்து அனுப்பி பெற்றுக் கொள்ளலாம். இந்த இறுதி வாய்ப்பை பயன்படுத்த தவறினால் தேர்வு பருவ மதிப்பெண் சான்றிதழ்களை விதிமு றைகளின்படி அழிக்க அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகம் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக் டர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.