தொடக்கப்பள்ளிகளுக்கு மாறுதல் பெற ஆசிரியர்களுக்கு 29ல் கலந்தாய்வு - Kalviseithi Official

Latest

Sunday, August 21, 2022

தொடக்கப்பள்ளிகளுக்கு மாறுதல் பெற ஆசிரியர்களுக்கு 29ல் கலந்தாய்வு

தமிழகத்தில் தொடக் கக் கல்வித்துறை, பள்ளிக் கல்வித்துறை, ஆதிதிரா விடர், பழங்குடியினர் நலத்துறை மற்றும்கள்ளர் சீரமைப்புத்துறை ஆகிய துறைகளின் கீழ் தனித்தனி அலகுகளாக பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில், ஒரு துறையின் கீழ் செயல்பட்டு வரும் பள் ளியில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள், மற்றொரு துறை பள்ளிக்கு இடமா றுதல் பெற்றுச் செல்ல சிறப்பு கலந்தாய்வு நடத் தப்படுகிறது. அதன்படி, பிற துறைகளிலிருந்து தொடக்கக்கல்விதுறைக்கு மாறுதல் பெற விரும்பும் ஆசிரியர்களுக்கு அலகு விட்டு அலகு மாறுதல் கலந்தாய்வு வரும் 29ம் தேதி நடக்கிறது. இதற் காசு மாறுதல் பெறவி ரும்பும் ஆசிரியர்களின் தடையின்மை சான்றை பதிவேற்றம் செய்ய அறிவு றுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தொடக்கக்கல்வித்துறை இயக்குநர் அறிவொளி, அனைத்து மாவட்ட சிஇஓக்களுக்கும் அனுப் பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்திருப்பது: தமிழ சுத்தில். 2021-2022ம் கல்வி யாண்டிற்கான ஆசிரியர் மாறுதல், பணிநிரவல் மற் அம் பதவி உயர்வுக்கான பொது மாறுதல் கலந் தாய்வு கொள்கை வகுக்கப் பட்டது. பின்னர் அதனை பின்பற்றி, ஊராட்சி ஒன் றிய, நகராட்சி, அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பொது மாறுதல், பதவி உயர்வு, பணிநிரவல் கலந்தாய்வு கள் மற்றும் மனமொத்த மாறுதல் கலந்தாய்வுகள் தற்போது பிற துறைக ளில் இருந்து, தொடக்கக் கல்வித்துறைக்கு மாறுதல் பெற விரும்பும் ஆசிரியர் களுக்கான கலந்தாய்வு வரும் 29ம் தேதி நடக்கி றது.

இதில் கலந்துகொள்ள தடையில்லா சான்று பெற்ற, பிற துறைகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் தங்கள் விண்ணப்பங் களை வரும் 24 மற்றும் 25ம் தேதிகளில் கல்வி மேலாண்மைத் தகவல் (எமிஸ்) இணையதளத்தில் பதிவேற்றம் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் தெரி வித்துள்ள நிபந்தனைக ளின்படி, மாவட்ட கல்வி அலுவலர்கள், சம்பந்தப் பட்ட ஆசிரியர்களின் விண்ணப்பங்களை சரி பார்த்து, அவர்கள் பிற துறையில் இருந்து பெற்ற அலகு விட்டு அலகு மாறுதல் தடையின்மைச் சான்றை பதிவேற்றம் செய்து இணைய வழியாக ஏற்பளிக்க வேண்டும்.

இதில், ஏற்பளிக்கப் பட்ட விண்ணப்பங் களுக்கு, அலகு விட்டு அலகு மாறுதல் கலந் தாய்வுவரும் 29ம் தேதி பிற் பகல் நடைபெறும். இந்த தகவல்களை மாவட்டக் சுல்வி அலுவலர் மற்றும் வட்டாரக் கல்வி அலுவ லர் மூலம் அனைத்து ஆசிரியர்களுக்கும் தெரி யப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், அலகு விட்டு அலகு மாறுதல் கலந் தாய்வை, எவ்வித புகாருக் கும் இடமின்றி முடித்திட சிஇஓக்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில்தெரிவிக் கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.