அமெரிக்காவில் படிக்க நிதிஉதவி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, August 21, 2022

அமெரிக்காவில் படிக்க நிதிஉதவி

அமெரிக்காவில் படிக்க நிதிஉதவி

அமெரிக்காவின் பிரபல கார்னெல் பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் இளநிலை பட்டப்படிப்பை படிக்க, இந்திய மாணவர்களுக்கு டாடா குழுமத்தின் கல்வி மற்றும் மேம்பாட்டு அறக்கட்டளை நிதி உதவி வழங்குகிறது. தகுதிகள்:

பள்ளி கல்வியை இந்தியாவில் நிறைவு செய்திருக்க வேண்டும்.

கார்னெல் பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பில் சேர்க்கை பெற்றிருக்க வேண்டும்.

முன்னுரிமை:

கார்னெல் பல்கலைக்கழகத்தின் கல்லூரிகளில் வழங்கப்படும் கட்டடக்கலை, ஆர்ட் மற்றும் பிளானிங், இன்ஜினியரிங், அப்ளைடு எக்னாமிக்ஸ், மேனேஜ்மெண்ட், பயோலஜிக்கல் சயின்சஸ், பிசிக்கல் சயின்சஸ் மற்றும் இதர அறிவியல் மற்றும் சமூக அறிவியல் சார்ந்த படிப்புகளை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

உதவித்தொகை எண்ணிக்கை: இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்யப்படும் 20 சிறந்த இந்திய மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.

விதிமுறைகள்:

நிதி உதவி தேவைப்படும் வரை இளநிலை பட்டப்படிப்பை முடிக்க தேவையான செமஸ்டர்களுக்கு டாடா உதவித்தொகையை பெறலாம். அதிகபட்சம் நான்கு ஆண்டுகள் வரையே உதவித்தொகை வழங்கப்படுகிறது.

ஆர்கிடெக்சர் படிப்பின் ஐந்து ஆண்டுகாலத்தில் பத்து செமஸ்டர்கள் இருப்பினும், எட்டு செமஸ்டர் வரையே உதவித்தொகை வழங்கப்படுகிறது. இரண்டு மேஜர் படிப்புகள் மற்றும் இரட்டைப் பட்டப்படிப்புகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுவதில்லை.

விண்ணப்பிக்கும் முறை:

பல்கலைக்கழக விதிமுறைப்படி, பல்கலைக்கழகத்தில் சேர்க்கை பெற்றபின் &'காலேஜ் ஸ்காலர்ஷிப் சர்வீஸ்’ வாயிலாக, நிதி உதவிக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும். ஆண்டின் எந்த பருவத்தில் சேர்க்கை பெறும் மாணவர்களும் டாடா உதவித்தொகை பெற தகுதி உண்டு.

விபரங்களுக்கு: https://admissions.cornell.edu/apply/international-students/tata-scholarship

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.