தலைமை ஆசிரியரின் நடவடிக்கையால் மாணவர்களை கவர்ந்த அரசு பள்ளி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, March 18, 2022

தலைமை ஆசிரியரின் நடவடிக்கையால் மாணவர்களை கவர்ந்த அரசு பள்ளி

கலவை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியை தனியார் பள்ளி போல மாற்றியுள்ளார் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர்.ராணிப்பேட்டை மாவட்டம் கலவையில் உள்ள அரசு பள்ளி கடந்த 1948ம் ஆண்டு முதல் நடுநிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளி, தற்போது மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. கடந்த 1ம் தேதி பள்ளியின் தலைமை ஆசிரியராக ரவிச்சந்திரன், புதிதாக பொறுப்பேற்றார். இப்பள்ளிக்கு வந்த முதல் நாள் பள்ளி மற்றும் வகுப்பறைகளை சுற்றிப் பார்த்து ஆய்வு செய்தார்.

இதையும் படிக்க | அரசுப் பள்ளிகளில் உள்ள உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்களின் (HiTech Lab) தற்போதைய நிலை குறித்த அறிக்கை கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு

பின்னர் பள்ளியின் வகுப்பறைகள், கட்டிடங்கள், சமையற் கூடங்கள், சுற்றுசுவர், நுழைவுவாயில் அனைத்தையும் பார்வையிட்டார். அப்போது பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சனாவுல்லாவிடம், 20 ஆண்டுகளுக்கு முன்பு வர்ணம், சுண்ணாம்பு பூசப்பட்டதாகவும், அதனால் உடனடியாக புதியதாக சுண்ணாம்பு வர்ணம் அடிக்க உத்தரவிட்டார். தற்போது சுண்ணாம்பு அடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் பள்ளியின் நுழைவுவாயில் அருகே தமிழ் கடவுள் வீணையுடன் அமர்ந்திருக்கும் சரஸ்வதியிடம் மாணவர்கள் கல்வி கற்பது போல உள்ள சிலைக்கு வர்ணம் தீட்டப்பட்டு புதுப்பொலிவுடன் பள்ளி உள்ளது. மேலும் ஆசிரியரிடமும், மாணவர்களிடம் மாவட்டத்திலேயே தனியார் பள்ளிகளை விட கலவை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியை முதல் பள்ளியாக மாற்ற அறிவுரை வழங்கினார். அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கும் அளவில் தனியார் பள்ளி போல அரசு பள்ளியை மாற்றம் தலைமையாசிரியரை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர் பாராட்டி வருகின்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.