Ph.D., சேர்க்கைக்கு புதிய விதிகள் அறிவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, March 18, 2022

Ph.D., சேர்க்கைக்கு புதிய விதிகள் அறிவிப்பு

'நான்காண்டு இளநிலை படிப்பு முடித்தவர்கள் பிஎச்.டி., ஆராய்ச்சி படிப்பில் சேரலாம்' என, புதிய வரைவு விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

புதிய கல்வி கொள்கையின்படி, பிஎச்.டி., படிப்பில் மாணவர் சேர்க்கை மற்றும் பட்டமளிப்புக்கான புதிய வரைவு விதிகளை, பல்கலை மானியக் குழுவான யு.ஜி.சி., அறிவித்துள்ளது. இந்த விதிகள் தொடர்பான கருத்துகளை, வரும் 31ம் தேதிக்குள் யு.ஜி.சி.,க்கு அனுப்ப வேண்டும்.

விதிகள் என்ன?மொத்தம் நான்காண்டு இளநிலை பட்டம் முடித்து, 55 சதவீத மதிப்பெண்கள் பெற்று, ஓராண்டு முதுநிலை முடித்தவர்கள்; அதற்கு இணையான வெளிநாட்டு பல்கலையின் படிப்பை முடித்தவர்கள் பிஎச்.டி., சேரலாம்.

மேலும், இரண்டு ஆண்டு முதுநிலை படிப்பு முடித்தவர்கள்; நான்காண்டு இளநிலை படிப்பில், கிரேடு நிலை 7.5 பெற்றவர்கள்; எம்.பில்., படிப்பில் 55 சதவீத மதிப்பெண் பெற்றவர்கள்; எம்.பில்., சேர்ந்து பட்டம் பெற பரிந்துரைக்கப்பட்டவர்கள், உரிய நிபந்தனைகளின்படி பிஎச்.டி., படிப்பில் சேர்க்கப்படுவர். தகுதி மதிப்பெண்ணான 55 சதவீதத்தில், பொது பிரிவினர் தவிர மற்றவர்களுக்கு, 5 சதவீதம் சலுகை அளிக்கப்படும். கிரேடு மதிப்பெண்ணில் 0.5 சலுகை வழங்கப்படும். பிஎச்.டி., படிப்புக்கு குறைந்த பட்சம் இரண்டு ஆண்டுகளும், அதிகபட்சம் ஆறு ஆண்டுகளும் நிர்ணயிக்கப்படும்.

இதையும் படிக்க | முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு?

அதிகபட்ச காலத்தில், கூடுதலாக இரண்டு ஆண்டு சலுகை வழங்க, அந்தந்த கல்வி நிறுவனங்களின் விதிகளின் படி முடிவு செய்யலாம்.பெண்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு, படிப்பை முடிக்கும் அதிகபட்ச காலத்தில், கூடுதலாக இரண்டு ஆண்டுகள் வழங்கப்படும். பெண்களுக்கு எட்டு மாதங்கள் வரை மகப்பேறு விடுப்பு அளிக்கப்படும்.

பல்கலை அளவில், நுழைவுத் தேர்வு அல்லது தேசிய அளவிலான 'நெட்' நுழைவுத் தேர்வின் அடிப்படையில், மாணவர்களை சேர்க்க வேண்டும். இவை உட்பட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.