CoSE - BT to PG Promotion Panel (Botany) Proceedings! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, February 2, 2022

CoSE - BT to PG Promotion Panel (Botany) Proceedings!

CoSE - BT to PG Promotion Panel (Botany) Proceedings!

தமிழ்நாடு மேல்நிலைக்கல்விப்பணி ஆசிரியர் பணியிலிருந்து ஆசிரியர்களாக பணிமாறுதல் 01.01.2021 மூலம் நிலவரப்படி முதுகலை பட்டதாரி பட்டதாரி (தாவரவியல்) பதவி உயர்வு வழங்குவதற்கான நபர்களின் தற்காலிக (Temporary) உத்தேச பெயர்ப்பட்டியல் தயார் செய்யப்பட்டது - அனுப்பி வைத்தல் அதில் சேர்க்கை, நீக்கம், திருத்தம் செய்து மீள அனுப்பக் கோருதல் சார்பாக.

பார்வை

1. தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப்பணி சிறப்பு விதிகள் வெளியிடப்பட்ட அரசாணை எண் 14 பள்ளிக் கல்வித் துறை, நாள் 30.01.2020

2. அரசாணை எண் 107 பணியாளர் மற்றும் நிருவாக சீர்திருத்தத் துறை, நாள் 18.08.2009. 3. இவ்வியக்க செயல்முறைகள் இதே எண். நாள்.28.12.2021.

4. அனைத்து கருத்துருக்கள் முதன்மைக்கல்வி அலுவலர்களிடமிருந்து

01.01.2021 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து பணிமாறுதல் மூலம் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக (தாவரவியல்) பதவி உயர்வு வழங்க தேவையான நபர்களின் பெயர் பட்டியலினை அனுப்பி வைக்குமாறு பார்வை(3)ல் காணும் செயல்முறைகளின் வாயிலாக அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களிடம் கோரப்பட்டு, அதன்படி பார்வை(4)ல் கண்டுள்ளவாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துருக்களின் அடிப்படையில் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு அளிப்பதற்காக தயார் செய்யப்பட்ட தற்காலிக உத்தேச (Temporary) பெயர்ப்பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பி வைக்கப்படுகிறது.

இத்தற்காலிக (Temporary) உத்தேச பெயர் பட்டியலில் உள்ள ஆசிரியர்களின் விவரங்களை பார்வை 3-ல் கண்ட இவ்வியக்கக செயல்முறைகளில் தெரிவிக்கப்பட்ட நடைமுறைகளை பின்பற்றி மீண்டும் ஒருமுறை சரிபார்த்து உறுதி செய்திடுமாறும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

மேலும் பார்வை 2 ல் கண்டுள்ள அரசாணையின்படி 10+2+3 மற்றும் முதுகலை பட்டத்துடன் B.Ed. அல்லது 11+1+3 முதுகலை பட்டத்துடன் B.Ed. என்ற முறைப்படி கல்வித் தகுதி பெற்ற பணியாளர்களின் பெயர்கள் மட்டுமே பட்டியலில் சேர்க்கப்படவேண்டும்.

இளங்கலை பட்டத்தில் இரட்டைப்படிப்பு (Double Degree) படித்தவர்களின் பெயர்கள் சேர்க்கப்படக்கூடாது.

அலகுவிட்டு அலகு மாறுதலில் / வேறு துறையிலிருந்து பள்ளிக் கல்வித் துறைக்கு ஈர்த்துக்கொள்ளப்பட்டவர்கள் சார்பாக அவர்கள் பள்ளிக் கல்வித் துறையில் பணியில் சேர்ந்த நாள் அடிப்படையில் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும்.

01.01.2021 அன்று இளங்கலை / முதுகலை / பி.எட். பட்டம் பெற்று தேர்ச்சி பெற்றவர்களில் குறைந்தபட்சம் அப்பாடத்திற்கான தற்காலிக பட்டச் சான்று பெற்றிருக்க வேண்டும்.

இப்பட்டியலில் இடம் பெற்றுள்ள ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை ஏதேனும் நிலுவையில் உள்ளதா என்பதனை மீண்டும் ஒரு முறை கூர்ந்தாய்வு செய்ய வேண்டும். இப்பட்டியலில் இடம் பெற்றுள்ள ஆசிரியர்களின் EMIS ID NO மற்றும் பள்ளியின் UDISE NO சரியாக உள்ளனவா என்பதை சரிபார்த்து உறுதி செய்து கொள்ள வேண்டும்.

மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ள நடைமுறைகளைப் பின்பற்றி இத்தற்காலிக உத்தேச (Temporary) பெயர் பட்டியலில் சேர்க்கை, நீக்கம் மற்றும் திருத்தம் ஏதும் செய்யவேண்டி இருப்பின் அவ்வாசிரியரின் விவரத்தினை dsew2sec@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு 03/02/2022 க்குள் அனுப்பிவிட்டு, அதன் கையொப்பமிட்ட பிரிதியினை உரிய ஆவணங்களுடன் இணை இயக்குநர் (மேநிக) அவர்களின் பெயரிட்ட முகவரிக்கு உடனடியாக அஞ்சல் மூலம் அனுப்பிவிட்டு, அதன் விவரத்தினை பள்ளிக்கல்வி இயக்கக W2 பிரிவு பணியாளர்களிடம் தெரிவிக்குமாறும் அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், இப்பட்டியலில் விதிகளுக்கு முரணாக பெயர் சேர்க்க பரிந்துரைத்தாலோ அல்லது பெயர் விடுபட்டதாகத் தெரிவித்து எந்த ஆசிரியரிடமிருந்து முறையீடு ஏதும் பின்னர் பெறப்பட்டாலோ அதற்கு சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலக பிரிவு எழுத்தர், பிரிவு கண்காணிப்பாளர் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர் முழுப் பொறுப்பையும் ஏற்க நேரிடும் எனவும் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.