பள்ளிக்கு வர இயலாமல் உள்ள 7,786 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வீட்டிலேயே கல்வி & இயன்முறை மருத்துவ வசதி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, January 31, 2022

பள்ளிக்கு வர இயலாமல் உள்ள 7,786 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வீட்டிலேயே கல்வி & இயன்முறை மருத்துவ வசதி

பள்ளிக்கு வர இயலாமல் உள்ள 7,786 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வீட்டிலேயே கல்வி & இயன்முறை மருத்துவ வசதி!

7,786 பேருக்கும் தலா ரூ.10,000 செலவில் உயர்தொழில்நுட்ப வசதியிடன் வீட்டுவழி கல்வி & இயன்முறை மருத்துவம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

பள்ளிக் கல்வி - 2021 22 ஆம் ஆண்டிற்கான பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கையின் போது மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் வெளியிட்ட அறிவிப்பு மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வீட்டிலேயே கல்வி மற்றும் இயன்முறை மருத்துவம் உள்ளிட்ட செயல்பாடுகளை ரூ.7.80 கோடி செலவில் வீட்டு வழிக் கல்வித் திட்டம் மூலம் செயல்படுத்திடஅனுமதி வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.

பள்ளிக் கல்வித் (அகஇ2) துறை அரசாணை நிலை) எண்.165

நாள் 30.11.2021

திருவள்ளுவர் ஆண்டு 2052 பிலவ வருடம், கார்த்திகை 14 படிக்கப்பட்டது:

மாநிலத் திட்ட இயக்குநர், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி அவர்களின் கடித ந.க.எண்.314/C5:SS-IE/2021, நாள் .10.2021.

ஆணை:

2021-22 ஆம் ஆண்டிற்கான பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கையின் போது மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் 26.08.2021-ல் பின்வரும் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

21. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வீட்டிலேயே கல்வி மற்றும் இயன்முறை மருத்துவம்:

பிறப்பு முதல் 18 வயதிற்குட்பட்ட 7.786 மாற்றுத்திறனாளி மாணவர்கள் பள்ளி வயதை அடைந்த பிறகும், உயர் ஆதரவு தேவைப்படும் (பலதரப்பட்ட குறைபாடுகள், அறிவுசார் குறைபாடு பெருமூளை முடக்கு வாதம், மன இறுக்கம் மற்றும் பல) காரணத்தால் பள்ளிக்கு வர இயலாத நிலையில் உள்ளனர். அம்மாணவர்களுக்கு கல்வி, இயன்முறை மருத்துவம் உள்ளிட்ட சிகிச்சைகளை வீடுகளுக்கே சென்று வழங்கி அவர்தம் கற்றல் சூழலை மேம்படுத்துவதை இலக்காகக் கொண்டு ஒரு கல்வித் திட்டம் தொடங்கப்படும்.

ஒரு மாணவருக்கு ரூ.10000/- வீதம் 7786 மாணவ / மாணவியர்க்கு ரூ.7.80 கோடி மதிப்பீட்டில் உயர் தொழில்நுட்ப உதவியுடன் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

2. மேலே படிக்கப்பட்ட கடிதத்தில், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான உள்ளடக்கிய கல்வித் திட்டத்தின் கீழ் 20212022-ஆம் கல்வியாண்டில் வீட்டு வழிக் கல்வி பயிலும் 7.786 மாற்றுத் திறன் கொண்ட மாணவ மாணவியர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கும் பொருட்டு அவர்கள் பள்ளி வயதை அடைந்த பிறகு. உயர் ஆதரவு தேவைப்படும் (பலதரப்பட்ட குறைபாடுகள், அறிவுசார் குறைபாடு, பெருமூளை முடக்கு வாதம், மன இறுக்கம் மற்றும் பல காரணத்தால் பள்ளிக்கு வர இயலாத நிலையில் உள்ள குழந்தைகளுக்கு அவர்தம் கற்றல் சூழலை மேம்படுத்த கல்வி மற்றும் இயன்முறை மருத்துவம் உள்ளிட்ட சிகிச்சைகளை வீடுகளுக்கே சென்று வழங்கிட வீட்டு வழிக் கல்வித் திட்டம் மூலம் ஒரு மாணவருக்கு ரூ.10,000/- வீதம் 7.786 மாணவ மாணவியர்களுக்கு ரூ.7.80 கோடி செலவில் செயல்படுத்திட மத்திய கல்வி அமைச்சகத்தின் திட்ட ஏற்பளிப்பு குழுவினால் அனுமதிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்து. மேற்காண் செயல்பாடுகளை செயல்படுத்திட அனுமதி வழங்கிடுமாறு மாநிலத் திட்ட இயக்குநர், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி அவர்கள் அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

3. மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பினை செயல்படுத்தும் பொருட்டு, மாநிலத் திட்ட இயக்குநர், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி அவர்களின் கருத்துருவினை அரசு நன்கு ஆய்வு செய்து, அதனை ஏற்று. ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான உள்ளடக்கிய கல்வித் திட்டத்தின் கீழ் 20212022 ஆம் கல்வியாண்டில் வீட்டு வழிக் கல்வி பயிலும் 7786 மாற்றுத் திறன் கொண்ட மாணவ மாணவியர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கும் பொருட்டு, உயர் ஆதரவு தேவைப்படும் (பதைரப்பட்ட குறைபாடுகள், அறிவுசார் குறைபாடு. பெருமூளை முடக்கு வாதம், மன இறுக்கம் மற்றும் பல) காரணத்தால் பள்ளிக்கு வர இயலாத நிலையில் உள்ள மாணவ மாணவியர்களுக்கு கற்றல் சூழலை மேம்படுத்தும் விதமாக கல்வி மற்றும் இயன்முறை மருத்துவம் உள்ளிட்ட செயல்பாடுகளை வீடுகளுக்கே சென்று வழங்கிடவும், ஒரு மாணவருக்கு ரூ.10,000/- வீதம் 7786 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.7.80 கோடி மதிப்பீட்டில் உயர் தொழில்நுட்ப உதவியுடன் வீட்டு வழிக் கல்வித் திட்டத்தை செயல்படுத்திட அனுமதி வழங்கலாம் என அரசு முடிவு செய்து அவ்வாறே ஆணையிடுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.