நாளை பள்ளிகள் திறப்பு: 15 முதல் 18 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு தடுப்பூசி கட்டாயம் - ஆசிரியர்களுக்கு 2 டோஸ் கொரோனா தடுப்பூசி கட்டாயம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, January 31, 2022

நாளை பள்ளிகள் திறப்பு: 15 முதல் 18 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு தடுப்பூசி கட்டாயம் - ஆசிரியர்களுக்கு 2 டோஸ் கொரோனா தடுப்பூசி கட்டாயம்

தமிழகத்தில் நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் வழிகாட்டு நெறிமுறைகள் பொதுசுகாதாரத்துறை வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த மாதம் மூடப்பட்ட பள்ளிகள் நாளை முதல் மீண்டும் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. முன்னதாக கொரோனா பரவல் காரணமாக சுழற்சி முறையிலேயே பள்ளிகளில் வகுப்புகள் நடைபெற்று வந்தன. ஆனால் நாளை முதல் 100 சதவீத மாணவர்களுடன் பள்ளிகள் செயல்படும் என கூறப்பட்டுள்ளது.

1 முதல் 12-ம் வகுப்பு வரையில் அனைத்து மாணவர்களுக்கும் வகுப்புகள் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதையடுத்து நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிகள் நாளை முதல் முழுமையாக செயல்பட உள்ளன. மாணவர்கள் அமரும் இருக்கைகள் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தப்பட்டுள்ளன. அரசு பள்ளிகளில் நாளை முழு அளவில் 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகள் வருகை தர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து சுமார் 1 கோடி மாணவ-மாணவியர் பள்ளிக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தினமும் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும். பள்ளிகளில் மாணவர்கள் வழக்கம் போல உட்கார வைக்கப்படுவார்கள். முன்னதாக அவர்களுக்கு கிருமி நாசினிகள் வழங்கப்பட்டு கைகள் தூய்மை செய்யப்படுவது உள்ளிட்ட அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடிக்கப்படும். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இன்று அனைத்து பள்ளி ஆசிரியர்கள் குழு ஏற்பாடு செய்யும். அதனால் அனைத்து ஆசிரியர்களும் இன்று தவறாமல் பள்ளிக்கு வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.



கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள்:

* 15 முதல் 18 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கும் தடுப்பூசி கட்டாயம் என அறிவுறுத்தல்

* ஆசிரியர்கள் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி கட்டாயம் செலுத்திருக்க வேண்டும்

* பள்ளிகளில் முகக்கவசம், தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தல்

* நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவதை தவிர்க்க வேண்டும்

* மதிய உணவு இடைவேளையில் மாணவர்கள் கூட்டமாக அமர வேண்டாம்

* ஆசிரியர்களும், மாணவர்களும் நாள் முழுவதும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.

* 2 முறை கிருமி நாசினியால் கைகளை சுத்தப்படுத்த வேண்டும்

* வகுப்பறை நுழையும் உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்

* கொரோனா பரிசோதனை செய்திருந்தால் முடிவு வரும் வரை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்

இவ்வாறு வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.