இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆதரவாக
ஜன.19 முதல் போராட்டம்
உடற்கல்வி ஆசிரியர்கள், இயக்குநர்கள் அறிவிப்பு
- Protest from Jan. 19 in support of secondary teachers - announcement by physical education teachers and directors
கும்பகோணம்
இடைநிலை ஆசிரியர்களின் போராட்டத்துக்கு பொங்கல் பண்டிகைக்குள் அரசு தீர்வு காணாவிட்டால், அவர்களுக்கு ஆதரவாக ஜன.19-ம் தேதி யில் இருந்து நாங்களும் போராடுவோம் என தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.சங்கரப் பெருமாள், பொதுச் செயலாளர் மா.மு.சதீஷ், பொருளாளர் ஆர்.சுரேஷ்குமார் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது:
திமுக அளித்த தேர்தல்
வாக்குறுதியான சம வேலைக்கு சம ஊதியம் என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி 17-வது நாளாக போராடி வரும் இடைநிலை ஆசிரியர்களை குற்றவாளிகளைப் போல அரசு கையாள்வது அனைவருக்கும் மன வேதனையை அளிக்கிறது. போராட்டக் களத்தில் மாற்றுத் திறன் ஆசிரியர்கள், பெண் ஆசிரி யர்களை போலீஸார் கைது செய்யும் விதம் கண்டு ஆசிரியர் சமூகம் கவலை கொள்கிறது.
மேலும், போராட்டத்தை ஒடுக்க கும் விதமாக சங்க நிர்வாகி களை கைது செய்து, அவர்க ளின்செல்போன்களைபறிமுதல் செய்திருப்பது, 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மீது
வழக்குப் பதிவு செய்திருப்பது மிகவும் கண்டனத்துக்குரியது.
எனவே, இந்தப் போராட் டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரி யர்களை தமிழக அரசு உடனடி யாக அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, பொங்கல் பண்டிகைக் குள் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். இல்லையெனில், இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆதரவாக ஜன.19-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்கத்தினர் பணி புறக்கணிப்பு செய்து, தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர்கள் தெரிவித் துள்ளனர்.
Friday, January 16, 2026
New
இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆதரவாக ஜன.19 முதல் போராட்டம் - உடற்கல்வி ஆசிரியர்கள், இயக்குநர்கள் அறிவிப்பு
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.