National Apprenticeship Recruitment Camp on January 21st at Government Vocational Training Institute - அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ஜனவரி 21-இல் தேசிய தொழில் பழகுநர் சேர்க்கை முகாம்
கோவை, ஜன. 13: கோவை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் தேசிய தொழில் பழகுநர் சேர்க்கை முகாம் வருகிற ஜனவரி 21ஆம் தேதி நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பு: தேசிய தொழில் பழகுநர் ஊக்குவிப்புத் திட்டத்தின்கீழ் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பாக கோவை மாவட்ட அளவில் பிரதம மந்திரியின் தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம், கோவையில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ஜனவரி 21 காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.
இம்முகாமில் மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் மாவட்டத்தில் உள்ள தனியார் துறை நிறுவ னங்கள் பங்கேற்று 300-க்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்ப உள்ளனர்.
இதில் பங்கேற்று தேர்வு பெற்றால் தொழில் பழகுநர் பயிற்சி அளிக் கப்பட்டு மத்திய அரசின் தேசிய தொழில் பழகுநர் சான்றிதழ் வழங் கப்படும். தேசிய தொழில் பழகுநர் சான்றிதழ் பெற்றவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை, வயது வரம்பில் மேலும் ஓராண்டு சலுகை உள்ளது. மேலும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளில் முன் னுரிமை கிடைக்கும்.
தொழில் பழகுநர் பயிற்சியின்போது உதவித் தொகை, தொழிற் பிரிவுகளுக்கு ஏற்ப தொழில் நிறுவனங்களால் வழங்கப்படுகிறது.
10-ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பிளஸ் 2 வகுப்பு தேர்ச்சி, தோல்வி அடைந்தவர்கள் மற்றும் அரசு, தனியார் தொழில் பயிற்சி நிலையங் களில் தேர்ச்சி பெற்றவர்கள் உரிய அசல் சான்றிதழ்கள் மற்றும் ஆவ ணங்களுடன் பங்கேற்கலாம்.
மேலும் விவரங்களுக்கு உதவி இயக்குநர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகம், கோவை 29 என்ற முகவரியைத் தொடர்பு கொள்ளலாம். பிற விவரங்களுக்கு 9566531310, 9486447178 ஆகிய கைப்பேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.