‘திறன்’ திட்ட மதிப்பீட்டில் முன்னேறியது எப்படி? - மதிப்பெண் பதிவேற்றத்தில் குளறுபடி என புகார்
நமது நிருபர் -
அரசுப் பள்ளிகளில் கற் இடைவெளியைக் குறைக்க, முதல் கம் வகுப்பு வரை, 'எண்ணும் எழுத்தும் திட்டமும், முதல் 9ம் வகுப்பு மாண வர்களின் மொழி மற்றும் கணிதத் திறனை மேம்ப டுத்த திறன் திட்டமும், நடைமுறைப்படுத்தப் பட்டு வருகின்றன.
இத்திட்டங்களின் கீழ். மாணவர்களின் கற்றல் அடைவுத்திறன் குறித்த நவம்பர் மாத அறிக்கை யில், கோவை மாவட்டம் மாநில அளவில் பின்தங்கி யிருந்தது.
'திறன்' திட்டத்தின் கீழ், 33,405 மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப் பட்ட போதிலும், மாண வர்களின் வருகைப்பதிவு குறைவு மற்றும் புலம் பெ யர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளின் வருகை போன்ற காரணங்களால், கற்றல் நிலை குறைவாக இருந்ததாக, மாவட்ட பள் விக்கல்வி தரப்பில் கூறப் பட்டது.
இந்நிலையில், சமீபத் தில் முடிந்த அரையாண் டுத் தேர்வு மதிப்பெண்கள் எமிஸ்' இணையதளத் தில் பதிவேற்றப்பட்டன. இதில், 32,604 மாணவர் களில் 24,427 பேர் கற் றல் அடைவு நிலையை எட்டியுள்ளதாக கூறப் படுகிறது. மாவட்டத்தின் தரவரி சையை உயர்த்த வேண் டும் என்பதற்காக, ஆசிரி யர்கள் மாணவர்களுக்கு கூடுதலாக 10 முதல் 15 மதிப்பெண்கள் வரை சேர்த்து பதிவேற்ற வேண் டும் என வாய்மொழி உந்த ரவு பிறப்பிக்கப்பட்டதாக வும், அதன் காரணமாகவே இந்த உயர்வு ஏற்பட்டுள்ள தாகவும் தகவல் வெளியா கியுள்ளது.
இது குறித்து, மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் கேட்டபோது, 'அவ்வாறு எந்த அறிவுரையும் வழங் கப்படவில்லை.
இந்த முறை திறன் தேர்வு வினாத்தாள் எளி உயர்வுக்குக் தாக இருந்ததே மதிப் பெண் காரணம்.
மேற்கொண்டு வினாத்தாள் சில பள்ளிகளில் ஆய்வு மதிப்பெண்கள் முறையாக சரிபார்க்கப்பட்டுள்ளன.' என தெரிவித்தனர்.
இருப்பினும், மாணவர் களின் அடிப்படை அறிவை வளர்க்க, கொண்டு வரப் பட்ட நோக்கம், இது போன்ற மதிப்பெண் முறைகேடு களால் சிதைக்கப்படுவ தாகவும், இது மாணவர் களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் என்றும், கல் வியாளர்கள் தெரிவிக் கின்றனர்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.