A letter stating that the request to reconsider and increase the reservation for appointments on compassionate grounds in entry-level positions, which was reduced from 25 percent to five percent, back to 25 percent, cannot be accepted - கருணை அடிப்படையில் பணி நியமனம் மேற்கொள்ள ஆரம்ப நிலை பணிகளில் 25 சதவீதமாக இருந்த ஒதுக்கீட்டினை ஐந்து சதவீதமாக குறைத்ததை பரிசீலனை செய்து மீண்டும் 25 சதவீதமாக உயர்த்தி வழங்க கோரிக்கை விடுத்ததை ஏற்க இயலாது என தெரிவித்து வழங்கப்பட்டுள்ள கடிதம். கருணை அடிப்படையிலான பணி நியமனம் - 25% - லிருந்து 5% - ஆக குறைத்தது அரசாணை வெளியிடப்பட்டது அரசாணையை இரத்து செய்து முந்தைய நிலையே தொடர வலியுறுத்தல்-தொடர்பாக.
மாநிலத் தலைவர், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம், அவர்களின் கடித எண் 74/2025, நாள் 14.11.2025 (இத்துறையில் பெறப்பட்ட நாள் 21.1.2025).
********
பார்வையில் காணும் கடிதத்தின் மீது தங்களின் கவனம் ஈர்க்கப்படுகிறது.
2. தாங்கள் கருணை அடிப்படை நியமனத்திற்கான 5% குறைக்கப்பட்டதை கைவிட்டு முந்தைய நிலையே தொடரும் படியான நடவடிக்கையை தமிழ்நாடு அரசு முன் எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளீர்கள்.
3. இது தொடர்பாக, கீழ்கண்டவாறு விவரங்கள் தெரிவிக்கப்படுகின்றன:-
(அ) அரசாணை (நிலை) எண் : 154, பணியாளர் : 154, பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்த (ப்பி)த் துறை, நாள் 19.09.2006-ல் வெளியிடப்பட்டுள்ள ஆணையில் தமிழ்நாடு அமைச்சுப் பணிக்கான சிறப்பு விதிகள்/நீதிமன்ற அமைச்சுப் பணிக்கான சிறப்பு விதிகளில் பிரிவு 'சி' (Group-'C) உள்ள இளநிலை உதவியாளர்களுக்கான காலிப் பணியிடத்தில் 25% கருணை அடிப்படையில் நேரடி பணிநியமனமாக ஒதுக்கப்பட வெளியிடப்பட்டுள்ளது. வேண்டுமென்று ஆணை (ஆ) இவ்வரசாணையானது நீதிமன்ற ஆணைக்கிணங்க (W.P.No 45835 of 2006, dated. 05.09.2018), 600 61600T. 70, LD60fQ6T COLDIT 6060OT GOLD (676D) துறை, நாள்: 24.07.2023-ல் இரத்து செய்யப்பட்டுள்ளது.
(இ) மேலும், அரசாணை எண். 33, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, நாள்: 08.03.2023-ல் பணி நியமன உச்சவரம்பு :- (1) ஒரு துறையில் கருணை அடிப்படையில் நியமனம் செய்யப்படும் நபர்களின் மொத்த எண்ணிக்கை யாதொரு நேரத்திலும், தற்காலிகமாகவோ நிரந்தரமாகவோ அத்துறையில் தொகுதி “C” - இல் இணைக்கப்பட்டுள்ள அனைத்து வகையிலான பணியிடங்களுக்கு ஒப்பளிக்கப்பட்ட மொத்த எண்ணிக்கையின் ஐந்து விழுக்காட்டிற்கு மிகையாக இருக்கக் கூடாது என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
4. எனவே, கருணை அடிப்படையிலான பணிநியமனத்தில் முந்தைய நிலையே தொடர வேண்டும் என்பது அரசின் கொள்கை முடிவை சார்ந்தது என்பதால் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் கோரிக்கையை ஏற்க இயலாத நிலை உள்ளது என தெரிவித்துக் கொள்ளப் பணிக்கப்பட்டுள்ளேன்.
தங்கள் உண்மையுள்ள, அரசு துணைச் செயலாளருக்காக
CLICK HERE TO DOWNLOAD PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.