அமைச்சுப் பணியாளர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு - DSE செயல்முறைகள்!!! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, January 22, 2026

அமைச்சுப் பணியாளர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு - DSE செயல்முறைகள்!!!



அமைச்சுப் பணியாளர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு - DSE செயல்முறைகள்!!! Transfer counseling for ministerial staff - DSE procedures!!!

தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் (பணியாளர்தொகுதி) செயல்முறைகள்

ந.க.எண்.1847/அ4/இ1/2026

பொருள் தமிழ்நாடு நாள். 21.01.2026 அமைச்சுப் பணி- இளநிலை NP உதவியாளர்/தட்டச்சர்/சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை-3 ஆகியோருக்கான விருப்ப மாறுதல் கலந்தாய்வு இணைய வழியில் (Google Meet) நடத்துதல் பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் பெயர்ப் பட்டியல் தயார் செய்யப்பட்டது விவரங்கள் கோருதல் சேர்க்கை, நீக்கம் மற்றும் திருத்தம் சார்ந்து -

- பார்வை 1. அரசாணை (நிலை) எண். 149, பள்ளிக்கல்வி ப.க.1(1)துறை. நாள்.01.07.2024

2. தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணைஇயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள் ந.க.எண்.014965/அ3/இ1/2025 நாள்.03.10.2025. 3. சம்பந்தப்பட்ட பணியாளர்களின் விண்ணப்பம்.

2025-2026ஆம் ஆண்டிற்கான உத்தேச காலிப்பணியிட மதிப்பீட்டு அறிக்கையின்படி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் தொகுதி-IV ற்கான (நேர்காணல் அல்லாத பதவி) இளநிலை உதவியாளர்/தட்டச்சர்/சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை-3 பதவிக்கு நேரடி நியமனத்திற்கு தேர்ச்சி பெற்ற பணிநாடுநர்கள் பெயர்பட்டியல் பள்ளிக்கல்வி இயக்ககத்தில் பெறப்பட்டுள்ளது.

ஏற்கனவே பணியில் உள்ள இளநிலை இந்நிலையில், உதவியாளர்/தட்டச்சர்/சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை-3 பதவியில் பணிபுரிவோரிடமிருந்து சுமார் 150க்கும் மேற்பட்ட விருப்ப மாறுதல் கோரும் விண்ணப்பங்கள் இவ்வியக்ககத்தில் பெறப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து பார்வை(3)ல் கண்டுள்ளவாறு பெறப்பட்ட விண்ணப்பங்கள் மாவட்ட அனைத்து இணைத்து தொகுக்கப்பட்டு இத்துடன் முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்படுகிறது. பார்வை(1)ல் காணும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதன் அடிப்படையில் தற்போது பணிபுரியும் பணியிடத்தில், ஓராண்டு பணி நிறைவு செய்த பணியாளர்களுக்கு மட்டும் இணையவழி கலந்தாய்வு மூலம் மாறுதல் வழங்கும் பொருட்டு இப்பட்டியலில் உள்ள பணியாளர்களின் விவரங்கள் சரியானதாக உள்ளனவா என்பதை உறுதி செய்தும், எவரது பெயரேனும் விடுபட்டிருந்தால் விடுபட்ட பணியாளர்கள் விவரம் மற்றும் பட்டியலிலுள்ள பணியாளர்களின் விவரங்களில் திருத்தம், நீக்கம் செய்யப்பட வேண்டிய விவரங்களை பார்வை (1)ல் காணும் அரசாணையில் குறிப்பிடப்பட்ட நெறிமுறைகளின்படி பரிசீலனை செய்து கீழ்க்காணும் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றை பின்பற்றி இணைப்பில் கண்ட படிவங்களில் பூர்த்தி செய்து இவ்வியக்ககத்தின் அ4 பிரிவின் மின்னஞ்சல் முகவரிக்கு (cosea4sec@gmail.com) 23.01.2026 அன்று முற்பகல் 11.00 மணிக்குள் அனுப்பிட சார்ந்த முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். குறிப்பு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள Annuexure-II படிவத்தினை விருப்பமாறுதல் கோரும் பணியாளரால் பூர்த்தி செய்யப்பட்டு அதனை பரிசீலித்து Form-1 ல் தகுதியான பணியாளர்களது விவரங்களை மட்டும் தொகுத்து இவ்வியக்கத்திற்கு மாவட்ட வாரியாக அனுப்பப்பட வேண்டும். > புதிய நியமனம் பெற்றவர்கள் (Direct Appointment and Compassionate) மற்றும் ஏற்கனவே மாறுதல்/விருப்பமாறுதல் ஆணை பெற்றவர்கள் நிருவாக அலுவலகத்தில் ஓராண்டு பணிமுடித்திருத்தல் வேண்டும்.

பணியேற்ற விருப்பமாறுதல்/மனமொத்த முடித்திருக்க வேண்டுமென்ற மாறுதலுக்கு விண்ணப்பிக்க நிபந்தனையிலிருந்து ஓராண்டு விலக்களிக்கப்பட பணி வேண்டியவர்கள்.

I. 40% சதவீத கண்பார்வையற்றவர்கள் மற்றும் 40% சதவீத மாற்றுத்திறனாளிகள்.

II. மனவளர்ச்சி குன்றிய மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகளின் III. IV. பெற்றோர். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்கள், டையாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்பவர்கள், இருதய, மூளைகட்டி அறுவை சிகிச்சை செய்தவர்கள், புற்றுநோயாளிகள்.

விதவை (Widow/widower) / ஆதரவற்ற விதவை (Destitute Widow) / கணவனால் கைவிடப்பட்டவர்கள் V. கணவன் / மனைவி முன்னுரிமை.

பணியாளர் சமீபத்தில் நிருவாக மாறுதல் ஆணை பெற்றுள்ளாரா அல்லது நிருவாக மாறுதல் ஆணை பெற்று பணியேற்காமல் உள்ளாரா போன்ற தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பங்களைப் பரிசீலிக்க வேண்டும்.

மூன்றாண்டிற்கு மேல் பணிபுரிந்து மாறுதல் பெற்ற பணியாளர்கள் (Over three years Candidates) தற்போது பணிபுரியும் அலுவலகம்/பள்ளிகளில் ஓராண்டு நிறைவடைந்திருப்பின் அவர்கள் மீண்டும் பணிபுரிந்த அதே இடத்தை கோரக்கூடாது.

23.01.2026 முற்பகல் 11.00 மணிக்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.

தொகுப்பு பட்டியல் பெறப்பட்டபின் கலந்தாய்வு அன்றோ அல்லது பின்னரோ பெயர்விடுபட்டதாக பணியாளர்களிடமிருந்து புகார் ஏதும் பெறப்படின் அதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரோ பொறுப்பு ஏற்க நேரிடும்.

வெளியிடப்பட்ட இறுதிபட்டியலில் திருத்தங்கள் இருப்பதாக மாவட்டங்களிலிருந்து கலந்தாய்வு அன்று விவரம் தெரிவிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட பிரிவு பணியாளர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.

இணைப்பு-

சார்ந்த பணியாளர்களின் பெயர்ப் பட்டியல்

பெறுநர் -

இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி)

k2 21/1/16 அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் படி: மாநில திட்ட இயக்குநர், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, படி:

சென்னை -6.

செயலர், ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை -6. படி: இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்ககம், சென்னை-6 படி: இயக்குநர், தனியார் பள்ளிகள் இயக்ககம், சென்னை-6

இயக்குநர், மாநில கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், படி: படி: படி: சென்னை-6 இயக்குநர், பள்ளிசாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்ககம். சென்னை -6 2/11/26 பணிந்தனுப்பப்படுகிறது பிரிவு கண்காணிப்பாளர் - 'அ2 பிரிவு', பள்ளிக்கல்வி இயக்ககம், சென்னை-6

CLICK HERE TO DOWNLOAD DSE செயல்முறைகள் PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.