Special TET - ஆசிரியர் சங்க பிரநிதிகள் கூட்டம் - தமிழக ஆசிரியர் கூட்டணியின் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுகள்
பெருமதிப்பிற்கும், போற்றுதலுக்கும் உரிய மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கு வணக்கம். பொருள்
தொடக்கக்கல்வி - சார்நிலைப்பணி ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக ஆசிரியர் சங்க பிரநிதிகள் கூட்டம் தமிழக ஆசிரியர் கூட்டணியின் சார்பில் முன்மொழிவுகள் சமர்ப்பித்தல் சார்பு.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
உச்ச நீதிமன்றத்தீர்ப்பின் காரணமாக தமிழ்நாட்டு ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்குத் தீர்வுகாணும் வகையில் தமிழகத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு சிறப்புத்தகுதித் தேர்வினை அறிவித்துள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு தமிழக ஆசிரியர் கூட்டணியின் சார்பில் நெஞ்சம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
உச்சநீதிமன்றத் தீர்ப்பினை மறுசீராய்வு செய்து ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் களைந்திடும் வகையில் தொடர் சட்ட நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து மேற்கொண்டு வரும் மாண்புமிகு, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவர்களின் விரைவு நடவடிக்கைகளுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் இருந்து பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு முற்றிலும் விலக்களிக்கும் வகையில் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் 2009இல் சட்டத்திருத்தம் செய்திட மத்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றிட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைத் தமிழக ஆசிரியர் கூட்டணியின் சார்பில் பெரிதும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.
மேற்கண்ட அடிப்படையில் தமிழ்நாட்டில் சிறப்புத் தகுதித்தேர்வு எழுதும் ஆசிரியர்களுக்கு தேர்ச்சி மதிப்பெண்ணை 40%ஆக நிர்ணயம் செய்திட கேட்டுக்கொள்கிறோம்.
2. ஆசிரியர்களின் பணிக்காலத்தின் அடிப்படையில் SERVICE WEIGHTAGE அதிகபட்சம் 20% மதிப்பெண்கள் வழங்கிட வேண்டும்.
3. மேலும் ஆசிரியர்களின் பணிநிலைக்கு உரிய அடிப்படை கல்வித்தகுதியினைவிட கூடுதல் கல்வித் தகுதி பெற்றிருப்பின் அதற்கு WEIGHTAGE மதிப்பெண்கள் வழங்க பரிசீலிக்க வேண்டுகிறோம்.
4 பட்டதாரி ஆசிரியர்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு உரிய பாடத்திட்டத்தில் இருந்து 90 வினாக்கள் கேட்க்கப்பட வேண்டும். 5. தமிழக அரசின் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு எழுதி தேர்வு செய்யப்பட்டு பணியாற்றிவரும் ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வில் இருந்து விலக்களிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டுகிறோம்.
6. ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் II விண்ணப்பிக்க பட்டப்படிப்பில் குறைந்தபட்ச மதிப்பெண் கேட்கப்படுகிறது. பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருந்தாலே விண்ணப்பிக்க வாய்ப்பளிக்க வேண்டுகிறோம். 7. பத்தாம் வகுப்பு முடித்து நேரடியாக ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களிடம் +2 சான்று இல்லை.
பத்தாம் வகுப்பு முடித்து +2விலேயே ஆசிரியர் பயிற்சியினை முடித்தவர்களிடம் ஆசிரியர் பயிற்சி சான்று தனியாக இல்லை. இடைநிலை ஆசிரியர் பணிநியமனத்திற்கு போதிய நாடுநர்கள் இல்லாத நிலையில் SC/ST பின்னடைவுப் பணியிடங்களில் நேரடியாக பட்டம் பெற்றவர்கள் இடைநிலை ஆசிரியர்களாக நியமனம் செய்யப்பட்டனர். அவர்களிடம் இடைநிலை ஆசிரியர் பட்டயச்சான்று இல்லை.
உரிய சான்றுகள் பதிவேற்றம் செய்யும்படி இணையத்தில் கோரும்போது மேற்கண்ட பிரிவினர் பதிவேற்றம் செய்வதில் ஏற்படும் பாதிப்புக்களைக் களைந்திடும் வகையில் இணையத்தில் மாற்றங்கள் செய்திட வேண்டுகிறோம்.
8. மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வில் இருந்து விலக்களிப்பதற்கான வாய்ப்புகளைப் பரிசீலிக்க வேண்டுகிறோம். 9. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் நியமனம் பெற்று 5 ஆண்டுக்குள் தகுதித் தேர்வு தேர்வு முடிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் பணிபுரிபவர்கள் அனைவரும் இச்சிறப்புத் தேர்வில் பங்கேற்றிட அனுமதிக்க வேண்டும். அவர்களில் பலர் தங்களுடைய பணித் தொடர்ச்சி குறித்து நீதிமன்றத்தில் தடையாணை பெற்று பணியினைத் தொடர்ந்து வருகின்றனர்.
10. +2 சான்று, பட்டச்சான்று மதிப்பெண்கள் கோருவதால் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்க EMIS ID /IPHRMS ID மட்டும் பதிவேற்றம் செய்திடக் கோரப்பட்டால் பல்வேறு சிரமங்கள் குறைந்திட வாய்ப்புள்ளது.
11. தொடக்கக்கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள் பலர் மத்திய அரசின் ஆசிரியர் தகுதித்தேர்வான C-TET தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களுக்கு தமிழக அரசின் TET தேர்வில் இருந்து விலக்களிக்க கேட்டுக்கொள்கிறோம்.
CLICK HERE TO DOWNLOAD தமிழக ஆசிரியர் கூட்டணியின் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுகள் PDF
Special TET - ஆசிரியர் சங்க பிரநிதிகள் கூட்டம் - தமிழக ஆசிரியர் கூட்டணியின் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுகள்
CLICK HERE TO DOWNLOAD PDF
Special TET - ஆசிரியர் சங்க பிரநிதிகள் கூட்டம் - தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு முன் வைத்துள்ள ஆலோசனைகள்
CLICK HERE TO DOWNLOAD PDF
Special TET - ஆசிரியர் சங்க பிரநிதிகள் கூட்டம் - ஆரம்பப் பள்ளி கூட்டணி முன் வைத்துள்ள ஆலோசனைகள்
CLICK HERE TO DOWNLOAD PDF
Special TET - ஆசிரியர் சங்க பிரநிதிகள் கூட்டம் - தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு முன் வைத்துள்ள ஆலோசனைகள்
CLICK HERE TO DOWNLOAD PDF
Special TET - ஆசிரியர் சங்க பிரநிதிகள் கூட்டம் - தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் முன் வைத்துள்ள ஆலோசனைகள்
CLICK HERE TO DOWNLOAD PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.