Special TET - ஆசிரியர் சங்க பிரநிதிகள் கூட்டம் - தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு முன் வைத்துள்ள ஆலோசனைகள் - Special TET - Teachers' Union Representatives Meeting - Suggestions put forward by the National Teachers' Union, Tamil Nadu
பொருள்:
ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்து 21-11-25 ஆசிரியர் சங்க நிர்வாகிகளின் கருத்து கேட்பு கூட்டம் - கருத்துகளை அளித்தல் சார்பு. வணக்கம்.
RTE சட்டம் தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட்டு தமிழக அரசின் ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்த அறிவிப்பிற்கு முன்பு (16.11.2012) நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதுவது கட்டாயம் என்ற அறிவிப்பு பொருந்தாது என்பதே தேசிய ஆசிரியர் சங்கம்-தமிழ்நாடு அமைப்பின் நிலைப்பாடு என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.
இந்த நீதிமன்ற தீர்ப்பு விவகாரத்தில் உரிய சட்ட வழிகாட்டுதல்கள் செய்வதற்கு தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு அமைப்பு மற்றும் அமைப்பின் தேசிய அமைப்பான ABRSM மூலம் இந்தியா முழுக்க 500 க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து உடனடியாக தலையிட்டு உரிய வழிகாட்டல்கள் செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் வழியாக மேதகு பாரத பிரதமர் அவர்களுக்கு கடந்த 15.09.2025 அன்று கோரிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளன என்பதையும் நினைவு கூர்கிறோம்.
இவ்விவகாரத்தில் NCTE அமைப்பின் தலைவர். உறுப்பினர்-செயலர் மற்றும் துணைச்செயலாளர்களை கடந்த 7-11-25 அன்று டெல்லியில் சந்தித்து ABRSM அமைப்பு மற்றும் தேசிய ஆசிரியர் சங்கம் முறையிட்டு உரிய விலக்குகள் அளிக்கப்பட NCTE சார்பில் Review Petition செய்ய வேண்டும் அல்லது மத்திய அரசு உரிய சட்ட திருத்தம் கொண்டு வர வழிவகைகளை ஆராய்ந்து பரிந்துரை செய்ய வேண்டும் எனவும் கோரியுள்ளதையும் நினைவு கூர்கிறோம். நீதிமன்றத்தில் / NCTE இடம் வைக்க வேண்டிய கோரிக்கைகள்
1. உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள சீராய்வு மனுவில் NCTE 23.08.2010 d வெளியிட்டுள்ள அறிவிக்கையில் உள்ளவாறு ஏற்கனவே பணியில் உள்ள தொடங்கப்பட்ட ஆசிரியர்களுக்கும் நடைமுறைகள் பணி ஆசிரியர்களுக்கும் தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதற்கு மாறாக தீர்ப்பு உள்ளதையும். தமிழகத்தில் செயல்முறைகள் வெளியிடப்பட்ட நாளாண 16.11.2012 வரை அரசு உதவி பெறும் பள்ளிகளில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களும் பயணடையும் வகையில் உரிய தரவுகளுடன் வாதி ஆவன செய்யப்பட வேண்டும். 2. NCTE அறிக்கை நவம்பர் 2014 ன் படி ஒரே அலகில் பணிபுரிபவர்கள் பதவி உயர்வு பெற ஆசிரியர் தகுதித்தேர்வு தேவையில்லை என உள்ளதையும் ஒன்று முதல் எட்டு வகுப்புகள் வரை ஒரே அலகு (level) என குறிப்பிடப்பட்டு உள்ளதையும் கருத்தில் கொண்டு தொடக்கக்கல்வித்துறையில் ஒன்று முதல் எட்டு வகுப்புகள் வரை பணியாற்றும் ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற ஆசிரியர் தகுதித்தேர்வு தேவையில்லை என்ற நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.
3. NCTE அறிவிப்பிற்கு முன் பள்ளிக்கல்வித்துறையில் பணிநியமனம் பெற்று பணியாற்றி வரும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாநில அளவில் பணிமூப்பு பட்டியல் தயாரித்து. 9 மற்றும் 10 வகுப்புகளில் அனுமதிக்கப்பட்டுள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கேற்ப, பணிமூப்பு அடிப்படையில் 9 மற்றும் 10 வகுப்பாசிரியர்கள் எனக்கருதி அவர்களை பட்டதாரி ஆசிரியர் கிரேடு- என அறிவித்து அவர்கள் பதவி உபர்வு பெற தகுதித்தேர்வு கட்டாயம் இல்லை என்பதை நடைமுறைப்படுத்திட 4. பள்ளிக்கல்வித்துறையில் இடைநிலை ஆசிரியராக 6-8 வகுப்புகளுக்கு பணிநியமனம் பெற்று பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வில் 9 மற்றும் 10 வகுப்புகளில் பணியாற்றிவரும் ஆசிரியர்களுக்கு பணியில் தொடர. பதவி உயர்வு பெற ஆசிரியர் தகுதித்தேர்வு தேவையில்லை என்ற நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.
ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்த முன்மொழிவுகள்
1. பணிபுறியும் ஆசிரியர்களுக்கு உரிய ஆசிரியர் தகுதித்தேர்வை வழக்கமான ஆசிரியர் தகுதித்தேர்வு போல ஆண்டுக்கு இருமுறை நடத்த வேண்டும். 2. ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி மதிப்பெண்களை மற்ற மாநிலங்களில் உள்ளதை போல ஈட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு குறைக்கும் வகையில் உரிய சட்ட வழிமுறைகளை பின்பற்றி நடைமுறைப்படுத்த வேண்டும்.
3. பணிபுரியும் ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வை கணினி வழியில் நடத்திட ஆவன செய்ய வேண்டும் 45 வயதிற்கு மேல் உள்ள ஆசிரியர்கள் பல்வேறு உடல்நலக் குறைபாடுகள் காரணமாக OMR நாளில் தவறுகள் செய்து விடுவதால் உரிய மதிப்பெண்கள் பெறுவது சிரமம் ஆகிறது
ஏற்கனவே ஆசிரியர் தகுதித்தேர்வு அறிவிக்கையில் உள்ளவாறு தான் ஒன்று எழுதுபவர்களுக்கு ஒன்று முதல் ஐந்து வரை வகுப்புகளில் உள்ள பாடப்பகுதிகளில் இருந்து கேள்விகள் பெருமளவில் இடம்பெற வேண்டும் தான் இரண்டு எழுதுபவர்களுக்கு ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை உள் பாடப்பகுதிகளில் இருந்து மட்டுமே பெருமளவில் கேள்விகள் இடம் பெற வேண்டும். அவரவர் பாடங்களில் இருந்து 10 வினாக்கள் இடம் பெற செய்ய வேண்டும்
5. SCERT மூலம் நடத்தப்படும் online வருப்பில் கேள்வி தொகுப்பு வழுங்கலாம்.
6. சிறப்பு ஆசிரியர்கள் உடற்கல்வி ஆசிரியர்கள் தங்களது பணிப்பிரிவில் பணியில் தொடரவும் பதவி உயர்வு பெறவும் NCTE விதி (அட்டவணை இரண்டு தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது அதை தேர்வு வாரிய அறிவிக்கையில் சேர்க்க வேண்டும். மேலும் அவர்கள் வேறு பாடத்தில் பதவி உப பெற தகுதித்தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்.
7. தொடக்கப் பள்ளிகளில் 1-5 போதிக்கும் ஆசிரியர்கள் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உர்வு பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வு நான் ஒன்று. பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் இரண்டு எழுத வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல்கள் அறிவிப்பில் இடம்பெற வேண்டும்.
8.நடுநிலைப்பள்ளிகளில் பட்டதாரி ஆசிtகளாவும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாகவும் பணியாற்றி வரும் ஆசிரியர் அவர்களது பி.லிட் கல்வித்தகுதியை மட்டும் வைத்து தாள் இரண்டு எழுதகண வழிவகைகள் செய்யப்பட வேண்டும்.
9 பத்தாம் வகுப்பு மட்டுமே முடித்து பணியாற்றி வரும் ஆசிரியர்கள், பிலிட் மட்டுமே முடித்து பதவி உயர்வு பெற்று பணியாற்றிவரும் ஆசிரியர்கள் தகுதித்தேர்வு எழுத வழிவகை செய்யப்பட வேண்டும். 10 ஆண்டுகளுக்கு முன்பு பணி நியமணம் பெற்றவர்கள் அவர்கள் பெற்ற தேர்ச்சி மதிப்பெண்களை சதவீத அடிப்படையில் கருத்தில் கொள்ளாமல் அனைவரும் தேர்வு எழுத வழிவகை செய்யப்பட வேண்டும்.
11. ஏற்கனவே அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு தற்போது ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதுவதற்கு வைக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச மதிப்பெண் சதவீதம் போன்றவற்றை கருத்தில் கொள்ளாது அவர்கள் அனைவரும் தகுதித்தேர்வு எழுத வழிவகை செய்யப்பட வேண்டும்.
12. பள்ளிக்கல்வித்துறையில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை பணியாற்றி வரும் இடைநிலை ஆசிரியர்களுக்கு அவர்கள் பணியில் தொடர்வதற்கும். பதவி உயர்வு பெறுவதற்கும் தாள் இரண்டு மட்டும் எழுதினால் போதும் என்பது ஆசிரியர் தேர்வு வாரிய ஆசிரியர் தகுதித்தேர்வு அறிவிக்கையில் இடம் பெற வேண்டும்.
13 ஆசிரியர் தகுதித்தேர்வு கல்வி உளவியல் பாடப்பகுதிக்கு உரிய நூல்களை அரசே வரையறை செய்து வெளியிட வேண்டும்.
14. சிறப்பு ஆசிரியர்கள் உடற்கல்வி ஆசிரியர்கள் தங்களது பணிப்பிரிவில் பணியில் தொடரவும் பதவி உயர்வு பெறவும் NCTE விதி (அட்டவணை இரண்டு) தகுதித்தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது அதை தேர்வு வாரிய அறிவிக்கையில் சேர்க்க வேண்டும்.
15. தனியார் பள்ளிகள் மற்றும் SMC மூலம் பணியாற்றி வரும் இடைநிலை. பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட வேண்டும்.
16. அமைச்சுப் பணியாளர்களுக்கும் பட்டதாரி ஆசிரியர் 2% பதவி உயர்வு கருதி வாய்ப்புகள் அளிக்கப்பட வேண்டும்.
17. கடந்த வாரம் நடைபெற்ற TET தேர்வுகளில், பணியில் உள்ள ஆசிரியர்கள் 50 சதவீதத்துக்கு மேல் பங்கேற்றுள்ளனர். எனவே இத்தேர்வு முடிவுகளை உடன் வெளியிட்டு அதன்பின் தகுதி தேர்வு நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
தேசிய ஆசிரியர் சங்கம்-தமிழ்நாடு சார்பில் வழங்கப்பட்டுள்ள கருத்துகளை பரிசீலனை செய்து ஏற்புடைய கருத்துகளுக்கு செயல்முறை ஆணை வழங்கி பணியில் மூத்த ஆசிரியர்களின் துயர் துடைத்து நிம்மதி அடைந்திட வழிவகை செய்திட வேண்டுகிறோம்.
CLICK HERE TO DOWNLOAD தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு முன் வைத்துள்ள ஆலோசனைகள் PDF
Special TET - ஆசிரியர் சங்க பிரநிதிகள் கூட்டம் - தமிழக ஆசிரியர் கூட்டணியின் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுகள்
CLICK HERE TO DOWNLOAD PDF
Special TET - ஆசிரியர் சங்க பிரநிதிகள் கூட்டம் - தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு முன் வைத்துள்ள ஆலோசனைகள்
CLICK HERE TO DOWNLOAD PDF
Special TET - ஆசிரியர் சங்க பிரநிதிகள் கூட்டம் - ஆரம்பப் பள்ளி கூட்டணி முன் வைத்துள்ள ஆலோசனைகள்
CLICK HERE TO DOWNLOAD PDF
Special TET - ஆசிரியர் சங்க பிரநிதிகள் கூட்டம் - தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு முன் வைத்துள்ள ஆலோசனைகள்
CLICK HERE TO DOWNLOAD PDF
Special TET - ஆசிரியர் சங்க பிரநிதிகள் கூட்டம் - தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் முன் வைத்துள்ள ஆலோசனைகள்
CLICK HERE TO DOWNLOAD PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.