Special TET - ஆசிரியர் சங்க பிரநிதிகள் கூட்டம் - தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் முன் வைத்துள்ள ஆலோசனைகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, November 21, 2025

Special TET - ஆசிரியர் சங்க பிரநிதிகள் கூட்டம் - தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் முன் வைத்துள்ள ஆலோசனைகள்



Special TET - ஆசிரியர் சங்க பிரநிதிகள் கூட்டம் - தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் முன் வைத்துள்ள ஆலோசனைகள்

பொருள்:

பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு நடத்த திட்டமிட்டுள்ள சிறப்பு தகுதி தேர்வில் கீழ்கண்ட காரணிகள் இடம் பெற வேண்டுதல் - சார்ந்து. வணக்கம். உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு சிறப்பு தகுதி தேர்வு நடத்திட தமிழ்நாடு அரசு முடிவு எடுத்துள்ளது.

அதன் அடிப்படையில் அதற்கான அறிவிப்பு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேற்று நண்பகல் வெளியிடப்பட்டது. தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் அந்த அறிவிப்பாணை குறித்து மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றது. இதனால் வெளியிடப்பட்ட சில நிமிடங்களிலேயே அந்த அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டது. இந்த அறிவிப்பில் கட்டாயக் கல்வி சட்டத்தில் குறிப்பிட்டுள்ள அடிப்படை விதிகளே மீறப்பட்டுள்ளது, அதாவது சிறப்பு தகுதித்தேர்வு என்பது கட்டாயக் கல்விச்சட்டம் கொண்டுவருவதற்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி நடத்திட திட்டமிடப்பட்டது, அதாவது அரசு மற்றும் நிதி உதவி பெறும் பள்ளிகளில் (சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் தவிர்த்து] கட்டாயக்கல்வி சட்டம் அமல்படுத்தியதற்கு பிறகு தகுதித்தேர்வு முடித்தவர்களே பணியில் நியமிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் தனியார் பள்ளிகளிலும் தகுதித்தேர்வு முடித்த ஆசிரியர்களே நியமிக்கப்படவேண்டும் என்று சட்டம் தெளிவாக சொல்லியிருப்பினும் அது இதுவரை முழுமையாக தனியார் பள்ளிகளில் கடைபிடிக்கப்படுவதில்லை. பெரும்பாலும் தகுதித்தேர்வு முடிக்காத ஆசிரியர்களே தனியார் பள்ளிகளில் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கும் சேர்த்து சிறப்பு தகுதித்தேர்வு என்று அறிவிப்பு வெளியிட்டது அடிப்படை விதிமீறல். அதாவது 1.9.2025 வரை பணியிலுள்ள ஆசிரியர்கள் இத்தகுதித்தேர்வு எழுதலாம் என்பது (குறிப்பாக தனியார் பள்ளி ஆசிரியர்களும்) அடிப்படை விதி மீறலாகும்.

ளுக்கும் தரித்து கப்பு வளயிட்ட்டுன் அதாயது இந்தகதர் விழுகள சில திருத்தங்களுடன் பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு நடத்திட மீண்டும் அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். சிறப்புஅடிப்பாடவிதி பிண ணிட்மை ஆசிரியர்களுக்கு அந்த அறிவிப்பில் கீழ்கண்ட காரணிகள் இடம் பெற வழிவகை செய்யுமாறு தங்களை அன்புடன் வேண்டுகிறோம்.

SYபிட வேண்டும் என்று ஆசிரியர் தகுதித் தேர்வு பொறுத்தவரை தேர்ச்சி மதிப்பெண்கள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகின்றது அதன் அடிப்படையில் ஆந்திர பிரதேசம், உத்தர பிரதேசம், பீகார், தெலுங்கானா மற்றும் கேரளா போன்ற மாநிலங்கள் தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப தேர்ச்சிக்கான விழுக்காடுகளை குறைத்து வைத்திருக்கிறது.

அதுபோல தமிழ்நாட்டிலும் ஆசிரியர்களுக்கு நடத்தப்பட உள்ள சிறப்பு தகுதி தேர்விலும் தேர்ச்சிக்கான மதிப்பெண்களை குறைப்பது குறித்து அறிவிப்பு வெளியிட வேண்டும். பாடத்திட்டத்தை பொறுத்தவரை நீண்ட நாட்களாக பணியில் உள்ள ஆசிரியர்கள் என்பதை கருத்தில் கொண்டு அவர்கள் பாடத்தில் மொத்தம் 150 வினாக்களில் 90 வினாக்கள் இருப்பது போல் வினாத்தாள் மாற்றி அமைக்கப்பட வேண்டும்.

பணியில் உள்ள அரசு மற்றும் நிதி உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கென்று (அனைத்து வகை அரசு துறையிலும்) பிரத்தியேகமாக சிறப்பு தகுதித் தேர்வு நடத்திடும் வகையில் அறிவிப்பு வெளியிட வேண்டும்.

உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அனைவருக்கும் தகுதித் தேர்வு நடத்த வேண்டும் என்று நீங்கள் விரும்பினாலும் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியருக்கு என்று பிரத்தியேகமாக தனியார் பள்ளி ஆசிரியர் சிறப்பு தகுதி தேர்வு நடத்திட வலியுறுத்திகிறோம்.

பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு தேர்வு எழுத அவர்கள் பாடத்தில் குறைந்தபட்ச மதிப்பெண் என்பதை விலக்கு அளித்து தேர்ச்சி பெற்றாலே போதும் என்ற அறிவிப்பை வெளியிட வேண்டும். மேலுQual degrine மூலம் பட்டதாரி ஆசிரியர்களுக்கு அந்த தேர்வில் விண்ணப்பிக்க இயலவில்லை. எனவே அவர்களும் தேர்வெழுத வாய்ப்பளிக்க வேண்டும்.

கேரளா அரசு விதிவிலக்கு அளித்தது போல NET/ SET/M.Phil/Phd முடித்த ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும்.

7. ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) மூலம் நியமனப் பெற்ற ஆசிரியர்களுக்கு சிறப்பு TET தேர்வு தேர்ச்சி பெறுவதிலிருந்து விலக்களிக்க வேண்டும்.

8. மாற்றுத் திறனாளி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களிக்க வேண்டும்.

மேற்கண்ட எங்களின் கோரிக்கைகளை பரிசீலித்து அடுத்து வரும் அறிவிப்பில் அவை இடம் பெற செய்து ஆசிரியர் நலன் காக்க வேண்டுமென அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

என்றென்றும் நன்றியுடன்

CLICK HERE TO DOWNLOAD - தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் முன் வைத்துள்ள ஆலோசனைகள் PDF

Special TET - ஆசிரியர் சங்க பிரநிதிகள் கூட்டம் - தமிழக ஆசிரியர் கூட்டணியின் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுகள்
CLICK HERE TO DOWNLOAD PDF

Special TET - ஆசிரியர் சங்க பிரநிதிகள் கூட்டம் - தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு முன் வைத்துள்ள ஆலோசனைகள்
CLICK HERE TO DOWNLOAD PDF

Special TET - ஆசிரியர் சங்க பிரநிதிகள் கூட்டம் - ஆரம்பப் பள்ளி கூட்டணி முன் வைத்துள்ள ஆலோசனைகள்
CLICK HERE TO DOWNLOAD PDF

Special TET - ஆசிரியர் சங்க பிரநிதிகள் கூட்டம் - தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு முன் வைத்துள்ள ஆலோசனைகள்
CLICK HERE TO DOWNLOAD PDF

Special TET - ஆசிரியர் சங்க பிரநிதிகள் கூட்டம் - தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் முன் வைத்துள்ள ஆலோசனைகள்
CLICK HERE TO DOWNLOAD PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.