நாளை 30.01.2026 காலை (11AM) பள்ளிகளில் எடுக்க வேண்டிய உறுதிமொழி - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, January 29, 2026

நாளை 30.01.2026 காலை (11AM) பள்ளிகளில் எடுக்க வேண்டிய உறுதிமொழி - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

நாளை 30.01.2026 காலை (11AM) பள்ளிகளில் எடுக்க வேண்டிய உறுதிமொழி - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை -600006.

பொருள் பள்ளிக் கல்வி - உறுதிமொழி - தீண்டாமையை ஒழிக்க 30.01.2026 அன்று உறுதிமொழி மேற்கொள்ளக் கோருதல் - தொடர்பாக.

பார்வை

அரசு கடித எண். 123/Genl-1/2026-20, பொதுத்துறை, நாள்.29.01.2026.

(நகல்) தகவலுக்காகவும் தக்க நடவடிக்கைக்காகவும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்படுகிறது.

இணைப்பு உறுதிமொழி தீண்டாமையை ஒழிக்க மேற்கொள்ளும் உறுதி மொழி

இந்திய அரசியலமைப்பின்பால் இடைவிடாத, உளமார்ந்த பற்றுள்ள இந்தியக் குடிமகன் குடிமகள் ஆகிய நான், நமது அரசியலமைப்பின்படி தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது என்பதை அறிவேன். தீண்டாமையை அடிப்படையாகக் கொண்டு, எவர்மீதும் தெரிந்தோ, தெரியாமலோ சமூக வேற்றுமையை மனம், வாக்கு, செயல் என்ற எந்த வகையிலும் கடைப்பிடிக்கமாட்டேன் என்று இதனால் உளமார உறுதியளிக்கிறேன். அரசியலமைப்பின் அடிப்படைக் கருத்திற்கிணங்க, சமய வேறுபாடற்ற சுதந்திர சமுதாயத்தை உருவாக்குவதில் நேர்மையுடனும், உண்மையுடனும் பணியாற்றுவது எனது கடமையாகும் என்பதையும் உணர்வேன். இந்திய அரசியலமைப்பின்பால் எனக்குள்ள முழுப்பற்றிற்கு இது என்றென்றும் எடுத்துக்காட்டாக விளங்குமென்றும் இதனால் உளமார உறுதியளிக்கிறேன்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.