மாணவர்களுக்கு நிதி உதவி 11 கோடி ரூபாய் ஒதுக்கீடு 11 crore rupees allocated for financial assistance to students
மாணவர்களுக்கு நிதி உதவி 11 கோடி ரூபாய் ஒதுக்கீடு
அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள் ளிகளில், 1 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின், தந்தை அல்லது தாய் விபத்தில் உயிரிழந்தாலோ, நிரந் தர முடக்கம் அடைந் தாலோ அம்மாணவர் களுக்கு, அரசு சார்பில் நிதி உதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப் படுகிறது.
இந்த திட்டத்தின் கீழ், பாதிக்கப்பட்ட மாணவ, மாணவியருக்கு தலா ரூ.50,000 அல்லது ரூ.75,000 வரை நிதி உதவி வழங்கப்ப டுகிறது.
இந்த தொகை, அரசு நிதி நிறுவனங்களில் வைப்பு தொகையாக செலுத்தப்பட்டு, அதி லிருந்து கிடைக்கும் வட்டி மற்றும் முதிர்வு தொகையை, மாணவர் களின் கல்வி மற்றும்
பராமரிப்பிற்காக பயன் படுத்த அறிவுறுத்தப் பட்டுள்ளது.
நடப்பு கல்வியாண் டில் (2025-2026), ரூ.11 கோடி 17 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. மாவட்ட முதன்மை கல்வி அலு வலர்கள் வாயிலாக, இதுவரை மாநிலம் முழுவதும் 810 விண் ணப்பங்கள் பெறப் பட்டுள்ளன. இதற்காக ரூ.5 கோடி 94 லட்சம் மதிப்பிலான காப்பீட்டு பத்திரங்கள் வழங்கப் பட்டுள்ளன.
இன்னும் ரூ.5 கோடி 23 லட்சம் நிதி, மீதம் உள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. எனவே, மாவட்ட அளவில் நிலு வையில் உள்ள விண் ணப்பங்களை, உடன டியாக அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க, பள்ளிக்கல்வி இயக்குநர கம் உத்தரவிட்டுள்ளது.
Wednesday, October 22, 2025
New
மாணவர்களுக்கு நிதி உதவி 11 கோடி ரூபாய் ஒதுக்கீடு
students news
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.