பள்ளி மாணவர்களின் ஆதார் விபரம் புதுப்பிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, October 22, 2025

பள்ளி மாணவர்களின் ஆதார் விபரம் புதுப்பிப்பு



பள்ளி மாணவர்களின் ஆதார் விபரம் புதுப்பிப்பு Update of Aadhaar details of school students

கோவையில் அனைத்து பள்ளிகளில் பயிலும், மாணவர்களுக் கான ஆதார் விபரங் களை புதுப்பிக்கும் பணி நடக்கிறது.

மாவட்டம் முழு வதும் சுமார் 30,000 மாணவர்களின் ஆதார் தகவல்களைப் புதுப் பிக்க வேண்டியுள்ளது. குறிப்பாக, 5 முதல் 7 வயது வரையிலும், 15 முதல் 17 வயது வரை யிலும் உள்ள மாணவர் களுக்கு, ஆதார் எண் புதுப்பிப்பது கட்டாய மாக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இந்த பணிகள், 'எல்காட் நிறு வனம் வாயிலாகவும், இல்லம் தேடி கல்வித் தன்னார்வலர்களைக் கொண்டும் நடத்தப் பட்டன. இந்த கல்வி யாண்டில், அஞ்சல் துறை மூலம் பணிகளை மேற்கொள்ள பள்ளிக் கல்வித்துறை அறிவு றுத்தியிருந்தது. அதன் படி, அஞ்சல் துறை பள்ளிகளில் பணிகளை தொடங்கி நடத்தி வருகிறது.

துணி வணிகர் சங்க அரசு பெண்கள் மேல்நி லைப்பள்ளி, ஒண்டிப் புதூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட, பல அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களின் ஆதார் விபரம் புதுப்பிக்கப் பட்டுள்ளது.

அதிக மாணவர்களின் விபரங்களை புதுப்பிக்க வேண்டியிருப்பதால், தற்போது 'டேக் டிவி என்ற ஏஜென்சி மூலமாகவும், பணிகள் மேற்கொள்ளப்படு கின்றன.

முன்னதாக, தேவை அதிகமுள்ள பள்ளிக ளுக்கு, முன்னுரிமை அடிப்படையில் பணி களை தொடங்க அறிவு றுத்தப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் மட்டுமின்றி திருப்பூர், பொள்ளாச்சி ஆகிய பகுதிகளிலும், மாண வர்களின் ஆதார் விபரங்களை புதுப்பிக் கும் பணிகளை, இந்த ஏஜென்சி தொடங்கி உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.