பொதுத்தேர்வு பணியில் கவனத்துடன் செயல்படணும் - முதன்மை கல்வி அலுவலர் அறிவுறுத்தல் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, February 21, 2026

பொதுத்தேர்வு பணியில் கவனத்துடன் செயல்படணும் - முதன்மை கல்வி அலுவலர் அறிவுறுத்தல்



பொதுத்தேர்வு பணியில் கவனத்துடன் செயல்படணும் - முதன்மை கல்வி அலுவலர் அறிவுறுத்தல்

நமது நிருபர் பொதுத்தேர்வு பணி யில் ஈடுபடும் கண்கா ணிப்பாளர், அறை கண் காணிப்பாளர், பறக்கும் படையினர் மிகுந்த கவ னமுடன் இருக்க வேண் டும். சிறு தவறுகளுக்கு கூட இடமளிக்காமல் பணி யாற்ற வேண்டும்.என, முதன்மை கல்வி அலுவ லர் புனித அந்தோணியம் மாள் அறிவுறுத்தினார்.

மார்ச் 2ல் பிளஸ் பொதுத்தேர்வு துவங்கு கிறது. இதற்காக, மாவட் டம் முழுவதும், 9 தேர்வு மையங்கள் அமைக்கப்பட் டுள்ளன. திருப்பூர் மாவட் டத்தில், 26 ஆயிரத்து, 461 பேர் தேர்வெழுத தயாராகி வருகின்றனர்.

பொதுத்தேர்வுக்கு இன்னும் பத்து நாட்கள் மட்டுமே இருப்பதால், தேர்வுக்கான ஆயத்த பணிகள், ஏற்பாடு தொடர் பான ஆலோசனை கூட் டம், கே.செட்டிபாளை யம். விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. மாவட்ட கல்வி அலுவலர் காளிமுத்து முன் னிலை வகித்தார்.

முதன்மை கல்வி அலுவ வர் புனித அந்தோணியம் மாள் தலைமை வகித்து பேசியதாவது:

பொதுத்தேர்வு பணி யில் ஈடுபடும் அலுவலர், ஆசிரியர்கள் தங்களுக்கான பணிகளை செவ்வனே செய்ய வேண்டும். குறிப்பாக, கண்கா ணிப்பாளர், அறை கண் காணிப்பாளர், வழித்தட அலுவலர், வினாத்தான், விடைத்தாள் எடுத்தும் செல்லும் அலுவலர்கள், திடீர் ஆய்வு பணியில் ஈடுபடும் பறக்கும் படை யினர் கவனமுடன் இருக்க வேண்டும். சிறு தவறுக ளுக்கு கூட இடமளிக்கா மல் பணியாற்ற வேண் டும்.

பொதுத்தேர்வு பணி யில் ஈடுபடும் பொறுப்பு ஆசிரியர்கள், முன்னதாக தங்களுக்கு பணி ஒதுக் கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையத்துக்கு செல் லுங்கள்.

அங்கு அனைத்து ஏற்பா டுகளும் தயாராக உள்ளதா, ஏதேனும் மாறுதல் செய்ய வேண்டி இருக்குமா என் பதை தெரிந்து கொள்ளுங் கள். திட்டமிட்டு செய லாற்றினால் தான் தவறுகள் நேரிடாது.

இவ்வாறு, அவர் பேசி வார்.

முன்னதாக, பொதுத் தேர்வு நடக்கும் மையங் களில் முதன்மை கண் காணிப்பாளர். அறை கண்காணிப்பாளர், வழித் தட அலுவலர், வினாத் நாள் கட்டுக்காப்பு மைய செயல்பாடுகள், தேர்வு முடிந்த பின் விடைத்தாள் களை தக்க பாதுகாப்புடன் மாவட்ட விடைத்தாள் திருத்தும் எடுத்துச் செல்வது உன் ளிட்ட பணி குறித்து விவா திக்கப்பட்டது. மையத்துக்கு கலெக்டர், முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், அந்தந்த தாலுகா வாரியாக அமைக் கப்பட்டுள்ள குழுக்கள் பணி, தேர்வு நாளில், தேர்வு முடிந்த பின் அவர்களது பணிகள் என்ன என்பது குறித்து விரிவான அறிவுறுத் தல் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.