போலி ஆவணம் தயாரித்து ரூ.32 லட்சம் மோசடி ஆசிரியர் சங்க செயலர்கள் 2 பேருக்கு 'காப்பு'
ஆசிரியர்கள், 20 பேர் பெயரில் போலி ஆவணம் தயாரித்து, 32 லட்சம் 3 ரூபாய் மோசடி செய்த விவகாரத்தில், ஆசிரியர் சங்க தற்போதைய செயலர், ஓய்வு பெற்ற செயலர் கைது செய்யப் பட்டனர்.
சேலம் மாவட்டம் அயோத்தியாப் பட்டணம் ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலை ஆசிரியர்கள் கூட்டுறவு சிக் கன நாணய சங்க உறுப்பினர்கள் சிலர், சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில், சமீபத்தில் அளித்த மனு: எங்கள் சங்கத்தில், 2017 முதல், 2022 வரை கணக்குகள் ஆய்வு செய் யப்பட்டது. அதில் தற்போது, சங்க செயலராக உள்ள, காரிப்பட்டியை சேர்ந்த செல்வம், 57, டி. பெருமா பாளையத்தை சேர்ந்த, ஓய்வு பெற்ற செயலர் அசோகன், 70, உள்பட சிலர் சேர்ந்து,20 ஆசிரியர்கள் பெயரில் போலி ஆவணம் தயாரித்து, பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
டாமல் முறையாக வட்டி செலுத்த வேண் டிய பணத்தையும், கணக்கில் காட் மோசடி செய்துள்ளனர். அதன்படி, 32 லட்சம் ரூபாய் மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது. முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டு கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டி ருந்தது. அதன்படி, எஸ்.பி., கிங்சிலின் உள்ளிட்ட போலீசார் விசாரித்ததில், 32 லட்சம் ரூபாய் மோசடி செய்தி ருப்பது தெரியவந்தது.இதனால் அசோகன்,செல்வம் ஆகியோரை, நேற்று கைது செய்தனர். மேலும் இந்த மோசடியில் தொடர்புடைய சிலரை தேடுகின்றனர்
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.