Teachers....!!!! Attention.. The incident of serving sweets in the school has led to the transfer of the assistant head teacher. - தலைமையாசிரியர்களே...!!!! ஆசிரியர்களே....!!!! உஷார்..!!!
தலைமையாசிரியர்களே...!!!! ஆசிரியர்களே....!!!!அரசியல் தலைவர்கள் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக , அந்தந்த கட்சிக்காரர்கள் வந்து குழந்தைகளுக்கு பரிசுப்பொருளோ , இனிப்போ வழங்கினால் , சிந்தித்து செயல்படவும்.
மணப்பாறை அருகே அரசுப் பள்ளியில் அரசியல் பிரமுகர் இனிப்பு வழங்கிய விவகாரம் தொடர்பாக உதவி தலைமை ஆசிரியை வெள்ளிக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
திருச்சி மாவட்டம், மணப் பாறை அருகே இடையப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இங்கு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி, ஓ. பன் னீர்செல்வத்தின் ஆதரவாளர் நேதாஜி என்பவர் இனிப்புவழங்கி யுள்ளார். இந்த சம்பவம் தொடர் பான காணொலி சமூக வலைத எங்களில் வெளியானது. இது தொடர்பாக சிலர் நட வடிக்கை எடுக்க பள்ளிக் கல்வித் துறைக்கு பரிந்துரைத்தனர். இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில், பள்ளித் தலைமை ஆசிரியர் பணி நிமித்தமாக திருச்சி சென்றிருந்த நிலையில், பணியிலிருந்த உதவி தலைமை ஆசிரியை அமுதா, பள்ளியில் அரசியல் கட்சியினர் இனிப்பு வழங்க அனுமதியளித்தா ராம்.
இது விதிமுறை மீறல் எனவும் துறை ரீதியான நடவடிக்கையாக, உதவி தலைமை ஆசிரியர் பணி யிட மாற்றம் செய்யப்பட்டார். மேலும், அந்த பள்ளியின் 5 ஆசி ரியர்களுக்கு இது குறித்து விளக் கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப் பட்டிருப்பதாக பள்ளிக்கல்வித் துறை அலுவலர்கள் தெரிவித்துள் ளனர் பள்ளியில் இனிப்பு வழங்கிய விவகாரம் உதவி தலைமை ஆசிரியை பணியிட மாற்றம்
👇👇👇
CLICK HERE TO வீடியோ செய்தி
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.